Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   குலசேகர ஆழ்வார்  
பெருமாள் திருமொழி  

Songs from 647 to 751   ( )
Pages:    1    2  3  4  5  6  Next

உடயவர்அருளிச்செய்தது
இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே! |
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் |பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் |எங்கள்
குலசேகரனென்றேகூறு[647.1]

மணக்கால்நம்பிஅருளியது
ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று |அவர்களுக்கே
வாரங்கொடுகுடப்பாம்பில்கையிட்டவன் |மாற்றலரை
வீரங்கெடுத்தசெங்கோற்கொல்லிகாவலன் வில்லவர்கோன் |
சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே.[647.2]

இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி
இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த |
அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்
அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி |
திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும் |
கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்
கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே?[647.0]

வாயோரீரைஞ்ஞாறுதுதங்களார்ந்த
வளையுடம்பினழல்நாகம்உமிழ்ந்தசெந்தீ |
வீயாதமலர்ச்சென்னிவிதானமேபோல்
மேன்மேலும்மிகவெங்கும்பரந்ததன்கீழ் |
காயாம்பூமலர்ப்பிறங்கலன்னமாலைக்
கடியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் |
மாயோனை மணத்தூணேபற்றிநின்று என்
வாயாரஎன்றுகொலோவாழ்த்தும்நாளே?[648.0]
மேலே செல்

எம்மாண்பின்அயன்நான்குநாவினாலும்
எடுத்தேத்திஈரிரண்டுமுகமுங்கொண்டு |
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடும்
தொழுதேத்தி இனிதிறைஞ்சநின்ற | செம்பொன்
அம்மான்றன்மலர்க்கமலக்கொப்பூழ்தோன்ற
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் |
அம்மான்றனடியிணைக்கீழலர்களிட்டங்
கடியவரோடென்றுகொலோஅணுகும்நாளே?[649.0]

மாவினைவாய்பிளந்துகந்தமாலைவேலை
வண்ணணைஎன்கண்ணணை | வன்குன்றமேந்தி
ஆவினையன்றுய்யக்கொண்டஆயரேற்றை
அமரர்கள் தந்தலைவனைஅந்தமிழினின்பப்
பாவினை | அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்
பயிலரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் |
கோவினை நாவுறவழுத்திஎன்றன்கைகள்
கொய்ம்மலர்தூய்என்றுகொலோகூப்பும்நாளே?[650.0]

இணையில்லாவின்னிசையாழ்கெழுமியின்பத்
தும்புருவும்நாரதனுமிறைஞ்சியேத்த |
துணையில்லாத்தொன்மறைநூல்தோத்திரத்தால்
தொன்மலர்க்கணயன்வணங்கியோவாதேத்த |
மணிமாடமாளிகைகள்மல்குசெல்வ
மதிளரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் |
மணிவண்ணனம்மானைக்கண்டுகொண்டு என்
மலர்சென்னியென்றுகொலோவணங்கும்நாளே?[651.0]
மேலே செல்

அளிமலர்மேலயனரனிந்திரனோடுஏனை
அமரர்கள்தம்குழுவுமரம்பையரும்மற்றும் |
தெளிமதிசேர்முனிவர்கள்தம்குழுவுமுந்தித்
திசைதிசையில்மலர்தூவிச்சென்றுசேரும் |
களிமலர்சேர்பொழிலரங்கத்துரகமேறிக்
கண்வளரும்கடல்வண்ணர்கமலக்கண்ணும் |
ஒளிமதிசேர்திருமுகமும்கண்டு கொண்டு என்
உள்ளமிகஎன்றுகொலோவுருகும்நாளே?[652.0]

மறந்திகழுமனமொழித்துவஞ்சமாற்றி
ஐம்புலன்களடக்கியிடர்ப்பாரத்துன்பம்
துறந்து | இருமுப்பொழுதேத்தியெல்லையில்லாத்
தொன்னெறிக்கண்நிலைநின்றதொண்டரான |
அறம்திகழும்மனத்தவர்தம்கதியைப்பொன்னி
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் |
நிறம்திகழும்மாயோனைக் கண்டு என்கண்கள்
நீர்மல்கஎன்றுகொலோநிற்கும்நாளே?[653.0]

கோலார்ந்தநெடுஞ்சார்ங்கம்கூனற்சங்கம்
கொலையாழிகொடுந்தண்டுகொற்றவொள்வாள் |
காலார்ந்தகதிக்கருடனென்னும் வென்றிக்
கடும்பறவையிவையனைத்தும்புறஞ்சூழ்காப்ப |
சேலார்ந்தநெடுங்கழனிசோலைசூழ்ந்த
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் |
மாலோனைக்கண்டின்பக்கலவியெய்தி
வல்வினையேனென்றுகொலோவாழும்நாளே?[654.0]
மேலே செல்

