sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
திருஞானசம்பந்தர்   திருநாவுக்கரசர்   சுந்தரமூர்த்தி   திருவாசகம்
திருக்கடைக்காப்பு பாடப் பெற்ற வரலாற்று வரிசை (Historical Order)
1.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடைய செவியன், விடை  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   நட்டபாடை   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி )
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
1.074 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறவம் நிறை வண்டு அறை  (திருப்புறவம்)   தக்கேசி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   சீகாமரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.023 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடையில் வாளை பாய, மாதரார்குடையும்  (திருக்கோலக்கா)   தக்கராகம்   ( சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
1.024 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூஆர் கொன்றைப் புரிபுன் சடை  (சீர்காழி)   தக்கராகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீகாழி திரும்பிய ஞானசம்பந்தர் நேரே ஆலயம் சென்று பூவார் கொன்றை எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் போற்றித் தம் மாளிகையை அடைந்தார்.
2.084 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காரைகள், கூகை, முல்லை, கள,  (திருநனிப்பள்ளி)   பியந்தைக்காந்தாரம்   ( நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் அது தான் நனிபள்ளி எனச் சொல்லக் கேட்டுக் காரைகள் கூகைமுல்லை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.
2.055 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலச் சங்க வெண்குழையும் தோடும்  (திருத்தலைச்சங்காடு)   காந்தாரம்   ( செங்கணாயகேசுவரர் சௌந்தரியம்மை)
3.103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொடி உடை மும்மதில் ஊடு  (திருவலம்புரம்)   பழம்பஞ்சுரம்   ( வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
3.112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரசு பாணியர், பாடல் வீணையர்,  (திருப்பல்லவனீச்சரம்)   பழம்பஞ்சுரம்   ( )
1.065 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் தம் புரங்கள் மூன்றும்  (திருப்பல்லவனீச்சரம்)   தக்கேசி   ( பல்லவனேசர் சவுந்தராம்பிகையம்மை)
2.041 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் புகார், வான்புகுவர்; மனம்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))   சீகாமரம்   ( சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
2.038 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))   இந்தளம்   ( சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
2.048 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் காட்டும் நுதலானும், கனல்  (திருவெண்காடு)   சீகாமரம்   ( சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.061 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  (திருவெண்காடு)   காந்தாரம்   ( சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
3.015 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திர மறையவர், வானவரொடும்,இந்திரன், வழிபட  (திருவெண்காடு)   காந்தாரபஞ்சமம்   ( சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.088 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துளி மண்டி உண்டு நிறம்  (தென்திருமுல்லைவாயில்)   பியந்தைக்காந்தாரம்   ( முல்லைவனநாதர் கோதையம்மை)
2.102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அன்ன மென் நடை அரிவையோடு  (திருச்சிரபுரம் (சீர்காழி))   நட்டராகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.031 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரை தரு பவளமும், சீர்  (திருமயேந்திரப்பள்ளி)   கொல்லி   ( திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை)
3.124 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்  (திருக்குருகாவூர் வெள்ளடை)   அந்தாளிக்குறிஞ்சி   ( வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
3.105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடல் வரை இல் மது  (திருக்கலிக்காமூர்)   பழம்பஞ்சுரம்   ( சுந்தரேசுவரர் அழகுவனமுலையம்மை)
1.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கற்றாங்கு எரி ஓம்பி, கலியை  (கோயில் (சிதம்பரம்))   குறிஞ்சி   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் கற்றாங்கு எரியோம்பி ஆடினாய் நறுநெய் என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார்.
1.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்  (திருவேட்களம்)   தக்கராகம்   ( பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
3.044 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த குங்கிலியப்புகை விம்மவேகந்தம் நின்று  (திருக்கழிப்பாலை)   கௌசிகம்   ( பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
2.021 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்அனல்  (திருக்கழிப்பாலை)   இந்தளம்   ( பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
2.026 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புடையின் ஆர் புள்ளி கால்  (திருநெல்வாயில்)   இந்தளம்   ( அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
3.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!  (கோயில் (சிதம்பரம்))   காந்தாரபஞ்சமம்   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
1.089 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை ஆர்தரு பூதப் பகடு  (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்))   குறிஞ்சி   ( நீலகண்டேசுரர் நீலமலர்க்கண்ணம்மை)
1.012 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மத்தா வரை நிறுவி, கடல்  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   நட்டபாடை   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.093 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நின்று மலர் தூவி, இன்று  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   குறிஞ்சி   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.099 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முரசு அதிர்ந்து எழுதரு முது  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   சாதாரி   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.053 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   பழந்தக்கராகம்   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.131 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   மேகராகக்குறிஞ்சி   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
2.064 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   காந்தாரம்   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.034 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்ண மா மலர் கொடு  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   கொல்லி   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.059 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,  (திருத்தூங்கானைமாடம்)   பழந்தக்கராகம்   ( சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை)
2.090 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு  (திருநெல்வாயில் அரத்துறை)   பியந்தைக்காந்தாரம்   ( அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
3.096 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல் வெணெய் விழுது பெய்து  (திருநெல்வெண்ணெய்)   சாதாரி   ( வெண்ணையப்பர் நீலமலர்க்கண்ணம்மை)
2.034 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி  (திருப்பழுவூர்)   இந்தளம்   ( வடவனநாதர் அருந்தவநாயகியம்மை)
3.017 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மரு அமர் குழல் உமை  (திருவிசயமங்கை)   காந்தாரபஞ்சமம்   ( விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
3.071 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோழை மிடறு ஆக, கவி  (திருவைகாவூர்)   சாதாரி   ( வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை)
2.030 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறம் பயம் மலிந்தவர் மதில்  (திருப்புறம்பயம்)   இந்தளம்   ( சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
1.048 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நூல் அடைந்த கொள்கையாலே நுன்  (திருச்சேஞலூர்)   பழந்தக்கராகம்   ( சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)
3.062 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் பொலி நெற்றியினான், திகழ்  (திருப்பனந்தாள்)   பஞ்சமம்   ( சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை)
3.121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;  (திருப்பந்தணைநல்லூர்)   புறநீர்மை   ( )
3.122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்  (திருஓமாம்புலியூர்)   புறநீர்மை   ( )
1.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி உடை மார்பினர், போர்  (திருவாழ்கொளிபுத்தூர்)   தக்கராகம்   ( மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)
2.094 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாகை ஆயிரம் உடையார், சாமமும்  (திருவாழ்கொளிபுத்தூர்)   பியந்தைக்காந்தாரம்   ( மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
2.068 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் அமர் திங்களும் நீரும்  (திருக்கடம்பூர்)   காந்தாரம்   ( அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
2.086 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரையினில் வந்த பாவம், உணர்  (திருநாரையூர்)   பியந்தைக்காந்தாரம்   ( சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காம்பினை வென்ற மென்தோளி பாகம்  (திருநாரையூர்)   பழம்பஞ்சுரம்   ( சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கடல் இடை வெங்கடு நஞ்சம்  (திருநாரையூர்)   பழம்பஞ்சுரம்   ( சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
2.031 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))   இந்தளம்   ( குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)
3.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,நெஞ்சு  (சீர்காழி)   காந்தாரபஞ்சமம்   ( )
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.
