Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   திருமங்கை ஆழ்வார்  
பெரிய திருமடல்  

Songs from 2713 to 2790   ( )
Pages:    1    2  3  4  Next

அருளாதநீரருளி அவராவிதுவராமுன் |
அருளாழிப்புட்கடவீர் அவர்வீதியொருநாளென்று |
அருளாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி 
யருள் | ஆழிவரிவண்டே! யாமும்என்பிழைத்தோமே?[2713.0]

என்பிழைகோப்பதுபோலப் பனிவாடை யீர்கின்ற | 
என்பிழையேநினைந்தருளி அருளாததிருமாலார்க்கு |
என்பிழைத்தாள்திருவடியின்தகவினுக்கு என்றொருவாய்ச்சொல் |
என்பிழைக்குமிளங்கிளியே! யான்வளர்த்தநீயலையே?[2714.0]

நீயலையே? சிறுபூவாய்! நெடுமாலார்க்கென்தூதாய் | 
நோயெனதுநுவலென்னநுவலாதேயிருந்தொழிந்தாய் |
சாயலொடுமணிமாமை தளர்ந்தேன்நான் | இனிஉனது 
வாயலகிலின்னடிசில் வைப்பாரைநாடாயே.[2715.0]
மேலே செல்

நாடாதமலர்நாடி நாள்தோறும்நாரணன்தன் | 
வாடாதமலரடிக்கீழ் வைக்கவேவகுக்கின்று | 
வீடாடிவீற்றிருத்தல் வினையற்றதென்செய்வதோ? | 
ஊடாடுபனிவாடாய்! உரைத்தீராயெனதுடலே.[2716.0]

உடலாடிப்பிறப்புவீடு உயிர்முதலாமுற்றுமாய் | 
கடலாழிநீர்தோற்றி அதனுள்ளேகண்வளரும் | 
அடலாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி | 
விடல் ஆழிமடநெஞ்சே! வினையோமொன்றாமளவே.[2717.0]

அளவியன்றவேழுலகத்தவர் பெருமான்கண்ணனை |
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த |
அளவியன்றவந்தாதி ஆயிரத்துள்இப்பத்தின் |
வளவுரையால்பெறலாகும் வானோங்குபெருவளமே.[2718.0]
மேலே செல்

வளவேழுலகின்முதலாய வானோரிறையை | அருவினையேன் 
களவேழ்வெண்ணெய்தொடுவுண்ட கள்வா! என்பன்பின்னையும் | 
தளவேழ்முறுவற்பின்னைக்காய் வல்லானாயர்தலைவனாய் | 
இளவேறேழும்தழுவிய எந்தாய்! என்பன் நினைந்துநைந்தே.[2719.0]

நினைந்துநைந்துள்கரைந்துருகிஇமையோர்பலரும் முனிவரும் | 
புனைந்தகண்ணிநீர்சாந்தம் புகையோடேந்திவணங்கினால் | 
நினைந்தவெல்லாப்பொருள்கட்கும் வித்தாய்முதலிற் சிதையாமே | 
மனஞ்செய்ஞானத்துன்பெருமை மாசூணாதோ? மாயோனே![2720.0]

மாயோனிகளாய்நடைகற்ற வானோர்பலரும்முனிவரும் | 
நீயோனிகளைப்படையென்று நிறைநான்முகனைப் படைத்தவன் |
சேயோனெல்லாவறிவுக்கும் திசைகளெல்லாம்திருவடியால் 
தாயோன் | எல்லாவெவ்வுயிர்க்கும்தாயோன் தானோருருவனே.[2721.0]
மேலே செல்

தானோருருவேதனிவித்தாய்த் தன்னில்மூவர்முதலாய |
வானோர்பலரும்முனிவரும் மற்றும்மற்றும்முற்றுமாய் |
தானோர்பெருநீர்தன்னுள்ளேதோற்றி அதனுள் கண்வளரும் |
வானோர்பெருமான்மாமாயன்வைகுந்தன் எம்பெருமானே.[2722.0]

மானேய் நோக்கிமடவாளை மார்விற்கொண்டாய்! மாதவா! | 
கூனேசிதையவுண்டைவில் நிறத்தில்தெறித்தாய்! கோவிந்தா! | 
வானார்சோதிமணிவண்ணா!மதுசூதா! நீயருளாய் | உன் 
தேனே மலரும்திருப்பாதம் சேருமாறுவினையேனே.[2723.0]

வினையேன்வினைதீர்மருந்தானாய்! விண்ணோர்தலைவா! கேசவா! | 
மனைசேராயர்குலமுதலே! மாமாயனே! மாதவா! |
சினையேய்தழையமராமரங்கள் ஏழுமெய்தாய்! சிரீதரா! | 
இனையாய்! இனையபெயரினாய்! என்றுநைவனடியேனே.[2724.0]
மேலே செல்

அடியேன்சிறியஞானத்தன்அறிதலார்க்குமரியானை |
கடிசேர்தண்ணந்துழாய்க் கண்ணிபுனைந்தான்தன்னைக் கண்ணனை | 
செடியாராக்கையடியாரைச் சேர்தல்தீர்க்கும்திருமாலை |
அடியேன்காண்பானலற்றுவன்இதனில்மிக்கோரயர்வுண்டே?[2725.0]

உண்டாயுலகேழ்முன்னமேஉமிழ்ந்துமாயையாற்புக்கு |
உண்டாய்வெண்ணெய்சிறுமனிசர் உவலையாக்கைநிலையெய்தி |
மண்தான்சோர்ந்ததுண்டேலும் மனிசர்க்காகும்பீர் | சிறிதும் 
அண்டாவண்ணம்மண்கரைய நெய்யூண்மருந்தோ? மாயோனே![2726.0]

மாயோம்தீயவலவலைப் பெருமாவஞ்சப்பேய்வீய |
தூயகுழவியாய்விடப்பாலமுதா அமுதுசெய்திட்ட
மாயன் | வானோர்தனித்தலைவன்மலராள்மைந்தன் எவ்வுயிர்க்கும் 
தாயோன் | தம்மானென்னம்மான் அம்மாமூர்த்தியைச்சார்ந்தே.[2727.0]
மேலே செல்

சார்ந்தவிருவல்வினைகளும்சரித்து மாயப்பற்றறுத்து |
தீர்ந்துதன்பால்மனம்வைக்கத்திருத்தி வீடுதிருத்துவான் | 
ஆர்ந்தஞானச்சுடராகி அகலம்கீழ்மேலளவிறந்து | 
நேர்ந்தவுருவாயருவாகும் இவற்றினுயிராம் நெடுமாலே.[2728.0]

மாலே! மாயப்பெருமானே! மாமாயனே! என்றென்று | 
மாலேயேறிமாலருளால் மன்னுகுருகூர்ச்சடகோபன் |
பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரத்தின்
பாலேபட்ட | இவைபத்தும்வல்லார்க்கு இல்லைபரிவதே.[2729.0]

பரிவதிலீசனைப்பாடி |
விரிவதுமேவலுறுவீர் |
பிரிவகையின்றி நன்னீர் தூய் |
புரிவதுவும்புகைபூவே.[2730.0]
மேலே செல்

மதுவார்தண்ணந் துழாயான் |
முதுவேதமுதல்வனுக்கு |
எதுவேது? என்பணி? என்னாது | 
அதுவேஆட்செய்யுமீடே.[2731.0]

ஈடுமெடுப்புமிலீசன் |
மாடுவிடாதுஎன்மனனே |
பாடுமென்நா அவன் பாடல் |
ஆடுமெனங்கம்அணங்கே.[2732.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org