தூராதமனக்காதல்தொண்டர்தங்கள்
குழாம்குழுமித்திருப்புகழ்கள்பலவும்பாடி |
ஆராதமனக்களிப்போடழுதகண்ணீர்
மழைசோரநினைந்துருகியேத்திநாளும் |
சீரார்ந்தமுழுவோசைபரவைகாட்டும்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் |
போராழியம்மானைக்கண்டுதுள்ளிப்
பூதலத்திலென்றுகொலோபுரளும்நாளே?[655.0]

வன்பெருவானகமுய்யஅமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில்மனிசருய்ய |
துன்பமிகுதுயரகல அயர்வொன்றில்லாச்
சுகம்வளர அகமகிழுந்தொண்டர்வாழ |
அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்
அணியரங்கன்திருமுற்றத்து | அடியார்தங்கள்
இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்
இசைந்துடனேயென்றுகொலோவிருக்கு நாளே?[656.0]

திடர்விளங்குகரைப்பொன்னிநடுவுபாட்டுத்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் |
கடல்விளங்குகருமேனியம்மான்றன்னைக்
கண்ணாரக்கண்டுகக்கும்காதல்தன்னால் |
குடைவிளங்குவிறல்தானைக்கொற்றவொள்வாள்
கூடலர்கோன்கொடைகுலசேகரன்சொற்செய்த |
நடைவிளங்குதமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே[657.0]
மேலே செல்

தேட்டரும்திறல்தேனினைத் தென்னரங்கனை | திருமாதுவாழ் 
வாட்டமில்வனமாலைமார்வனைவாழ்த்தி மால்கொள்சிந்தையராய் |
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும்மெய்யடியார்கள்தம் |
ஈட்டம்கண்டிடக்கூடுமேல் அதுகாணும்கண்பயனாவதே [658.0]

தோடுலாமலர்மங்கை தோளிணைதோய்ந்ததும் | சுடர் வாளியால் 
நீடுமாமரம் செற்றதும்நிரைமேய்த்தும் இவையேநினைந்து |
ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும்தொண்ட ரடிப்பொடி 
ஆடனாம்பெறில்  | கங்கைநீர்குடைந்தாடும்வேட்கையென்னாவதே?[659.0]

ஏறடர்த்ததும்ஏனமாய்நிலம்கீண்டதும் முன்னிராமனாய் |
மாறடர்த்ததும்மண்ணளந்ததும் சொல்லிப்பாடி | வண்பொன்னிப்பே 
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்டு அரங்கன்கோயில் திருமுற்றம் |
சேறுசெய்தொண்டர்சேவடிச்செழுஞ்சேறு என்சென்னிக்கணிவனே.[660.0]
மேலே செல்

தோய்த்ததண்தயிர்வெண்ணெய்பாலுடன்உண்டலும் உடன் றாய்ச்சிகண்டு |
ஆர்த்ததோளுடையெம்பிரான் என்னரங்கனுக்கடியார்களாய் |
நாத்தழும்பெழநாரணாவென்றழைத்து மெய்தழும்பத்தொழு 
தேத்தி | இன்புறும்தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென்நெஞ்சமே.[661.0]

பொய்சிலைக்குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவீர்த்தகோன் |
செய்சிலைச்சுடர்சூழொளித் திண்ணமாமதிள்தென்னரங்கனாம் |
மெய்சிலைக்கருமேகமொன்று தம்நெஞ்சில்நின்றுதிகழப்போய் |
மெய்சிலிர்ப்பவர்தம்மையேநினைந் தென்மனம்மெய்சிலிர்க்குமே.[662.0]

ஆதியந்தமனந்தமற்புதமான வானவானவர்தம்பிரான் |
பாதமாமலர்சூடும்பத்தியிலாத பாவிகளுய்ந்திட |
தீதில்நன்னெறிகாட்டி எங்கும்திரிந்தரங்கனெம்மானுக்கே |
காதல்செய்தொண்டர்க்கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென்னெஞ்சமே.[663.0]
மேலே செல்

காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய் |
ஆரமார்வனரங்கனென்னும் அரும்பெருஞ்சுடரொன்றினை |
சேரும்நெஞ்சினராகிச் சேர்ந்துகசிந்திழிந்தகண்ணீர்களால் |
வாரநிற்பவர்தாளிணைக்கு ஒருவாரமாகுமென்னெஞ்சமே.[664.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org