3.081 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சங்கு அமரும் முன்கை மட  (சீர்காழி )   சாதாரி   ( தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
2.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செந்நெல் அம் கழனிப் பழனத்து  (திருப்பூந்தராய்)   இந்தளம்   ( )
1.104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்  (திருப்புகலி -(சீர்காழி ))   வியாழக்குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து சேர் விரலாள், பவளத்துவர்  (திருப்பூந்தராய்)   காந்தாரபஞ்சமம்   ( )
3.118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடல் மலி கொன்றை, துன்று  (சீர்காழி)   புறநீர்மை   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.083 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))   பியந்தைக்காந்தாரம்   ( )
2.089 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))   பியந்தைக்காந்தாரம்   ( )
1.117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காடு அது, அணிகலம் கார்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   வியாழக்குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -யாமாமா நீ யாமாமா யாழீகாமா  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   கௌசிகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.067 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுரர் உலகு, நரர்கள் பயில்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   சாதாரி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார். இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் சீர்காழி நகரின் ஒரு பெயர் வந்த வரலாற்றினை கூறுவதால், வழிமொழிப் பதிகம் என பெயர் வந்தது. பாடல்களிலும் முன்பகுதியில் இறைவனது சிறப்பும் பின்பகுதியில் அந்த பெயர் வந்ததற்கான விரிவான தலபுராண வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளன. தலத்தின் பன்னிரண்டு பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல் எனினும், வழக்கமாக தான் குறிப்பிடும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்களை பற்றிய குறிப்பு மற்றும் பதிகத்தை ஓதுவதால் கிடைக்கும் பலங்கள் ஆகியவையும் இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றன. வேகமான சந்தமுடைய பாடல்கள் என்பதால் முடுகு விராகம் என்று இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. சீர்காழியின் இந்த பன்னிரண்டு பெயர்களும் மந்திரம் என்பதால் இந்த பெயர்களை இந்த பதிகத்தில் கொடுத்துள்ள வரிசைப் படியே சொல்ல வேண்டும்.
1.127 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   வியாழக்குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரம் அதே கொளா, உரம்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   பழம்பஞ்சுரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.090 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.128 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓர் உரு ஆயினை; மான்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   வியாழக்குறிஞ்சி   ( )
3.005 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராயமிக்க  (திருப்பூந்தராய்)   காந்தாரபஞ்சமம்   ( )
3.003 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இயல் இசை எனும் பொருளின்  (திருப்புகலி -(சீர்காழி ))   கொல்லி   ( மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
2.029 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,பன்னிய  (திருப்புகலி -(சீர்காழி ))   இந்தளம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.084 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் இயல் உருவினர், பெருகிய  (திருப்புறவம்)   சாதாரி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.075 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம் தமது சிந்தை பிரியாத  (திருச்சண்பைநகர் (சீர்காழி))   சாதாரி   ( )
1.019 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை அணி படர் சடை  (சீர்காழி)   நட்டபாடை   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.094 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்ணவர் தொழுது எழு வெங்குரு  (திருவெங்குரு (சீர்காழி))   சாதாரி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.126 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்தத்தால் வந்து எப்பால் பயின்று  (சீர்காழி)   வியாழக்குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.063 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரி ஆர் மழு ஒன்று  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   தக்கேசி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தண் ஆர் திங்கள், பொங்கு  (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) )   குறிஞ்சி   ( கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை)
1.111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்  (திருக்கடைமுடி (கீழையூர்))   வியாழக்குறிஞ்சி   ( கடைமுடியீசுவரர் அபிராமியம்பிகை)
1.005 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செய் அருகே புனல் பாய,  (கீழைத்திருக்காட்டுப்பள்ளி)   நட்டபாடை   ( ஆரணியச்சுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)
2.043 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))   சீகாமரம்   ( வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
1.018 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,  (திருநின்றியூர்)   நட்டபாடை   ( இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
1.027 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முந்தி நின்ற வினைகள் அவை  (திருப்புன்கூர்)   தக்கராகம்   ( சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
1.097 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று  (திருப்புறவம்)   குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.016 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))   இந்தளம்   ( மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
3.090 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓங்கி மேல் உழிதரும் ஒலி  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)   சாதாரி   ( )
2.099 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்று நன்று, நாளை நன்று  (திருக்கோடி (கோடிக்கரை))   நட்டராகம்   ( கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
2.010 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  (திருமங்கலக்குடி)   இந்தளம்   ( புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
1.013 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குரவம் கமழ் நறு மென்  (திருவியலூர்)   நட்டபாடை   ( யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை)
3.025 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)  (திருந்துதேவன்குடி)   கொல்லி   ( கர்க்கடகேசுவரர் அருமருந்துநாயகியம்மை)
3.095 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்  (திருஇன்னம்பர்)   சாதாரி   ( எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
3.091 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்  (திருவடகுரங்காடுதுறை)   சாதாரி   ( குலைவணங்குநாதர் சடைமுடியம்மை)
1.067 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் மேல் கண்ணும், சடைமேல்  (திருப்பழனம்)   தக்கேசி   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
1.130 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புலன் ஐந்தும் பொறி கலங்கி,  (திருவையாறு)   மேகராகக்குறிஞ்சி   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.006 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  (திருவையாறு)   இந்தளம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.067 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணும் ஓர் பாகம் உடையார்;  (திருப்பெரும்புலியூர்)   காந்தாரம்   ( வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
