Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   ஆண்டாள்  
நாச்சியார் திருமொழி  

Songs from 504 to 646   ( )
Pages:    1    2  3  4  5  6  7  8  Next

திருக்கண்ணமங்கையாண்டான்அருளியது 
கோலச்சுரிசங்கைமாயன்செவ்வாயின்குணம்வினவும் 
சீலத்தனள் | தென்திருமல்லிநாடி | செழுங்குழல்மேல் 
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும்மதிப்புடைய 
சோலைக்கிளி | அவள்தூயநற்பாதம்துணைநமக்கே. [504.1]
மேலே செல்

அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி | 
மல்லிநாடாண்டமடமயில் - மெல்லியலாள் |
ஆயர்குலவேந்தனாகத்தாள் | தென்புதுவை 
வேயர்பயந்த விளக்கு. [504.2]
மேலே செல்

தையொரு திங்களும் தரைவிளக்கித் 
தண்மண்டலமிட்டுமாசிமுன்னாள் | | 
ஐயநுண்மணற்கொண்டுதெருவணிந்து 
அழகினுக்கலங்கரித்தனங்கதேவா! |
உய்யவுமாங்கொலோவென்றுசொல்லி 
உன்னையுமும்பியையும்தொழுதேன் | 
வெய்யதோர்தழலுமிழ்சக்கரக்கை 
வேங்கடவற்கென்னைவிதிக்கிற்றியே. [504.0]
மேலே செல்

வெள்ளைநுண்மணற்கொண்டுதெருவணிந்து 
வெள்வரைப்பதன்முன்னம்துறைபடிந்து | 
முள்ளுமில்லாச்சுள்ளியெரிமடுத்து 
முயன்றுன்னைநோற்கின்றேன்காமதேவா | 
கள்ளவிழ்பூங்கணைதொடுத்துக்கொண்டு 
கடல்வண்ணனென்பதோர்பேரெழுதி |
புள்ளினைவாய்பிளந்தானென்பதோர் 
இலக்கினில்புகவென்னையெய்கிற்றியே.[505.0]

மத்தநன்னறுமலர்முருக்கமலர் 
கொண்டுமுப்போதுமுன்னடிவணங்கி | 
தத்துவமிலியென்றுநெஞ்செரிந்து 
வாசகத்தழித்துன்னைவைதிடாமே | 
கொத்தலர்பூங்கணைதொடுத்துக்கொண்டு 
கோவிந்தனென்பதோர்பேரெழுதி | 
வித்தகன்வேங்கடவாணனென்னும் 
விளக்கினில்புகவென்னைவிதிக்கிற்றியே.[506.0]

சுவரில்புராண! நின்பேரேழுதிச் 
சுறவநற்கொடிகளும்துரங்கங்களும் | 
கவரிப்பிணாக்களும்கருப்புவில்லும் 
காட்டித்தந்தேன் கண்டாய்காமதேவா! | 
அவரைப்பிராயந்தொடங்கி என்றும் 
ஆதரித்தெழுந்தவென்தடமுலைகள் | 
துவரைப்பிரானுக்கேசங்கற்பித்துத் 
தொழுதுவைத்தேனொல்லைவிதிக்கிற்றியே.[507.0]
மேலே செல்

வானிடைவாழுமவ்வானவர்க்கு 
மறையவர்வேள்வியில்வகுத்தஅவி | 
கானிடைத்திரிவதோர்நரிபுகுந்து 
கடப்பதும்மோப்பதும்செய்வதொப்ப | 
ஊனிடையாழிசங்குத்தமர்க்கென்று 
உன்னித்தெழுந்தவென்தடமுலைகள் | 
மானிடவர்க்கென்றுபேச்சுப்படில் 
வாழகில்லேன்கண்டாய்மன்மதனே![508.0]

உருவுடையாரிளையார்கள்நல்லார் 
ஓத்துவல்லார்களைக்கொண்டு | வைகல் 
தெருவிடையெதிர்கொண்டு பங்குனிநாள் 
திருந்தவேநோற்கின்றேன்காமதேவா! | 
கருவுடைமுகில்வண்ணன்காயாவண்ணன் 
கருவிளைபோல்வண்ணன் | கமலவண்ணத் 
திருவுடைமுகத்தினில்திருக்கண்களால் 
திருந்தவேநோக்கெனக்கருள்கண்டய்.[509.0]

உருவுடையாரிளையார்கள்நல்லார் 
ஓத்துவல்லார்களைக்கொண்டு | வைகல் 
தெருவிடையெதிர்கொண்டு பங்குனிநாள் 
திருந்தவேநோற்கின்றேன்காமதேவா! | 
கருவுடைமுகில்வண்ணன்காயாவண்ணன் 
கருவிளைபோல்வண்ணன் | கமலவண்ணத் 
திருவுடைமுகத்தினில்திருக்கண்களால் 
திருந்தவேநோக்கெனக்கருள்கண்டய்.[510.0]
மேலே செல்

