Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   பெரியாழ்வார்  
திருமொழி  

Songs from 13 to 473   ( )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10

வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் |
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் |
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட | 
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே.[13.0]

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் |
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார் | 
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று |
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. [14.0]

பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் | 
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் |
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் | திரு 
வோணத்தான் உலகாளுமென்பார்களே. [15.0]
மேலே செல்

உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் |
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் |
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து | எங்கும் 
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.[16.0]

கொண்டதாளுறி கோலக்கொடுமழு |
தண்டினர் பறியோலைச்சயனத்தர் |
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர் |
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். [17.0]

கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் |
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் | 
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட |
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. [18.0]
மேலே செல்

வாயுள்வையகம்கண்ட மடநல்லார் |
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் | 
பாயசீருடைப் பண்புடைப்பாலகன் |
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.[19.0]

பத்துநாளும்கடந்த இரண்டாநாள் |
எத்திசையும் சயமரம்கோடித்து |
மத்தமாமலை தாங்கியமைந்தனை | 
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. [20.0]

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் |
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் |
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் |
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். [21.0]
மேலே செல்

செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் |
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை |
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த | இப் 
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே.  [22.0]

சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி |
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த |
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் |
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்துகாணீரே.  [23.0]

முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் |
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் | எங்கும் 
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் |
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே. [24.0]
மேலே செல்

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை |
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை |
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் |
கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே. [25.0]

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண |
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் | 
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் |
முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே. [26.0]

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு |
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை |
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் |
குறங்குகளைவந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே. [27.0]
மேலே செல்

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை |
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் |
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் |
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே. [28.0]

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை |
பருங்கிப் பறித்துக் கொண்டோடும் பரமன்தன் |
நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும் |
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்துகாணீரே. [29.0]

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து |
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் | 
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய |
உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர்! வந்துகாணீரே. [30.0]
மேலே செல்

அதிரும்கடல்நிறவண்ணனை | ஆய்ச்சி 
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த |
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த |
உதரம்இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்துகாணீரே. [31.0]

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து | அங்கு 
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை |
குருமாமணிப்பூண் குலாவித்திகழும் | 
திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே. [32.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org