1.015 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மை ஆடிய கண்டன், மலை  (திருநெய்த்தானம்)   நட்டபாடை   ( நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
3.048 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கை ஆர் அழலன்(ன்), அழகு  (திருமழபாடி)   கௌசிகம்   ( வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
2.009 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  (திருமழபாடி)   இந்தளம்   ( வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
3.028 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காலை ஆர் வண்டு இனம்  (திருமழபாடி)   கொல்லி   ( வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
1.073 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் ஆர் சோதி மன்னு  (திருக்கானூர்)   தக்கேசி   ( செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
1.033 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கணை நீடு எரி, மால்,  (திருஅன்பில் ஆலந்துறை)   தக்கராகம்   ( சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
2.110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,  (திருமாந்துறை)   நட்டராகம்   ( ஐராவணேசுவரர் அழகாயமர்ந்தநாயகியம்மை)
1.044 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துணி வளர் திங்கள் துளங்கி  (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))   தக்கராகம்   ( மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
3.014 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரிடம் பாடலர், அடிகள், காடு  (திருப்பைஞ்ஞீலி)   காந்தாரபஞ்சமம்   ( நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
1.070 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானத்து உயர் தண்மதி தோய்  (திருஈங்கோய்மலை)   தக்கேசி   ( )
1.107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண் நீறு அணிந்து,  (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு))   வியாழக்குறிஞ்சி   ( அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி)
2.072 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து ஆர் விரல் மடவாள்  (திருநணா (பவானி))   காந்தாரம்   ( சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)
1.116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அவ் வினைக்கு இவ் வினை  (பொது -திருநீலகண்டப்பதிகம்)   வியாழக்குறிஞ்சி   ( )
பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
2.069 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமர் மேனியினாரும், பிறை  (திருப்பாண்டிக்கொடுமுடி)   காந்தாரம்   ( கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
2.028 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,  (திருக்கருவூரானிலை (கரூர்))   இந்தளம்   ( பசுபதீசுவரர் கிருபாநாயகியம்மை)
1.135 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீறு சேர்வது ஒர் மேனியர்,  (திருப்பராய்துறை)   மேகராகக்குறிஞ்சி   ( திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
1.043 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடம் திகழ் மென் முலையாளைப்  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))   தக்கராகம்   ( முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
2.120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாந்தம் வெண்நீறு எனப் பூசி,  (திருமூக்கீச்சுரம் (உறையூர்))   செவ்வழி   ( )
2.023 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மழை ஆர் மிடறா! மழுவாள்  (திருவானைக்கா)   இந்தளம்   ( சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
3.109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் அது உண்ட(அ)ரி மலரோன்  (திருவானைக்கா)   பழம்பஞ்சுரம்   ( )
3.053 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானைக் காவல் வெண்மதி மல்கு  (திருவானைக்கா)   கௌசிகம்   ( சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
1.056 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கார் ஆர் கொன்றை கலந்த  (திருப்பாற்றுறை)   பழந்தக்கராகம்   ( திருமூலநாதர் மோகாம்பிகையம்மை)
1.052 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறை உடையாய்! தோல் உடையாய்!  (திருநெடுங்களம்)   பழந்தக்கராகம்   ( நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)
இடர் களையும் பதிகம்
3.029 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாரு மன்னும் முலை மங்கை  (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)   கொல்லி   ( தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை)
3.038 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!  (திருக்கண்டியூர்)   கொல்லி   ( வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
1.028 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செப்பம் நெஞ்சே, நெறி கொள்!  (திருச்சோற்றுத்துறை)   தக்கராகம்   ( தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
3.078 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீறு, வரி ஆடு அரவொடு,  (திருவேதிகுடி)   சாதாரி   ( வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
2.014 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையானை, சந்திரனோடு செங்கண் அராஉடையானை,  (திருவெண்ணியூர்)   இந்தளம்   ( வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
3.027 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்  (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை))   கொல்லி   ( ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை)
1.016 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் உந்து உறு திரள்  (திருப்புள்ளமங்கை)   நட்டபாடை   ( பசுபதிநாயகர் பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை)
2.057 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமரும் திருமேனி உடையீர்!  (திருநல்லூர்)   காந்தாரம்   ( பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
1.086 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொட்டும் பறை சீரால் குழும,  (திருநல்லூர்)   குறிஞ்சி   ( பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
3.083 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு இரிய விண்ட மலர்  (திருநல்லூர்)   சாதாரி   ( பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
3.046 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்து இலங்கு முறுவல்(ல்) உமை  (திருக்கருகாவூர்)   கௌசிகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
3.035 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னை நால் மறை அவை  (திருத்தென்குடித்திட்டை)   கொல்லி   ( பசுபதீசுவரர் உலகநாயகியம்மை)
3.082 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொம்பு இரிய வண்டு உலவு  (திருஅவளிவணல்லூர்)   சாதாரி   ( சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)
3.104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் கொண்ட தூ மதி  (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்))   பழம்பஞ்சுரம்   ( பருதியப்பர் மங்களநாயகியம்மை)
1.008 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புண்ணியர், பூதியர், பூத நாதர்,  (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்))   நட்டபாடை   ( பசுபதீச்சுரர் மங்களநாயகியம்மை)
2.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்டு எலாம் மலர விரை  (திருவலஞ்சுழி)   இந்தளம்   ( காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
2.106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  (திருவலஞ்சுழி)   நட்டராகம்   ( சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)
3.106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பள்ளம் அது ஆய படர்  (திருவலஞ்சுழி)   பழம்பஞ்சுரம்   ( காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
3.073 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் மறை, சூடல் மதி,  (திருப்பட்டீச்சரம்)   சாதாரி   ( பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)
திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.
