Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

இரண்டாவதாயிரம்   திருமங்கையாழ்வார்  
பெரிய திருமொழி  

Songs from 948 to 2031   ( )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10

திருக்கோட்டியூர்நம்பிஅருளிச்செய்தது
கலயைமிகலித்வம்ஸம் கவிம்லோகதிவாகரம்-
யஸ்யகோபி: ப்ரகாஸாபி: ஆவித்யம்நிஹதம்தம்:.[948.1]
மேலே செல்

எம்பெருமானார்அருளிச்செய்தது
வாழிபரகாலன் வாழிகலிகன்றி |
வாழிகுறையலூர்வாழ்வேந்தன் - வாழியரோ |
மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள் |மங்கையர்கோன்
தூயோன்சுடர்மானவேல்.[948.2]
மேலே செல்

ஆழ்வான்அருளிச்செய்தது
நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி
நஞ்சுக்குநல்லவமுதம் |தமிழநன்நூல் துறைகள்
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் |பரசமயப்
பஞ்சுக்கனலின்பொரி |பரக்காலன்பனுவல்களே.[948.3]
மேலே செல்

எம்பார்அருளிச்செய்தது
எங்கள்கதியே! இராமானுசமுனியே! |
சங்கைகெடுத்தாண்டதவராசா! | - பொங்குபுகழ்
மங்கையர்கோனீந்தமறையாயிரமனைத்தும் |
தங்குமனம்நீயெனக்குத்தா.[948.4]
மேலே செல்

மாலைத்தனியேவழிபறிக்கவேணுமென்று |
கோலிப்பதவிருந்த்கொற்றவனே! |வேலை
அணைத்தருளுங்கையாலடியேன்வினையை |
துணித்தருளவேணும் துணிந்து.[948.5]
மேலே செல்

வாடினேன்வாடிவருந்தினேன்மனத்தால் 
பெருந்துயரிடும்பையில் பிறந்து | 
கூடினேன் கூடிஇளையவர்தம்மோடு 
அவர்தரும்கலவியேகருதி | 
ஓடினேன் ஓடிஉய்வதோர்பொருளால் 
உணர்வெனும்பெரும்பதம் தெரிந்து | 
நாடினேன்நாடிநான்கண்டுகொண்டேன் 
நாராயணாவென்னும்நாமம். [948.0]
மேலே செல்

ஆவியே! அமுதே! எனநினைந்துருகி 
அவரவர்பணைமுலைதுணையா | 
பாவியேனுணராதுஎத்தனைபகலும் 
பழுதுபோயொழிந்தனநாள்கள் | 
தூவிசேரன்னம் துணையொடும்புணரும் 
சூழ்புனற்குடந்தையேதொழுது | என் 
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் 
நாராயணாவென்னும் நாமம். [949.0]

சேமமேவேண்டித்தீவினைபெருக்கித் 
தெரிவைமாருருவமேமருவி | 
ஊமனார்கண்டகனவிலும்பழுதாய் 
ஒழிந்தனகழிந்த அந்நாள்கள் | 
காமனார் தாதைநம்முடையடிகள் 
தம்மடைந்தார்மனத்திருப்பார் | 
நாமம்நானுய்யநான்கண்டுகொண்டேன் 
நாராயணாவென்னும் நாமம்.[950.0]

வென்றியேவேண்டிவீழ்பொருட்கிரங்கி 
வேற்கணார்கலவியேகருதி | 
நின்றவாநில்லாநெஞ்சினையுடையேன் 
என்செய்கேன்? நெடுவிசும்பணவும் | 
பன்றியாய் அன்றுபாரகங்கீண்ட 
பாழியானாழியானருளே | 
நன்று நானுய்யநான்கண்டுகொண்டேன் 
நாராயணாவென்னும் நாமம்.[951.0]
மேலே செல்

கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன் 
கண்டவாதிரிதந்தேனேலும் | 
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன் 
சிக்கெனத்திருவருள்பெற்றேன் | 
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் 
உடம்பெலாம்கண்ணநீர்சோர | 
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் 
நாராயணாவென்னும் நாமம்.[952.0]

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம் 
எனக்கரசு என்னுடைவாணாள் | 
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி 
அவருயிர்செகுத்தஎம்அண்ணல் | 
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை 
மாமணிக்கோயிலேவணங்கி | 
நம்பிகாள்! உய்யநான் கண்டு கொண்டேன் 
நாராயணாவென்னும் நாமம். [953.0]

இப்பிறப்பறியீர்இவரவரென்னீர் 
இன்னதோர்த்தன்மையென்றுணரீர் | 
கற்பகம்புலவர்களைகணென்றுஉலகில் 
கண்டவாதொண்டரைப்பாடும் | 
சொற்பொருளாளீர்சொல்லுகேன்வம்மின் 
சூழ்புனற்குடந்தையேதொழுமின் | 
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் 
நாராயணாவென்னும் நாமம்.[954.0]
மேலே செல்

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் 
கருத்துளே திருத்தினேன் மனத்தை | 
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை 
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம் | 
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் 
செல்கதிக்குய்யுமாறெண்ணி | 
நல்துணையாகப்பற்றினேன் அடியேன் 
நாராயணாவென்னும் நாமம்.[955.0]

குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லம் |
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும் |
வலந்தரும்மற்றுந்தந்திடும்
பெற்றதாயினும் ஆயினசெய்யும் |
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.[956.0]

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் 
மங்கையார்வாள் கலிகன்றி | 
செஞ்சொலாலெடுத்த தெய்வ நல்மாலை 
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்! | 
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் 
துயரிலீர் சொல்லிலும் நன்றாம் | 
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு 
நாராயணாவென்னும் நாமம். [957.0]
மேலே செல்

வாலிமாவலத்தொருவனதுடல்கெட 
வரிசிலைவளைவித்து | அன்று 
ஏலம் நாறு தண்தடம்பொழிலிடம்பெற 
இருந்தநலிமய்யத்துள் | 
ஆலிமாமுகிலதிர்தர அருவரை 
அகடுறமுகடேறி | 
பீலிமாமயில்நடஞ்செயும் தடஞ்சுனைப் 
பிரிதிசென்றடைநெஞ்சே! [958.0]

கலங்கமாக்கடல்அரிகுலம் பணிசெய்ய 
அருவரையணைகட்டி | 
இலங்கைமாநகர்ப்பொடிசெய்த அடிகள்தாம் 
இருந்தநலிமயத்து | 
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன 
வேழங்கள் துயர்கூர | 
பிலங்கொள்வாளெயிற்று அரியவைதிரிதரு 
பிரிதிசென்றடைநெஞ்சே! [959.0]

துடிகொள்நுண்ணிடைச் சுரிகுழல்
துளங்கெயிற்றிளங்கொடிதிறத்து | ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து |
கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின்
மணியறைமிசை, வேழம் |
பிடியினோடு வண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே![960.0]
மேலே செல்

மறங்கொளாளரியுருவெனவெருவர 
ஒருவனது அகல்மார்வம் 
திறந்து | வானவர்மணிமுடிபணிதர 
இருந்தநல்லிமயத்துள் | 
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் 
கிடந்தருகெரிவிசும் | 
பிறங்குமாமணியருவியொடிழிதரு 
பிரிதிசென்றடைனெஞ்சே. [961.0]

கரைசெய்மாக்கடல் கிடந்தவன்
கனைகழல் அமரர்கள் தொழுதேத்த |
அரைசெய்மேகலை அலர்மகளவளொடும்
அமர்ந்த நலிமயத்து |
வரைசெய்மாக்களிறு இளவெதிர் வளர்முளை
அளைமிகுதேன் தோய்த்து |
பிரசவாரிதன்னிளம்பிடிக்கு அருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே![962.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org