Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   பேயாழ்வார்  
மூன்றாம் திருவந்தாதி  

Songs from 2282 to 2381   ( மயிலாப்பூர் )
Pages:    1    2  3  4  5  6  Next

குருகைகாவலப்பன்அருளிச்செய்தது
சீராரும்மாடத்திருக்கோவலூரதனுள் |
காரார்கருமுகிலைக்காணப்புக்கு | - ஓராத்
திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே |
உரைக்கண்டாய்நெஞ்சே! உகந்து.[2282.1]

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் | திகழும் 
அருக்கனணிநிறமும் கண்டேன் |  செருக்கிளரும் 
பொன்னாழிகண்டேன் புரிசங்கம்கைக்கண்டேன் | 
என்னாழிவண்ணன்பாலின்று. [2282.0]

இன்றேகழல்கண்டேன் ஏழ்பிறப்பும்யானறுத்தேன் | 
பொன்தோய்வரைமார்வில்பூந்துழாய் |  அன்று 
திருக்கண்டுகொண்ட திருமாலே! |உன்னை 
மருக்கண்டுகொண்டென்மனம்.[2283.0]
மேலே செல்

மனத்துள்ளான் மாகடல்நீருள்ளான் | மலராள் 
தனத்துள்ளான் தண்துழாய்மார்பன் |  சினத்துச் 
செருநருகச்செற்றுகந்த தேங்கோதவண்ணன் | 
வருநரகந்தீர்க்கும்மருந்து.[2284.0]

மருந்தும்பொருளும் அமுதமும்தானே | 
திருந்தியசெங்கண்மாலாங்கே |  பொருந்தியும் 
நின்றுலகமுண்டுமிழ்ந்தும் நீரேற்றும்மூவடியால் | 
அன்றுலகந்தாயோனடி. [2285.0]

அடிவண்ணம்தாமரை அன்றுலகந்தாயோன் | 
படிவண்ணம் பார்க்கடல்நீர்வண்ணம் |  முடிவண்ணம் 
ஓராழிவெய்யோன் ஒளியுமஃதன்றே |
ஆராழிகொண்டாற்கழகு. [2286.0]
மேலே செல்

அழகன்றேயாழியாற்கு ஆழிநீர்வண்ணம் | 
அழகன்றேயண்டம்கடத்தல் |  அழகன்றே 
அங்கைநீரேற்றாற் கலர்மேலோன்கால்கழுவ | 
கங்கைநீர்கான்றகழல்.[2287.0]

கழல்தொழுதும்வாநெஞ்சே! கார்கடல்நீர்வேலை | 
பொழிலளந்தபுள்ளூர்திச்செல்வன் |  எழிலளந்தங் 
கெண்ணற்கரியானை எப்பொருட்கும்சேயானை | 
நண்ணற்கரியானைநாம். [2288.0]

நாமம்பலசொல்லி நாராயணாவென்று | 
நாமங்கையால்தொழுதும்நன்னெஞ்சே!  வா | மருவி 
மண்ணுலகமுண்டுமிழ்ந்த வண்டறையும்தண்துழாய் | 
கண்ணனையேகாண்கநங்கண்.[2289.0]
மேலே செல்

கண்ணும்கமலம் கமலமேகைத்தலமும் | 
மண்ணளந்தபாதமும் மற்றவையே | எண்ணில் 
கருமாமுகில்வண்ணன் கார்க்கடல்நீர்வண்ணன் | 
திருமாமணிவண்ணன்தேசு. [2290.0]

தேசும்திறலும் திருவுமுருவமும் | 
மாசில்குடிப்பிறப்பும் மற்றவையும்  பேசில் 
வலம்புரிந்தவான்சங்கம் கொண்டான்பேரோத | 
நலம்புரிந்துசென்றடையும்நன்கு. [2291.0]

நன்கோதும் நால்வேதத்துள்ளான் | நறவிரியும் 
பொங்கோதருவிப்புனல்வண்ணன் |  சங்கோதப் 
பாற்கடலான் பாம்பணையின்மேலான் | பயின்றுரைப்பார் 
நூற்கடலான் நுண்ணறிவினான். [2292.0]
மேலே செல்

அறிவென்னும்தாள்கொளுவி ஐம்புலனும்தம்மில் | 
செறிவென்னும்திண்கதவஞ்செம்மி |  மறையென்றும் 
நன்கோதி நன்குணர்வார்காண்பரே | நாள்தோறும் 
பைங்கோதவண்ணன்படி. [2293.0]

படிவட்டத்தாமரை பண்டுலகம்நீரேற்று | 
அடிவட்டத்தாலளப்ப நீண்ட  முடிவட்டம் | 
ஆகாயமூடறுத்து அண்டம்போய்நீண்டதே | 
மாகாயமாய்நின்றமாற்கு.[2294.0]

மாற்பால்மனஞ்சுழிப்ப மங்கையர்தோள்கைவிட்டு | 
நூற்பால்மனம்வைக்கநொய்விதாம் | -நாற்பால 
வேதத்தான்வேங்கடத்தான் விண்ணோர்முடிதோயும் | 
பாதத்தான்பாதம்பணிந்து.[2295.0]
மேலே செல்

பணிந்துயர்ந்தபௌவப் படுதிரைகள்மோத | 
பணிந்தபணிமணிகளாலே  அணிந்து |அங்கு 
அனந்தனணைக் கிடக்குமம்மான் | அடியேன் 
மனந்தனணைக்கிடக்கும்வந்து. [2296.0]

வந்துதைத்தவெண்திரைகள் செம்பவளவெண்முத்தம் |
அந்திவிளக்குமணிவிளக்காம் |  எந்தை 
ஒருவல்லித்தாமரையாள் ஒன்றியசீர்மார்வன் | 
திருவல்லிக்கேணியான்சென்று.  [2297.0]

சென்றநாள்செல்லாத செங்கண்மாலெங்கள்மால் | 
என்றநாளெந்நாளும்நாளாகும் |  என்றும் 
இறவாதவெந்தை இணையடிக்கேயாளாய் | 
மறவாதுவாழ்த்துகவென்வாய். [2298.0]
மேலே செல்

வாய்மொழிந்துவாமனனாய்மாவலிபால் | மூவடிமண் 
நீயளந்துகொண்டநெடுமாலே? |  தாவியநின் 
எஞ்சாவிணையடிக்கே ஏழ்பிறப்புமாளாகி | 
அஞ்சாதிருக்கவருள். [2299.0]

அருளாதொழியுமே? ஆலிலைமேல் | அன்று 
தெருளாதபிள்ளையாய்ச் சேர்ந்தான் | இருளாத 
சிந்தையராய்ச்சேவடிக்கே செம்மலர்தூய்க்கைதொழுது | 
முந்தையராய் நிற்பார்க்குமுன். [2300.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org