2.036 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் ஆர் கழலே தொழுவீர்!  (திருஇரும்பூளை (ஆலங்குடி))   இந்தளம்   ( காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை)
3.030 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,  (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்))   கொல்லி   ( பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை)
3.086 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முறி உறு நிறம் மல்கு  (திருச்சேறை (உடையார்கோவில்))   சாதாரி   ( சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
2.046 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்  (திருநாலூர்மயானம்)   சீகாமரம்   ( பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை)
2.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திகழும் திருமாலொடு நான்முகனும்புகழும் பெருமான்;  (திருக்குடவாயில்)   இந்தளம்   ( கோணேசுவரர் பெரியநாயகியம்மை)
2.058 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை வாழும் அம் கையீர்!  (திருக்குடவாயில்)   காந்தாரம்   ( கோணேசுவரர் பெரியநாயகியம்மை)
1.029 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊர் உலாவு பலி கொண்டு,  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))   தக்கராகம்   ( சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
1.071 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை கொள் சடையர்; புலியின்  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))   தக்கேசி   ( சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
2.087 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))   பியந்தைக்காந்தாரம்   ( சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
2.063 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)   காந்தாரம்   ( படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
1.021 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புவம், வளி, கனல், புனல்,  (திருச்சிவபுரம்)   நட்டபாடை   ( பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
1.112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்குரல் இசை கெழும் யாழ்  (திருச்சிவபுரம்)   வியாழக்குறிஞ்சி   ( பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
1.125 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை மலி அகல் அல்குல்  (திருச்சிவபுரம்)   வியாழக்குறிஞ்சி   ( பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
3.059 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அர விரி கோடல் நீடல்  (திருகுடமூக்கு (கும்பகோணம்))   பஞ்சமம்   ( கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
1.072 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் ஆர் கொங்கை மாது  (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்))   தக்கேசி   ( சோமநாதர் தேனார்மொழியம்மை)
3.021 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நனவிலும் கனவிலும், நாளும், தன்  (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்))   காந்தாரபஞ்சமம்   ( சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை)
2.119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,  (திருநாகேச்சுரம்)   செவ்வழி   ( செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
2.024 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் ஏர்தரு மேனியனே! புரியும்மின்  (திருநாகேச்சுரம்)   இந்தளம்   ( செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
1.032 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓடே கலன்; உண்பதும் ஊர்  (திருவிடைமருதூர்)   தக்கராகம்   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.056 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!  (திருவிடைமருதூர்)   காந்தாரம்   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.096 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மன்னி ஊர் இறை; சென்னியார்,  (திருஅன்னியூர் (பொன்னூர்))   குறிஞ்சி   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
1.110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து அவன், வானவர் தானவர்க்கும்பெருந்தகை,  (திருவிடைமருதூர்)   வியாழக்குறிஞ்சி   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நடை மரு திரிபுரம் எரியுண  (திருவிடைமருதூர்)   வியாழக்குறிஞ்சி   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,திரிதரும்  (திருவிடைமருதூர்)   வியாழக்குறிஞ்சி   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.035 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரவக் கெடும், வல்வினை பாரிடம்  (திருத்தென்குரங்காடுதுறை)   இந்தளம்   ( குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
3.004 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இடரினும், தளரினும், எனது உறு  (திருவாவடுதுறை)   காந்தாரபஞ்சமம்   ( மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.
2.013 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  (திருக்கோழம்பம்)   இந்தளம்   ( கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
3.018 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துள மதி உடை மறி  (திருவைகல்மாடக்கோயில்)   காந்தாரபஞ்சமம்   ( வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை)
1.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல்லால் நிழல் மேய கறை  (திருநல்லம்)   குறிஞ்சி   ( உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
3.097 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திடம் மலி மதில் அணி  (திருச்சிறுகுடி)   சாதாரி   ( மங்களேசுவரர் மங்களநாயகியம்மை)
2.020 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொழும் ஆறு வல்லார், துயர்  (திருஅழுந்தூர்)   இந்தளம்   ( வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
2.098 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரைத்தலைப் பசும் பொனோடு அருங்  (திருத்துருத்தி)   நட்டராகம்   ( வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
3.070 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏன எயிறு, ஆடு அரவொடு,  (திருமயிலாடுதுறை)   சாதாரி   ( மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
1.038 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரவு இன்றி நல்மாமலர் கொண்டேஇரவும்  (திருமயிலாடுதுறை)   தக்கராகம்   ( மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
1.025 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மரு ஆர் குழலிமாது ஓர்  (திருச்செம்பொன்பள்ளி)   தக்கராகம்   ( சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)
2.078 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,  (திருவிளநகர்)   காந்தாரம்   ( துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை)
1.134 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருத்தன், கடவுள், கனல் ஏந்தி  (திருப்பறியலூர் (பரசலூர்))   மேகராகக்குறிஞ்சி   ( திருவீரட்டம் )
3.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி  (திருவேட்டக்குடி)   பஞ்சமம்   ( திருமேனியழகீசுவரர் சாந்தநாயகியம்மை)
1.136 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாதர் மடப்பிடியும் மட அன்னமும்  (தருமபுரம்)   யாழ்முரி   ( திருதருமபுரம் பண் - யாழ்மூரி)
ஞானசம்பந்தர் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் சென்றடைந்தார். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர், ஆதலின் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாண ரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர். பாணர், தம் உறவினர் களோடு உரையாடுகையில், அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசையைப் பாணர் உடனிருந்து யாழில் வாசித்து வருதலினாலேயே திருப்பதிக இசை சிறப்படைகிறது என முகமன் உரை கூறினர். அதைக் கேட்டு மனம் பொறாது ஞானசம்பந்தரை வணங்கித் திருப்பதிக இசை யாழில் அடங்காதது என்பதனை உறவினர்கள் உணருமாறு செய்தருள வேண்டுமெனப் பணிந்தார். ஞானசம்பந்தர் கண்டத்திலும் கருவி யிலும் அடங்காத இசைக் கூறுடைய மாதர் மடப்பிடி என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்தார்.
1.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -போகம் ஆர்த்த பூண் முலையாள்  (திருநள்ளாறு)   பழந்தக்கராகம்   ( தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
2.052 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,  (திருக்கோட்டாறு)   சீகாமரம்   ( ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
3.012 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,  (திருக்கோட்டாறு)   காந்தாரபஞ்சமம்   ( ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
3.058 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்  (திருச்சாத்தமங்கை)   பஞ்சமம்   ( அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை)
1.084 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   குறிஞ்சி   ( காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
2.116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   செவ்வழி   ( காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
2.008 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் உலாவும் மதி வந்து  (திருச்சிக்கல்)   இந்தளம்   ( நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை)
2.105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் உலாவிய சடையினர், விடையினர்,  (திருக்கீழ்வேளூர்)   நட்டராகம்   ( அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)
3.063 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!  (திருச்செங்காட்டங்குடி)   பஞ்சமம்   ( கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
1.061 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறை கொண்ட மலர் தூவி,  (திருச்செங்காட்டங்குடி)   பழந்தக்கராகம்   ( கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
2.018 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையாய்! எனுமால்; சரண் நீ!  (திருமருகல்)   இந்தளம்   ( மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
1.006 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)   நட்டபாடை   ( மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி)
திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத் தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து அங்கமும் வேதமும் என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச் சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார்.
