Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   நம்மாழ்வார்  
பெரிய திருவந்தாதி  

Songs from 2585 to 2671   ( )
Pages:    1    2  3  4  5  Next

எம்புருமானார் அருளிச்செய்தது [2585.1]

முயற்றிசுமந்தெழுந்து முந்துற்றநெஞ்சே! | 
இயற்றுவாயெம்மொடுநீகூடி |  நயப்புடைய 
நாவீன்தொடைக்கிளவியுள் பொதிவோம் | நற்பூவைப் 
பூவீன்றவண்ணன்புகழ்.  [2585.0]

புகழ்வோம்பழிப்போம் புகழோம்பழியோம் | 
இகழ்வோம்மதிப்போம் மதியோம்  இகழோம் | மற்று 
எங்கள்மால்! செங்கண்மால்! சீறல்நீதீவினையோம் | 
எங்கள்மால்கண்டாய்இவை. [2586.0]
மேலே செல்

இவையன்றேநல்ல இவையன்றேதீய | 
இவையென்றிவையறிவனேலும் |  இவையெல்லாம் 
என்னாலடைப்புநீக்கொண்ணாது இறையவனே! | 
என்னாற்செயற்பாலதென்? [2587.0]

என்னின்மிகுபுகழார்யாவரே? | பின்னையும்மற் 
றெண்ணில் மிகுபுகழேன்யானல்லால் | என்ன 
கருஞ்சோதிக் கண்ணன், கடல்புரையும் | சீலப் 
பெருஞ்சோதிக்குஎன்னெஞ்சாள்பெற்று. [2588.0]

பெற்றதாய்நீயே பிறப்பித்ததந்தைநீ | 
மற்றையாராவாரும்நீபேசில் | எற்றேயோ! 
மாய! மாமாயவளை மாயமுலைவாய்வைத்த | 
நீயம்மா! காட்டும்நெறி.[2589.0]
மேலே செல்

நெறிகாட்டி நீக்குதியோ? | நின்பால்கருமா 
முறிமேனிகாட்டுதியோ? | மேல்நாள்  அறியோமை 
எஞ்செய்வானெண்ணினாய்? கண்ணனே! | ஈதுரையாய் 
என்செய்தாலென்படோம்யாம்?[2590.0]

யாமேயருவினையோம்சேயோம் | என்நெஞ்சினார் 
தாமே அணுக்கராய்ச்சார்ந்தொழிந்தார் |  பூமேய 
செம்மாதை நின்மார்வில்சேர்வித்து | பாரிடந்த 
அம்மா! நின்பாதத்தருகு.[2591.0]

அருகும்சுவடும் தெரிவுணரோம் | அன்பே 
பெருகும்மிக இதுவென்? பேசீர் |  பருகலாம் 
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம்கண்காண்பரிய | 
நுண்புடையீர்!  நும்மைநுமக்கு.[2592.0]
மேலே செல்

நுமக்கடியோமென்றென்று நொந்துதுரைத்தென்? | மாலார் 
தமக்கு அவர்த்தாம்சார்வரியரானால் |  எமக்கினி 
யாதானும் ஆகிடுகாண்நெஞ்சே! | அவர்திறத்தே 
யாதானும்சிந்தித்திரு.[2593.0]

இருநால்வர் ஈரைந்தின்மேலொருவர் | எட்டோ 
டொருநால்வர் ஓரிருவரல்லால் | திருமாற்கு 
யாமார் வணக்கமார்? ஏபாவம்நன்னெஞ்சே! | 
நாமாமிகவுடையோம்நாழ். [2594.0]

நாழாலமர்முயன்ற வல்லரக்கனின்னுயிரை | 
வாழாவகைவலிதல்நின்வலியே |  ஆழாத 
பாரும்நீவானும்நீ காலும்நீதீயும்நீ | 
நீரும்நீயாய்நின்றநீ.[2595.0]
மேலே செல்

நீயன்றேயாழ்துயரில் வீழ்விப்பான்நின்றுழன்றாய்? | 
போயொன்றுசொல்லியென்? போநெஞ்சே! |  நீயென்றும் 
காழ்த்துபதேசம்தரினும் கைகொள்ளாய் | கண்ணன்தாள் 
வாழ்த்துவதேகண்டாய்வழக்கு.[2596.0]

வழக்கொடுமாறுகொளன்று, அடியார்வேண்ட | 
இழக்கவும்காண்டுமிறைவ!  இழப்புண்டே? | 
எம்மாட்கொண்டாகிலும் யான்வேண்ட என்கண்கள் 
தம்மால் | காட்டுன்மேனிச்சாய்.[2597.0]

சாயால்கரியானை உள்ளறியாராய்நெஞ்சே! | 
பேயார்முலைகொடுத்தார்பேயராய் | நீயார்? போய்த் 
தேம்பூண்சுவைத்த ஊனறிந்தறிந்தும் | தீவினையாம் 
பாம்பார்வாய்க்கைநீட்டல்பார்த்தி. [2598.0]
மேலே செல்

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே | படுதுயரம் 
பேர்த்தோதப் பீடழிவாம்பேச்சில்லை |  ஆர்த்துஓதம் 
தம்மேனி தாள்தடவத்தாம்கிடந்து | தம்முடைய 
செம்மேனிக்கண்வளர்வார்சீர்.[2599.0]

சீரால்பிறந்து சிறப்பால்வளராது | 
பேர்வாமனாகாக்கால் பேராளா! |  மார்பாரப் 
புல்கிநீயுண்டுமிழ்ந்த பூமிநீரேற்பரிதே? |
சொல்லுநீயாமறியச்சூழ்ந்து. [2600.0]

சூழ்ந்தடியார்வேண்டினக்கால் தோன்றாதுவிட்டாலும் |
வாழ்ந்திடுவர்பின்னும்தம்வாய்திறவார் |  சூழ்ந்தெங்கும் 
வாள்வரைகள்போலரக்கன் வன்தலைகள்தாமிடிய | 
தாள்வரைவில்லேந்தினார்தாம்.[2601.0]
மேலே செல்

தாம்பாலாப்புண்டாலும் அத்தழும்புதானிளக | 
பாம்பாலாப்புண்டுபாடுற்றாலும் |  சோம்பாதுஇப் 
பல்லுருவையெல்லாம் படர்வித்தவித்தா! | உன் 
தொல்லுருவையாரறிவார்? சொல்லு. [2602.0]

சொல்லில்குறையில்லை சூதறியாநெஞ்சமே! | 
எல்லிபகலென்னாதுஎப்போதும் |  தொல்லைக்கண் 
மாத்தானைக்கெல்லாம் ஓரைவரையேமாறாக | 
காத்தானைக்காண்டும்நீகாண்.[2603.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org