Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   திருமழிசை ஆழ்வார்  
நான்முகன் திருவந்தாதி  

Songs from 2382 to 2477   ( )
Pages:    1    2  3  4  5  Next

சீராமப்பிள்ளை அருளிச்செய்தது[2382.1]
மேலே செல்

நான்முகனை நாராயணன்படைத்தான் | நான்முகனும் 
தான்முகமாய்ச் சங்கரனைத்தான்படைத்தான் |  யான்முகமாய் 
அந்தாதிமேலிட்டு அறிவித்தேனாழ்பொருளை | 
சிந்தாமல்கொண்மிநீர்தேர்ந்து.  [2382.0]
மேலே செல்

தேருங்கால்தேவன் ஒருவனேயென்றுரைப்பர் |
ஆருமறியாரவன்பெருமை | ஓரும் 
பொருள்முடிவுமித்தனையே எத்தவம்செய்தார்க்கும் 
அருள்முடிவதாழியான்பால். [2383.0]

பாலிற்கிடந்ததுவும் பண்டரங்கம்மேயதுவும் | 
ஆலில்துயின்றதுவுமரறிவார்? |  ஞாலத் 
தொருபொருளை வானவர்தம்மெய்ப்பொருளை | அப்பில் 
அருபொருளை யானறிந்தவாறு. [2384.0]

ஆறுசடைக்கரந்தான் அண்டர்கோன்தன்னோடும் | 
கூறுடையனென்பதுவும் கொள்கைத்தே |  வேறொருவ 
ரில்லாமைநின்றானை எம்மானை | எப்பொருட்கும் 
சொல்லானைச் சொன்னேன்தொகுத்து.[2385.0]
மேலே செல்

தொகுத்தவரத்தனாய்த் தோலாதான்மார்வம் | 
வகிர்த்தவளையுகிர்த்தோள்மாலே! |  உகத்தில் 
ஒருநான்றுநீயுயர்த்தி உள் வாங்கிநீயே | 
அருநான்குமானாயறி.[2386.0]

அறியார்சமணர் அயர்த்தார்பவுத்தர் | 
சிறியார்சிவப்பட்டார்செப்பில் | -வெறியாய 
மாயவனைமாலவனை மாதவனையேத்தாதார் 
ஈனவரேயாதலாலின்று.[2387.0]

இன்றாக நாளையேயாக | இனிச்சிறிதும் 
நின்றாக நின்னருளென்பாலதே |  நன்றாக 
நானுன்னை அன்றி இலேன்கண்டாய் | நாரணனே!
நீயென்னையன்றியிலை.[2388.0]
மேலே செல்

இலைதுணைமற்றென்னெஞ்சே ஈசனைவென்ற | 
சிலைகொண்டசெங்கண்மால்சேரா |  குலைகொண்ட 
ஈரைந்தலையான் இலங்கையையீடழித்த | 
கூரம்பனல்லால்குறை. [2389.0]

குறைகொண்டுநான்முகன் குண்டிகைநீர்பெய்து | 
மறைகொண்டமந்திரத்தால் வாழ்த்தி |  கறைகொண்ட 
கண்டத்தான் சென்னிமேலேறக் கழுவினான் | 
அண்டத்தான்சேவடியையாங்கு.[2390.0]

ஆங்காரவாரமதுகேட்டு | அழலுமிழும் 
பூங்காரரவணையான் பொன்மேனி |  யாங்காண 
வல்லமேயல்லமே? மாமலரான்வார்சடையான் | 
வல்லரேயல்லரே? வாழ்த்து.[2391.0]
மேலே செல்

வாழ்த்துகவாய் காண்ககண்கேட்கசெவி | மகுடம் 
தாழ்த்திவணங்குமின்கள் தண்மலரால் |  சூழ்த்த 
துழாய்மன்னும்நீள்முடி என்தொல்லைமால்த்ன்னை | 
வழாவண்கைகூப்பிமதித்து. [2392.0]

மதித்தாய்போய்நான்கின் மதியார்போய்வீழ | 
மதித்தாய், மதிகோள்விடுத்தாய்! |  மதித்தாய் 
மடுகிடந்த மாமுதலைகோள்விடுப்பான் | ஆழி 
விடற்கிரண்டும்போயிரண்டின்வீடு.[2393.0]

வீடாக்கும் பெற்றியறியாது | மெய்வருத்திக் 
கூடாக்கி நின்றுண்டுகொண்டுழல்வீர்! |  வீடாக்கும் 
மெய்ப்பொருள்தான்வேதமுதற்பொருள்தான் | விண்ணவர்க்கு 
நற்பொருள்தான் நாராயணன். [2394.0]
மேலே செல்

நாராயணண் என்னையாளி | நரகத்துச் 
சேராமல்காக்கும் திருமால்தன் | பேரான 
பேசப்பெறாத பிணச்சமயர்பேசக்கேட்டு | 
ஆசைப்பட்டாழ்வார்பலர். [2395.0]

பலதேவரேத்தப் படிகடந்தான்பாதம் | 
மலரேறவிட்டிறைஞ்சிவாழ்த்த  வலராகில் | 
மார்க்கண்டன்கண்டவகையே வருங்கண்டீர் |
நீர்க்கண்டன்கண்டநிலை. [2396.0]

நிலைமன்னுமென்னெஞ்சம் அந்நான்று | தேவர் 
தலைமன்னர்தாமே மாற்றாக |  பலமன்னர் 
போர்மாள வெங்கதிரோன்மாயப், பொழில்மறைய | 
தேராழியால்மறைத்தாரால். [2397.0]
மேலே செல்

ஆலநிழற்கீழ் அறநெறியை | நால்வர்க்கு 
மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் |  ஞால 
மளந்தானை ஆழிக்கிடந்தானை | ஆல்மேல் 
வளர்ந்தானைத் தான்வணங்குமாறு. [2398.0]

மாறாயதானவனை வள்ளுகிரால் | மார்விரண்டு 
கூறகக் கீறியகோளரியை |  வேறாக 
ஏத்தியிருப்பாரை வெல்லுமே | மற்றவரைச் 
சார்த்தியிருப்பார்தவம். [2399.0]

தவஞ்செய்து நான்முகனால்பெற்றவரத்தை | 
அவஞ்செய்த ஆழியாயன்றே | உவந்தெம்மைக் 
காப்பாய்நீ காப்பதனையாவாய்நீ | வைகுந்தம் 
மீப்பாயுமெவ்வுயிர்க்கும்நீ.[2400.0]
மேலே செல்


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org