1.115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சங்கு ஒளிர் முன் கையர்  (திருஇராமனதீச்சரம்)   வியாழக்குறிஞ்சி   ( இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை)
2.115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு குழல்  (திருப்புகலூர்)   செவ்வழி   ( வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
2.092 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பட்டம், பால்நிற மதியம், படர்  (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்)   பியந்தைக்காந்தாரம்   ( வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
2.108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடி கொள் மேனியர், வான  (திருவிற்குடிவீரட்டம்)   நட்டராகம்   ( வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை)
1.105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடலன் நால்மறையன்; படி பட்ட  (திருவாரூர்)   வியாழக்குறிஞ்சி   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
2.101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பருக் கை யானை மத்தகத்து  (திருவாரூர்)   நட்டராகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
1.091 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்பத்தி  (திருவாரூர்)   குறிஞ்சி   ( வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
3.045 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அந்தம் ஆய், உலகு ஆதியும்  (திருவாரூர்)   கௌசிகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
1.050 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,  (திருவலிவலம்)   பழந்தக்கராகம்   ( மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
1.123 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ இயல் புரிகுழல்; வரிசிலை  (திருவலிவலம்)   வியாழக்குறிஞ்சி   ( மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
1.062 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நாள் ஆய போகாமே, நஞ்சு  (திருக்கோளிலி (திருக்குவளை))   பழந்தக்கராகம்   ( கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
3.050 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,சுரும்பும்  (திருத்தண்டலைநீணெறி)   கௌசிகம்   ( நீணெறிநாதேசுவரர் ஞானாம்பிகையம்மை)
2.079 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பவனம் ஆய், சோடை ஆய்,  (திருவாரூர்)   காந்தாரம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
1.037 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரவச் சடை மேல் மதி,  (திருப்பனையூர்)   தக்கராகம்   ( சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
1.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குறி கலந்த இசை பாடலினான்,  (திருப்புகலூர்)   நட்டபாடை   ( அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
2.103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புல்கு பொன் நிறம் புரி  (திருஅம்பர்மாகாளம்)   நட்டராகம்   ( காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
1.083 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் புரம் மூன்றும் அனல்வாய்  (திருஅம்பர்மாகாளம்)   குறிஞ்சி   ( காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
3.093 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படியுள் ஆர் விடையினர், பாய்  (திருஅம்பர்மாகாளம்)   சாதாரி   ( காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
3.019 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரிதர அனல் கையில் ஏந்தி,  (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்))   காந்தாரபஞ்சமம்   ( பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை)
3.008 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடை உடையானும், நெய் ஆடலானும்,  (திருக்கடவூர் வீரட்டம்)   காந்தாரபஞ்சமம்   ( அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
2.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரிய மறையார், பிறையார், மலை  (திருக்கடவூர் மயானம்)   காந்தாரம்   ( பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
2.042 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அக்கு இருந்த ஆரமும், ஆடு  (திருஆக்கூர்)   சீகாமரம்   ( சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)
2.062 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காயச் செவ்விக் காமற் காய்ந்து,  (திருமீயச்சூர்)   காந்தாரம்   ( முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
1.041 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் அணி திகழ் திருமார்பில்  (திருப்பாம்புரம்)   தக்கராகம்   ( பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி)
1.035 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரை ஆர் விரி கோவண  (திருவீழிமிழலை)   தக்கராகம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.011 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடை ஆர் புனல் உடையான்,  (திருவீழிமிழலை)   நட்டபாடை   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.042 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைம் மா நாகம், பல்மலர்க்  (திருப்பேணுபெருந்துறை)   தக்கராகம்   ( சிவாநந்தநாதர் மலையரசியம்மை)
2.118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,  (திருதிலதைப்பதி (மதிமுத்தம்))   செவ்வழி   ( மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)
1.004 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மைம் மரு பூங்குழல் கற்றை  (திருவீழிமிழலை)   நட்டபாடை   ( பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
கோயிலின் வடபால் உள்ள திருமடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அங்கிருக்கும் நாள்களில் திலதைப்பதி, பேணு பெருந்துறை என்ற தலங்களை ஞானசம்பந்தர் வழிபட்டுப் போற்றி னார். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது எங்களோடு சீகாழிக்கு வந்தருள வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி அன்றிரவு துயில் கொண்டார். பெருமான் அவர் தம் கனவில் தோன்றி யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை நீ வீழிமிழலையிலேயே காணலாம் எனக் கூறக் கேட்டு விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக் காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு மைம் மருபூங் குழல் எனத் திருப்பதிகம் பாடிப் பரவினார், காழிமக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.
1.020 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தட நிலவிய மலை நிறுவி,  (திருவீழிமிழலை)   நட்டபாடை   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இரும் பொன்மலை வில்லா, எரி  (திருவீழிமிழலை)   குறிஞ்சி   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்மலர்  (திருவீழிமிழலை)   வியாழக்குறிஞ்சி   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,  (திருவீழிமிழலை)   மேகராகக்குறிஞ்சி   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்  (திருவீழிமிழலை)   காந்தாரபஞ்சமம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் மருவு தேசினொடு தேசம்  (திருவீழிமிழலை)   சாதாரி   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு ஒளி விரிதரு மலர்  (திருவீழிமிழலை)   சாதாரி   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெண்மதி தவழ் மதில் மிழலை  (திருவீழிமிழலை)   சாதாரி   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேலின் நேர்தரு கண்ணினாள் உமை  (திருவீழிமிழலை)   பழம்பஞ்சுரம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்று கொன்றை நம் சடையதே;  (திருவீழிமிழலை)   பழம்பஞ்சுரம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;  (திருவீழிமிழலை)   புறநீர்மை   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாசி தீரவே, காசு நல்குவீர்!மாசு  (திருவீழிமிழலை)   குறிஞ்சி   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
2.007 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  (திருவாஞ்சியம்)   இந்தளம்   ( வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
3.064 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை  (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை))   பஞ்சமம்   ( பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை)
1.058 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரியும், நம் வினை உள்ளன  (திருக்கரவீரம்)   பழந்தக்கராகம்   ( கரவீரேசுவரர் பிரத்தியட்சமின்னாளம்மை)
3.088 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மத்தகம் அணி பெற மலர்வது  (திருவிளமர்)   சாதாரி   ( பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை)
2.015 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை  (திருக்காறாயில் (திருக்காறைவாசல்))   இந்தளம்   ( கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை)
2.082 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண் நிலாவிய மொழி உமை  (திருத்தேவூர்)   காந்தாரம்   ( தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
3.074 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காடு பயில் வீடு, முடை  (திருத்தேவூர்)   சாதாரி   ( தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
2.019 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறத்தால் உயிர் காவல் அமர்ந்து  (திருநெல்லிக்கா)   இந்தளம்   ( நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை)
2.045 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தையல் ஓர் கூறு உடையான்,  (கைச்சின்னம் (கச்சன்னம்))   சீகாமரம்   ( கைச்சினநாதர் வேள்வளையம்மை)
2.093 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புரை செய் வல்வினை தீர்க்கும்  (திருத்தெங்கூர்)   பியந்தைக்காந்தாரம்   ( வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை)
3.016 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிணம் படு சுடலையில், நீறு  (திருக்கொள்ளிக்காடு)   காந்தாரபஞ்சமம்   ( அக்கினீசுவரர் பஞ்சினுமெல்லடியம்மை)
2.109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி  (திருக்கோட்டூர்)   நட்டராகம்   ( கொழுந்தீசுவரர் தேன்மொழிப்பாவையம்மை)
3.061 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய  (திருவெண்டுறை)   பஞ்சமம்   ( வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை)
3.042 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிறை வெண் திங்கள் வாள்முக  (திருச்சிற்றேமம்)   கொல்லிக்கௌவாணம்   ( பொன்வைத்தநாதர் அகிலாண்டேசுவரியம்மை)
2.051 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீருள் ஆர் கயல் வாவி  (திருக்களர்)   சீகாமரம்   ( களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை)
1.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிலை தனை நடு இடை  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   நட்டபாடை   ( மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.091 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பியந்தைக்காந்தாரம்   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
3.076 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல் பொலி சுரத்தின் எரி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   சாதாரி   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.037 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்மதுரம்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   இந்தளம்   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார் கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக என வேண்டினார். அப்பர் பண்ணினேர் மொழியாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் சதுரம் மறை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.
