Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   மதுரகவியாழ்வார்  
கண்ணிநுண்சிறுத்தாம்பு  

Songs from 937 to 947   ( )

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை 
அவிதிதவிஷயாந்தரஸ்ஸாடாரே 
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக: 
அபிசகுணவஸாத்ததேகஸேஷீ 
மதுரகவிர்ஹ்ருதயேமமாவிரஸ்து. 



[937.1]

வேறொன்றும்நானறியேன் வேதம்தமிழ்செய்த |
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறு | எங்கள் 
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் | எம்மை 
ஆள்வாரவரேயரண்.



[937.2]

கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் 
பண்ணியபெருமாயன் | என்னப்பனில் | 
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் | 
அண்ணிக்கும்அமுதூறும் என்னாவுக்கே. 



[937.0]

நாவினால்நவிற்று இன்பமெய்தினேன் | 
மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே | 
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி | 
பாவினின்னிசை பாடித்திரிவனே. 



[938.0]

திரிதந்தாகிலும் தேவபிரானுடை | 
கரியகோலத் திருவுருக்காண்பன்நான் | 
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா 
ளுரியனாய் |அடியேன்பெற்ற நன்மையே.



[939.0]
மேலே செல்

நன்மையால்மிக்க நான்மறையாளர்கள் | 
புன்மையாகக் கருதுவராதலின் | 
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும் 
தன்மையான் | சடகோப னென்நம்பியே.



[940.0]

நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும் | 
நம்பினேன் மடவாரையும்முன்னெல்லாம் | 
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக் 
கன்பனாய் | அடியேன் சதிர்த்தேனின்றே.



[941.0]

இன்றுதொட்டும் எழுமையும்எம்பிரான் | 
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான் | 
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி | 
என்றுமென்னை இகழ்விலன்காண்மினே.



[942.0]
மேலே செல்

கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் | 
பண்டைவல்வினை பாற்றியருளினான் | 
எண்டிசையும் அறியவியம்புகேன் | 
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.



[943.0]

அருள்கொண்டாடும் அடியவரின்புற | 
அருளினான் அவ்வருமறையின்பொருள் | 
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான் | 
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.



[944.0]

மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் 
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான் | 
தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு | ஆள் 
புக்ககாதல் அடிமைப்பயனன்றே.



[945.0]
மேலே செல்

பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் 
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான் | 
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி | 
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே.  



[946.0]

அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் 
அன்பன் | தென்குருகூர் நகர்நம்பிக்கு | 
அன்பனாய் மதுரகவிசொன்னசொல் 
நம்புவார்பதி | வைகுந்தம் காண்மினே. 



[947.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org