Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   பொய்கையாழ்வார்  
முதல் திருவந்தாதி  

Songs from 2082 to 2181   ( காஞ்சிபுரம் )
Pages:    1    2  3  4  5  6  Next

முதலியாண்டான்அருளிச்செய்தது
கைதைசேர்பூம்பொழில்சூழ்கச்சிநகர்வந்துதித்த |
பொய்கைப்பிரான்கவிஞர்போரேறு | - வையத்து
அடியவர்வாழஅருந்தமிழந்தாதி |
படிவிளங்கச்செய்தான்பரிந்து.[2082.1]
மேலே செல்

வையம்தகளியா வார்கடலேநெய்யாக | 
வெய்யகதிரோன்விளக்காக |  செய்ய 
சுடராழியானடிக்கே சூட்டினேன்சொல்மாலை | 
இடராழி நீங்குகவேயென்று.  1 [2082.0]
மேலே செல்

என்றுகடல்கடைந்தது? எவ்வுலகம்நீரேற்றது? | 
ஒன்றுமதனையுணரேன்நான் |  அன்றுஅது
அடைத்துடைத்துக் கண்படுத்தவாழி | இதுநீ 
படைத்திடந்துஉண்டுமிழ்ந்தபார்.[2083.0]

பாரளவும்ஓரடிவைத்து ஓரடியும்பாருடுத்த | 
நீரளவும்செல்லநிமிர்ந்ததே |  சூருருவில் 
பேயளவுகண்டபெருமான்! அறிகிலேன் | 
நீயளவுகண்டநெறி. [2084.0]

நெறிவாசல் தானேயாய்நின்றானை | ஐந்து 
பொறிவாசல்போர்க்கதவம் சார்த்தி |  அறிவானாம் 
ஆலமரநீழல் அறம்நால்வர்க்கன்றுரைத்த | 
ஆலமமர்கண்டத்தரன்.[2085.0]
மேலே செல்

அரன்நாரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி | 
உரைநூல்மறையுறையும்கோயில் | -வரைநீர் 
கருமம்அழிப்பளிப்புக் கையதுவேல்நேமி | 
உருவமெரிகார்மேனிஒன்று. [2086.0]

ஒன்றும்மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான் | 
இன்றுமறப்பனோ? ஏழைகாள்!  அன்று 
கருவரங்கத்துட்கிடந்து கைதொழுதேன்கண்டேன் | 
திருவரங்கமேயான்திசை.[2087.0]

திசையும் திசையுறுதெய்வமும் | தெய்வத் 
திசையும்கருமங்களெல்லாம் | -அசைவில்சீர்க் 
கண்ணன்நெடுமால் கடல்கடைந்த | காரோத 
வண்ணன் படைத்தமயக்கு. [2088.0]
மேலே செல்

மயங்கவலம்புரி வாய்வைத்து | வானத் 
தியங்கும்எறிகதிரோன்தன்னை |  முயங்கமருள் 
தேராழியால்மறைத்தது என்? நீ திருமாலே! | 
போராழிக்கையால் பொருது. [2089.0]

பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்தாய்க்கு | அன்றுஉன் 
ஒருகோட்டின்மேல்கிடந்ததன்றே |  விரிதோட்ட 
சேவடியைநீட்டித் திசைநடுங்கவிண்துளங்க | 
மாவடிவின்நீயளந்தமண்.[2090.0]

மண்ணும்மலையும் மறிகடலும்மாருதமும் | 
விண்ணும்விழுங்கியதுமெய்யென்பர் |  எண்ணில் 
அலகளவுகண்ட சீராழியாய்க்கு | அன்றுஇவ் 
வுலகளவும்உண்டோ? உன்வாய். [2091.0]
மேலே செல்

வாயவனையல்லது வாழ்த்தாது | கையுலகம்
தாயவனையல்லது தான்தொழா | - பேய்முலைநஞ்சு
ஊணாகவுண்டான் உருவொடுபேரல்லால் |
காணாகண் கேளாசெவி.[2092.0]

செவிவாய்கண்மூக்கு உடலென்றைம்புலனும் | செந்தீ 
புவிகால் நீர்விண்பூதமைந்தும் |  அவியாத 
ஞானமும்வேள்வியும் நல்லறமும்என்பரே | 
ஏனமாய்நின்றாற்குஇயல்வு. [2093.0]

இயல்வாக ஈன்துழாயானடிக்கேசெல்ல | 
முயல்வாரியலமரர்முன்னம் |  இயல்வாக 
நீதியாலோதி நியமங்களால்பரவ | 
ஆதியாய்நின்றாரவர்.[2094.0]
மேலே செல்

அவரவர்தாம்தாம் அறிந்தவாறேத்தி | 
இவரிவரெம்பெருமானென்று |  சுவர்மிசைச் 
சார்த்தியும் வைத்தும்தொழுவர் | உலகளந்த 
மூர்த்தியுருவேமுதல். [2095.0]

முதலாவார்மூவரே | அம்மூவருள்ளும் 
முதலாவான் மூரிநீர்வண்ணன் |  முதலாய 
நல்லானருளல்லால் நாமநீர்வையகத்து | 
பல்லாரருளும்பழுது. [2096.0]

பழுதேபலபகலும் போயினவென்று | அஞ்சி 
அழுதேன் அரவணைமேல்கண்டு  தொழுதேன் | 
கடலோதம்காலலைப்பக் கண்வளரும் | செங்கண் 
அடலோதவண்ணரடி. [2097.0]
மேலே செல்

அடியும் படிகடப்பத் தோள்திசைமேல்செல்ல | 
முடியும்விசும்பளந்ததென்பர் |  வடியுகிரால் 
ஈர்ந்தான் இரணியனதாகம் | இருஞ்சிறைப்புள் 
ஊர்ந்தான் உலகளந்தநான்று. [2098.0]

நான்றமுலைத்தலை நஞ்சுண்டு | உறிவெண்ணெய் 
தோன்றவுண்டான் வென்றிசூழ்களிற்றை  ஊன்றி | 
பொருதுடைவுகண்டானும் புள்ளின்வாய்கீண்டானும் | 
மருதிடைபோய்மண்ணளந்தமால். [2099.0]

மாலுங்கருங்கடலே! என்நோற்றாய்? | வையகமுண்டு
ஆலினிலைத்துயின்றவாழியான் | - கோலக்
கருமேனிச் செங்கண்மால்கண்படையுள் | என்றும்
திருமேனி நீதீண்டப்பெற்று.[2100.0]
மேலே செல்


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org