2.111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் என  (திருவாய்மூர்)   நட்டராகம்   ( வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
2.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேய் உறு தோளி பங்கன்,  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பியந்தைக்காந்தாரம்   ( )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
2.076 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாடிய வெண்தலை மாலை சூடி,  (திருஅகத்தியான்பள்ளி)   காந்தாரம்   ( அகத்தீசுவரர் மங்கைநாயகியம்மை)
2.104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் மேனி வெண்  (திருக்கடிக்குளம்)   நட்டராகம்   ( கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)
1.017 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்  (திருஇடும்பாவனம்)   நட்டபாடை   ( சற்குணநாதர் மங்களநாயகியம்மை)
3.033 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீர் இடைத் துயின்றவன், தம்பி,  (திருவுசாத்தானம் (கோவிலூர்))   கொல்லி   ( மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
1.014 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானில் பொலிவு எய்தும் மழை  (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை))   நட்டபாடை   ( கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)
1.094 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலமாமிடற்று ஆலவாயிலான்பால் அது ஆயினார்  (திருஆலவாய் (மதுரை))   குறிஞ்சி   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறை யாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந் தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக என வாழ்த்தினார். குலச்சிறையார் இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி அதுவே திருவால வாய் எனக் கூறக்கேட்டு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்து நீலமாமிடற்று எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
3.120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  (திருஆலவாய் (மதுரை))   புறநீர்மை   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
1.095 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு ஓர் காதினன்; பாடு  (திருவிடைமருதூர்)   குறிஞ்சி   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
3.051 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செய்யனே! திரு ஆலவாய் மேவியஐயனே!  (திருஆலவாய் (மதுரை))   கௌசிகம்   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
3.047 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காட்டு மா அது உரித்து,  (திருஆலவாய் (மதுரை))   கௌசிகம்   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
குலச்சிறையார் அரசனை அணுகி ஞானசம்பந்தர் திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம் என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து அவரை அழைப்பீராக என்று கூறினான். சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை பிறழேன் என மறுத்தான். குலச்சிறை யாரும் அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத் திருமடத் திற்குத் தீயிட்ட செயலுக்கு மிக வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால் வாடுவதை விண்ணப்பித்துத் தாங்கள் எழுந்தருளி நோயைக் குணப்படுத்தினால் உய்வோம் எனக் கூறி நின்றனர். ஞான சம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம் எனக் கூறிப் புறப்பட்டுத் திருக் கோயிலை அடைந்து காட்டு மாவது உரித்து என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்தார்.
3.108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேத வேள்வியை நிந்தனை செய்து  (திருஆலவாய் (மதுரை))   பழம்பஞ்சுரம்   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.
2.070 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  (திருஆலவாய் (மதுரை))   காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் நுமது ஊர் எது எனக் கேட்கப் பிரமனூர் என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.
3.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மானின் நேர் விழி மாதராய்!  (திருஆலவாய் (மதுரை))   கொல்லி   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திரம் ஆவது நீறு; வானவர்  (திருஆலவாய் (மதுரை))   காந்தாரம்   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
3.087 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் ஒளி  (திருஆலவாய் (மதுரை))   சாதாரி   ( தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்ல லாம் என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையைக் கூறுங்கள் என்றார். சமணர்கள் இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம் என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். போகமார்த்த பூண்முலையாள் என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி தளிரிள வள ரொளி என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது.சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்பெறுவதாயிற்று.
3.054 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாழ்க அந்தணர், வானவர், ஆன்  (திருஆலவாய் (மதுரை))   கௌசிகம்   ( )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
3.032 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னியும் மத்தமும் மதி பொதி  (திருஆலவாய் (மதுரை))   கொல்லி   ( )
3.052 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வீடு அலால் அவாய் இலாஅய்,  (திருஆலவாய் (மதுரை))   கௌசிகம்   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
திருப்பதிகப் பாடலில் வேந்தனும் ஓங்குக என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் வன்னியும் மத்தமும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ் வேடு வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது. குலச் சிறையார் அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார். சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். ஞானசம்பந்தர் பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று வீடலால வாயிலாய் என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.
