Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   தொண்டரடிப்பொடியாழ்வார்  
திருப்பள்ளி எழுச்சி  

Songs from 917 to 926   ( )

திருமலையாண்டான் அருளியது 
தமேவமத்வாபரவாஸுதேவம் 
ரங்கேசயம்ராஜவதர்ஹணீயம்
ப்ராபோதகீம்யோக்ருதஸூக்திமாலாம் 
பக்தாங்க்ரிரேணும்பகவந்தமீடே. [917.1]

திருவரங்கப்பெருமாளறையர் அருளியது 
மண்டங்குடியென்பர் மாமரையோர் மன்னியசீர் 
தொண்டரடிப்பொடிதொன்னகரம் | - வண்டு 
திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானைப் | பள்ளி 
யுணர்த்தும்பிரானுதித்தவூர். [917.2]

கதிரவன்குணதிசைக் சிகரம்வந்தணைந்தான் 
கனவிருளகன்றது காலையம்பொழுதாய் | 
மதுவிரிந்தொழுகினமாமலரெல்லாம் 
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி | 
எதிர்திசைநிறைந்தனரிவரொடும்புகுந்த 
இருங்களிற்றீட்டமும்பிடியொடுமுரசும் | 
அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும் 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. [917.0]

கொழுங்கொடிமுல்லையின்கொழுமலரணவிக் 
கூர்ந்ததுகுணதிசைமாருதமிதுவோ | 
எழுந்தனமலரணைப் பள்ளிகொள்ளன்னம் 
ஈன்பனிநனைந்ததமிருஞ்சிறகுதறி 
விழுங்கியமுதலையின்பிலம்புரைபேழ்வாய் 
வெள்ளெயிறுறவதன்விடத்தனுக்கனுங்கி | 
அழுங்கியவானையினருந்துயர்கெடுத்த 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.[918.0]
மேலே செல்

சுடரொளிபரந்தனசூழ்திசையெல்லாம் 
துன்னியதாரகைமின்னொளிசுருங்கி | 
படரொளிபசுத்தனன்பனிமதியிவனோ 
பாயிறுளகன்றது, பைம்பொழில்கமுகின் | 
மடலிடைக்கீறிவண்பாளைகள்நாற 
வைகறைகூர்ந்ததுமாருதமிதுவோ | 
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.[919.0]

மேட்டிளமேதிகள்தளைவிடுமாயர்கள் 
வேய்ங்குழலோசையும்விடைமணிக்குரலும் | 
ஈட்டியவிசைதிசைபரந்தனவயலுள் 
இருந்தினசுரும்பினம், இலங்கையர்குலத்தை | 
வாட்டியவரிசிலைவானவரேறே! 
மாமுனிவேள்வியைக்காத்து | அவபிரதம் 
ஆட்டியவடுதிறல்அயோத்தியெம்மரசே! 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.[920.0]

புலம்பினபுட்களும்பூம்பொழில்களின்வாய் 
போயிற்றுக்கங்குல்புகுந்ததுபுலரி | 
கலந்ததுகுணதிசைகனைகடலரவம் 
களிவண்டுமிழற்றியகலம்பகம்புனைந்த | 
அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான் 
அமரர்கள் புகுந்தனராதலிலம்மா! | 
இலங்கையர்கோன்வழிபாடுசெய்கோயில் 
எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.[921.0]
மேலே செல்

இரவியர்மணிநெடுந்தேரொடுமிவரோ! 
இறையவர்பதினொருவிடையருமிவரோ | 
மருவியமயிலினனறுமுகனிவனோ 
மருதரும்வசுக்களும்வந்துவந்தீண்டி | 
புரவியோடாடலும்பாடலும் தேரும் 
குமரதண்டம்புகுந்தீண்டியவெள்ளம் | 
அருவரையனையநின்கோயில்முன்னிவரோ 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.[922.0]

அந்தரத்தமரர்கள்கூட்டங்களிவையோ 
அருந்தவமுனிவரும்மருதருமிவரோ | 
இந்திரனானையும்தானும்வந்திவனோ 
எம்பெருமானுன்கோயிலின்வாசல் | 
சுந்தரர்நெருக்கவிச்சாதரர்நூக்க 
இயக்கரும்மயங்கினர்திருவடிதொழுவான் | 
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.[923.0]

வம்பவிழ்வானவர்வாயுறைவழங்க 
மாநிதிகபிலையொண்கண்ணாடிமுதலா | 
எம்பெருமான் படிமக்கலம்காண்டற்கு 
ஏற்பனவாயினகொண்டுநன்முனிவர் | 
தும்புருநாரதர்புகுந்தனரிவரோ 
தோன்றினனிரவியும்துலங்கொளிபரப்பி | 
அம்பரதலத்தில்நின்றகல்கின்றதிருள்போய் 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.[924.0]
மேலே செல்

ஏதமில்தண்ணுமையெக்கம்மத்தளி 
யாழ்குழல்முழவமோடிசைதிசைகெழுமி | 
கீதங்கள்பாடினர்கின்னரர்கெருடர்கள் 
கந்தருவரவர்கங்குலுளெல்லாம் | 
மாதவர்வானவர்சாரணரியக்கர் 
சித்தரும்மயங்கினர்திருவடிதொழுவான் | 
ஆதலிலவர்க்குநாளோலக்கமருள 
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. [925.0]

கடிமலர்க்கமலங்கள்மலர்ந்தனவிவையோ 
கதிரவன்கனைகடல்முளைத்தனன்னிவனோ |
துடியிடையார்சுரிகுழல்பிழிந்துதறித் 
துகிலுடுத்தேறினர்சூழ்புனலரங்கா! | 
தொடையொத்ததுளவமும்கூடையும்பொலிந்து 
தோன்றியதோள்தொண்டரடிப்பொடியென்னு
மடியனை | அளியனென்றருளியுன்னடியார்க்
காட்படுத்தாய்! பள்ளிஎழுந்தருளாயே. [926.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org