மாசுடையுடம்பொடுதலையுலறி 
வாய்ப்புரம்வெளுத்தொருபோதுமுண்டு | 
தேசுடைதிறலுடைக்காமதேவா! 
நோற்கின்றநோன்பினைக்குறிக்கொள்கண்டாய் | 
பேசுவதொன்றுண்டிங்கெம்பெருமான் 
பெண்மையைத்தலையுடைத்தாக்கும்வண்ணம் |
கேசவநம்பியைக்கால்பிடிப்பாள் 
என்னும் இப்பேறெனக்கருளுகண்டாய்.[511.0]

தொழுதுமுப்போதும்உன்னடிவணங்கித் 
தூமலர்தூய்த்தொழுதேத்துகின்றேன் | 
பழுதின்றிப்பாற்கடல்வண்ணனுக்கே 
பணிசெய்துவாழப்பெறாவிடில்நான் | 
அழுதழுதலமந்தம்மாவழங்க 
ஆற்றவுமதுவுனக்குறைக்குங்கண்டாய் | 
உழுவதோரெருத்தினைநுகங்கொடுபாய்ந்து 
ஊட்டமின்றித்துரந்தாலொக்குமே.[512.0]

கருப்புவில்மலர்க்கணைக்காமவேளைக் 
கழலிணை பணிந்து அங்கோர்கரியலற | 
மருப்பினையொசித்துப்புள்வாய்பிளந்த 
மணிவண்ணற்கென்னைவகுத்திடென்று | 
பொருப்பன்னமாடம்பொலிந்துதோன்றும் 
புதுவையர்கோன்விட்டுசித்தன்கோதை | 
விருப்புடையின்தமிழ்மாலைவல்லார் 
விண்ணவர்கோனடிநண்ணுவரே. [513.0]
மேலே செல்

நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே! | உன்னை 
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே | 
காமன்போதரு காலமென்றுபங்குனிநாள்கடை பாரித்தோம் | 
தீமைசெய்யும்சிரீதரா! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. [514.0]

இன்றுமுற்றும்முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை | 
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் | 
அன்றுபாலகனாகி ஆலிலைமேல்துயின்றஎம்மாதியாய்! | 
என்றுமுன்றனக்கெங்கள்மேல் இரக்கம்மெழாததெம்பாவமே.[515.0]

குண்டுநீருறைகோளரீ! மதயானைகோள்விடுத்தாய்! | உன்னைக் 
கண்டுமாலுறுவோங்களைக் கடைக்கண்களாலிட்டுவாதியேல் | 
வண்டல்நுண்மணல்தெள்ளி யாம்வளைக்கைகளால்சிரமப்பட்டோம் | 
தெண்டிரைக்கடற்பள்ளியாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.[516.0]
மேலே செல்

பெய்யுமாமுகில்போல்வண்ணா! உன்றன்பேச்சும்செய்கையும் | எங்களை 
மையலேற்றிமயக்க உன்முகம் மாயமந்திரந்தான்கொலோ? | 
நொய்யர்பிள்ளைகளென்பதற்கு உன்னை நோவநாங்களுரைக்கிலோம் | 
செய்யதாமரைக் கண்ணினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.[517.0]

வெள்ளைநுண்மணல்கொண்டு சிற்றில்விசித்திரப்பட | வீதிவாய்த் 
தெள்ளிநாங்களிழைத்தகோலம் அழித்தியாகிலும் உன்தன்மேல் |
உள்ளமோடியுருகலல்லால் உரோடமொன்றுமிலோங்கண்டாய் | 
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தனகண்களல்லவே.[518.0]

முற்றிலாதபிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை | நாளதொறும் 
சிற்றில்மேலிட்டுக்கொண்டு நீசிறிதுண்டுதிண்ணென நாமது 
கற்றிலோம் | கடலையடைத்தரக்கர்குலங்களை முற்றவும் 
செற்று | இலங்கையைப்பூசலாக்கியசேவகா! எம்மைவாதியேல்.[519.0]
மேலே செல்

பேதம்நன்கறிவார்களோடு இவைபேசினால்பெரிதிஞ்சுவை | 
யாதுமொன்றறியாதபிள்ளைகளோமை நீநலிந்தென்பயன்? | 
ஓதமாகடல்வண்ணா! உன்மணவாட்டிமாரொடுசூழறும் | 
சேதுபந்தம்திருத்தினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.[520.0]

வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு | 
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்? | 
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரம்கையிலேந்தினாய்! | 
கட்டியும்கைத்தால் இன்னாமையறிதியேகடல்வண்ணனே.[521.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org