3.115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆல நீழல் உகந்தது இருக்கையே;  (திருஆலவாய் (மதுரை))   பழம்பஞ்சுரம்   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.024 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  (திருக்கழுமலம் (சீர்காழி))   கொல்லி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
1.100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடு அலர் சோதி வெண்பிறையோடு  (திருப்பரங்குன்றம்)   குறிஞ்சி   ( பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)
1.088 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முற்றும் சடை முடி மேல்  (திருஆப்பனூர்)   குறிஞ்சி   ( ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை)
1.026 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு வெறி  (திருப்புத்தூர்)   தக்கராகம்   ( புத்தூரீசர் சிவகாமியம்மை)
1.064 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறை ஆர் புனலும் மா  (திருப்பூவணம்)   தக்கேசி   ( பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
3.020 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது அமர் மேனியன் ஆகி,  (திருப்பூவணம்)   காந்தாரபஞ்சமம்   ( பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
3.026 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிடி எலாம் பின் செல,  (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்))   கொல்லி   ( காளையீசுவரர் மகமாயியம்மை)
1.099 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வம்பு ஆர் குன்றம், நீடு  (திருக்குற்றாலம்)   குறிஞ்சி   ( குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை)
2.071 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்த மதி சூடி, தெண்  (திருக்குறும்பலா (குற்றாலம்))   காந்தாரம்   ( குறும்பலாநாதர் குழன்மொழியம்மை)
3.092 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து அவை; மந்திரம், மறுமை  (திருநெல்வேலி)   சாதாரி   ( )
3.010 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அலை, வளர் தண்மதியோடு அயலே  (திருஇராமேச்சுரம்)   காந்தாரபஞ்சமம்   ( இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
3.101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரிதரு மா மணி நாகம்  (திருஇராமேச்சுரம்)   சாதாரி   ( இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
3.123 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிரை கழல் அரவம் சிலம்பு  (திருக்கோணமலை)   புறநீர்மை   ( கோணீசர் மாதுமையம்மை)
2.107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விருது குன்ற, மாமேரு வில்,  (திருக்கேதீச்சரம்)   நட்டராகம்   ( கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை)
2.112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது ஓர் கூறு உகந்து,  (திருவாடானை)   நட்டராகம்   ( ஆதிரத்தினேசுவரர் அம்பாயிரவல்லியம்மை)
3.011 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,  (திருப்புனவாயில்)   காந்தாரபஞ்சமம்   ( புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)
1.108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்  (திருப்பாதாளீச்சரம்)   வியாழக்குறிஞ்சி   ( )
3.006 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்நட்டம் ஆடிய  (திருக்கொள்ளம்பூதூர்)   காந்தாரபஞ்சமம்   ( வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
கொள்ளம்பூதூர் எல்லையில் முள்ளியாறு வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடம் செலுத்துவோர் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக் கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றிக் கொட்டமே கமழும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஓடம் தானே மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது.
1.007 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடக மெல் அடிப் பாவையோடும்,  (திருநள்ளாறும் திருஆலவாயும்)   நட்டபாடை   ( தெர்ப்பாரணியேசுவரர் சொக்கநாதசுவாமி போகமார்த்தபூண்முலையம்மை மீனாட்சியம்மை)
ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய நள்ளாற்றிறைவன் மீது பாடகமெல்லடி என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
2.033 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏடு மலி கொன்றை, அரவு,  (திருநள்ளாறு)   இந்தளம்   ( தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
2.003 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  (திருத்தெளிச்சேரி)   இந்தளம்   ( பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)
1.036 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை ஆர் மதியோடு உர  (திருவையாறு)   தக்கராகம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
1.120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பணிந்தவர் அருவினை பற்று அறுத்து  (திருவையாறு)   வியாழக்குறிஞ்சி   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.032 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு  (திருவையாறு)   இந்தளம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
3.113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உற்று உமை சேர்வது மெய்யினையே;  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   பழம்பஞ்சுரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.077 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் இயல் பொருப்பு அரையன்  (திருமாணிகுழி)   சாதாரி   ( மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை)
2.121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னம் நின்ற முடக்கால் முயற்கு  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))   செவ்வழி   ( தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
1.087 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடு கூர் எரிமாலை அணிவர்;  (திருவடுகூர் (ஆண்டார்கோவில்))   குறிஞ்சி   ( வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை)
3.060 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி மா மிடற்றான்,  (திருவக்கரை)   பஞ்சமம்   ( சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை)
2.117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்டு கங்கை சடையில் கரந்தும்,  (திருஇரும்பைமாகாளம்)   செவ்வழி   ( மாகாளேசுவரர் குயிலம்மை)
1.046 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குண்டைக் குறள் பூதம் குழும,  (திருவதிகை வீரட்டானம்)   தக்கராகம்   ( அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
2.050 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குன்ற வார்சிலை, நாண் அரா,  (திருஆமாத்தூர்)   சீகாமரம்   ( அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
2.044 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்னம் பெய் கோவணமும் தோலும்  (திருஆமாத்தூர்)   சீகாமரம்   ( அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
2.100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை கொள் கூற்றம் வந்து,  (திருக்கோவலூர் வீரட்டம்)   நட்டராகம்   ( வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
2.077 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்  (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்))   காந்தாரம்   ( அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை)
1.010 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  (திருவண்ணாமலை)   நட்டபாடை   ( அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.069 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ ஆர் மலர் கொண்டு  (திருவண்ணாமலை)   தக்கேசி   ( அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.054 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூத் தேர்ந்து ஆயன கொண்டு,  (திருஓத்தூர் (செய்யாறு))   பழந்தக்கராகம்   ( வேதநாதர் இளமுலைநாயகியம்மை)
ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, பூத்தேர்ந்தாயன என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
3.072 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விங்கு விளை கழனி, மிகு  (திருமாகறல்)   சாதாரி   ( அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)
1.031 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விழுநீர், மழுவாள் படை, அண்ணல்  (திருக்குரங்குஅணில்முட்டம்)   தக்கராகம்   ( வாலீசுவரர் இறையார்வளையம்மை)
2.012 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறையானை, மாசு இலாப் புன்சடை  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   இந்தளம்   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பழம்பஞ்சுரம்   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.041 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரு ஆர் கச்சித் திரு  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   கொல்லி   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
1.133 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   மேகராகக்குறிஞ்சி   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.065 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் அணவு முலை மங்கை  (திருக்கச்சிநெறிக்காரைக்காடு)   பஞ்சமம்   ( காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை)
1.055 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,  (திருமாற்பேறு)   பழந்தக்கராகம்   ( மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
1.114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குருந்து அவன், குருகு அவன்,  (திருமாற்பேறு)   வியாழக்குறிஞ்சி   ( மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
