Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   திருவரங்கத்தமுதனார்  
இராமானுச நூற்றந்தாதி  

Songs from 2791 to 2898   ( )
Pages:    1    2  3  4  5  6  Next

தோற்றோம்மடநெஞ்சம் எம்பெருமான்நாரணற்கு | எம் 
ஆற்றாமைசொல்லி அழுவோமைநீநடுவே | 
வேற்றோர்வகையில்கொடிதாய் எனையூழி | 
மாற்றாண்மைநிற்றியோ? வாழிகனையிருளே![2791.0]

இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியேபோய் | 
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால் | 
உருளும்சகடம் உதைத்தபெருமானார் | 
அருளின்பெருநசையால் ஆழாந்துநொந்தாயே?[2792.0]

நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த | 
நந்தாவிளக்கமே! நீயுமளியத்தாய் | 
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான் | 
அந்தாமத்தண் துழாய் ஆசையால்வேவாயே?[2793.0]
மேலே செல்

வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த | 
ஓவாதிராப்பகல் உன்பாலேவீழ்த்தொழிந்தாய் | 
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த | 
மூவாமுதல்வா! இனியெம்மைச்சோரேலே.[2794.0]

சோராதஎப்பொருட்கும் ஆதியாம்சோதிக்கே | 
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன் | 
ஓராயிரஞ்சொன்ன அவற்றுளிவைப்பத்தும் | 
சோரார்விடார்கண்டீர் வைகுந்தம்திண்ணனவே.[2795.0]

திண்ணன்வீடு முதல்முழுதுமாய் | 
எண்ணின்மீதியன் எம்பெருமான் | 
மண்ணும்விண்ணுமெல்லாம் உடனுண்ட | நம் 
கண்ணன்கண்ணல்லது இல்லையோர்கண்ணே.[2796.0]
மேலே செல்

ஏ! பாவம்பரமேஏழுலகும் | 
ஈபாவஞ்செய்து அருளாலளிப்பாரார்? | 
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய் | 
கோபாலகோளரி ஏறன்றியே.[2797.0]

ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை | 
வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து | 
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட | 
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே.[2798.0]

தேவுமெப்பொருளும்படைக்க | 
பூவில் நான்முகனைப்படைத்த | 
தேவனெம்பெருமானுக்கல்லால் | 
பூவும்பூசனையும்தகுமே?[2799.0]
மேலே செல்

தகுஞ்சீர்த் தன்தனிமுதலினுள்ளே | 
மிகுந்தேவும் எப்பொருளும்படைக்க | 
தகுங்கோலத் தாமரைக்கண்ணனெம்மான் | 
மிகும்சோதி மேலறிவார்யவரே?[2800.0]

யவரும்யாவையும் எல்லாப்பொருளும் | 
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற | 
பவர்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி | 
அவர்எம்மாழி அம்பள்ளியாரே.[2801.0]

பள்ளியாலிலை ஏழுலகும்கொள்ளும் | 
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான் | 
உள்ளுளார்அறிவார்? அவன்தன் | 
கள்ளமாய மனக்கருத்தே.[2802.0]
மேலே செல்

கருத்தில்தேவும் எல்லாப்பொருளும் | 
வருத்தித்த மாயப்பிரானையன்றி | ஆரே 
திருத்தித் திண்ணிலைமூவுலகும் | தம்முள் 
இருத்திக்காக்கு மியல்வினரே.[2803.0]

காக்குமியல்வினன் கண்ணபெருமான் | 
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே | 
வாய்த்ததிசைமுகன் இந்திரன்வானவர் | 
ஆக்கினான் தெய்வவுலகுகளே.[2804.0]

கள்வா! எம்மையும் ஏழுலகும் | நின் 
னுள்ளேதோற்றிய இறைவ! என்று | 
வெள்ளேறன்நான்முகன் இந்திரன்வானவர் | 
புள்ளூர்தி கழல்பணிந்தேத்துவரே.[2805.0]
மேலே செல்

ஏத்தவேழுலகுங் கொண்டகோலக் 
கூத்தனை | குருகூர்ச்சடகோபன்சொல் | 
வாய்த்தவாயிரத்துள் இவைபத்துடன் | 
ஏத்தவல்லவர்க்கு இல்லையோரூனமே.[2806.0]

ஊனில்வாழுயிரே! நல்லைபோஉன்னைப்பெற்று | 
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான் | 
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம் | 
தேனும்பாலும்நெய்யும் கன்னலும்அமுதுமொத்தே.[2807.0]

ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய! | 
ஒத்தாயெப்பொருட்கும் உயிராய் | என்னைப்பெற்ற 
அத்தாயாய்த்தந்தையா அறியாதன வறிவித்த | 
அத்தா! நீசெய்தன அடியேனறியேனே.[2808.0]
மேலே செல்

அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்புசெய்வித்து | 
அறியாமாமாயத்து அடியேனைவைத்தாயால் | 
அறியாமைக்குறளாய் நிலம்மாவலி! மூவடியென்று | 
அறியாமைவஞ்சித்தாய் எனதாவியுள்கலந்தே.[2809.0]

எனதாவியுள்கலந்த பெருநல்லுதவிக்கைம்மாறு | 
எனதாவிதந்தொழிந்தேன் இனிமீள்வதென்பதுண்டே? | 
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்! | 
எனதாவியார்? யான்ஆர்? தந்தநீகொண்டாக்கினையே.[2810.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org