1.113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;தரித்தவன்,  (திருவல்லம்)   வியாழக்குறிஞ்சி   ( வல்லநாதர் வல்லாம்பிகையம்மை)
1.076 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,  (திருஇலம்பையங்கோட்டூர்)   குறிஞ்சி   ( சந்திரசேகரர் கோடேந்துமுலையம்மை)
3.023 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உருவின் ஆர் உமையொடும் ஒன்றி  (திருவிற்கோலம் (கூவம்))   காந்தாரபஞ்சமம்   ( புராந்தகேசுவரர் புராந்தரியம்மை)
1.106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாறு இல் அவுணர் அரணம்  (திருஊறல் (தக்கோலம்))   வியாழக்குறிஞ்சி   ( உமாபதீசுவரர் உமையம்மை)
1.119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முள்ளின் மேல் முது கூகை  (திருக்கள்ளில்)   வியாழக்குறிஞ்சி   ( சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை)
1.045 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்  (திருவாலங்காடு (பழையனூர்))   தக்கராகம்   ( ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)
திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம் , காம கோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங் களைப் போற்றிக் காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங் காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து துஞ்சவருவாரும் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
2.060 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிந்தை இடையார், தலையின் மிசையார்,  (திருப்பாசூர்)   காந்தாரம்   ( பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
3.069 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது  (திருக்காளத்தி)   சாதாரி   ( காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
1.068 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் உருவர், புலியின்  (திருக்கயிலாயம்)   தக்கேசி   ( கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாள வரி கோள புலி  (திருக்கயிலாயம்)   சாதாரி   ( கயிலாயநாதர் பார்வதியம்மை)
2.114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு  (திருக்கேதாரம்)   செவ்வழி   ( கேதாரேசுவரர் கௌரியம்மை)
3.079 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்  (திருகோகர்ணம் (கோகர்ணா))   சாதாரி   ( மாபலநாதர் கோகரணநாயகியம்மை)
1.118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))   வியாழக்குறிஞ்சி   ( பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)
2.027 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்துஇலகு  (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்))   இந்தளம்   ( நீலாசலநாதர் நீலாம்பிகையம்மை)
2.005 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்  (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்))   இந்தளம்   ( அருள்மன்னர் மனோன்மணியம்மை)
3.036 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சந்தம், ஆர், அகிலொடு, சாதி,  (திருக்காளத்தி)   கொல்லி   ( காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
1.057 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;  (திருவேற்காடு)   பழந்தக்கராகம்   ( வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)
1.003 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பத்தரோடு பலரும் பொலிய மலர்  (திருவலிதாயம் (பாடி))   நட்டபாடை   ( வலிதாயநாதர் தாயம்மை)
3.057 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடையவன், விண்ணும் மண்ணும் தொழ  (திருவொற்றியூர்)   பஞ்சமம்   ( மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
2.047 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு இட்ட புன்னை அம்கானல்  (திருமயிலை (மயிலாப்பூர்))   சீகாமரம்   ( கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
2.004 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரை உலாம் கடலில் பொலி  (திருவான்மியூர்)   இந்தளம்   ( மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
3.055 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரை ஆர் கொன்றையினாய்! விடம்  (திருவான்மியூர்)   கௌசிகம்   ( மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
1.078 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரி வளர் அவிர் ஒளி  (திருஇடைச்சுரம்)   குறிஞ்சி   ( இடைச்சுரநாதர் இமயமடக்கொடியம்மை)
1.103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடையான் ஒரு காதில்-தூய  (திருக்கழுக்குன்றம்)   குறிஞ்சி   ( வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
1.077 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் திரண்டன்ன புரிசடை புரள,  (திருஅச்சிறுபாக்கம்)   குறிஞ்சி   ( பாக்கபுரேசர் சுந்தரமாதம்மை)
2.095 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் வண்டு அறை கொன்றை,  (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு))   பியந்தைக்காந்தாரம்   ( அரைசிலிநாதர் பெரியம்மை)
2.053 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ  (திருப்புறவார்பனங்காட்டூர்)   சீகாமரம்   ( பனங்காட்டீசுவரர் திருப்புருவமின்னாளம்மை)
1.051 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கண் ஆனை ஈர்  (திருச்சோபுரம் (தியாகவல்லி))   பழந்தக்கராகம்   ( சோபுரநாதர் சோபுரநாயகியம்மை)
1.009 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு ஆர் குழல் அரிவையொடு  (திருவேணுபுரம் (சீர்காழி))   நட்டபாடை   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.097 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நம் பொருள், நம் மக்கள்  (சீர்காழி)   நட்டராகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.065 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி வேல் இலர்போலும்;  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.037 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரம் முனம் மலரால், புனல்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   கொல்லி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.056 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இறையவன், ஈசன், எந்தை, இமையோர்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   பஞ்சமம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் வழி நடைவருத் தத்தை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி ஞானசம் பந்தன் நம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள் ளோம் எடுத்துச்சென்று கொடுத்து அழைத்து வருக எனப் பணித் தருளினான். அவ்வாறே இறைவன் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி யாம் அளிக்கும் பொருள்களை ஏற்று வருக எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப் பொருள்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து எந்தை ஈசன் எம்பெருமான் என்ற திருப்பதிகத்தால்,இறையருளை வியந்து புறப்பட்டுச் சென்று அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார்.
2.017 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிலவும், புனலும், நிறை வாள்  (திருவேணுபுரம் (சீர்காழி))   இந்தளம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.081 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!ஓதத்தின்  (திருவேணுபுரம் (சீர்காழி))   காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.030 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விதி ஆய், விளைவு ஆய்,  (திருப்புகலி -(சீர்காழி ))   தக்கராகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.025 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உகலி ஆழ்கடல் ஓங்கு பார்  (திருப்புகலி -(சீர்காழி ))   இந்தளம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.054 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்  (திருப்புகலி -(சீர்காழி ))   சீகாமரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடை அது ஏறி, வெறி  (திருப்புகலி -(சீர்காழி ))   செவ்வழி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.007 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் நுதலானும், வெண் நீற்றினானும்,  (திருப்புகலி -(சீர்காழி ))   காந்தாரபஞ்சமம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.075 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காலை நல்மாமலர் கொண்டு அடி  (திருவெங்குரு (சீர்காழி))   குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.060 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண் தரங்கப் புனல் கமல  (சீர்காழி )   பழந்தக்கராகம்   ( தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
3.100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,  (சீர்காழி )   சாதாரி   ( தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
3.013 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் அன எயிறு உடை  (திருப்பூந்தராய்)   காந்தாரபஞ்சமம்   ( )
1.047 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பல் அடைந்த வெண் தலையில்  (திருச்சிரபுரம் (சீர்காழி))   பழந்தக்கராகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் உறு வனமுலை மங்கை  (திருச்சிரபுரம் (சீர்காழி))   வியாழக்குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.098 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நன்று உடையானை, தீயது இலானை,  (திருச்சிராப்பள்ளி)   குறிஞ்சி   ( தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
1.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பங்கம் ஏறு மதி சேர்  (திருச்சண்பைநகர் (சீர்காழி))   தக்கேசி   ( )
1.034 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடல் ஏறு அமரும் கொடி  (சீர்காழி)   தக்கராகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.081 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லார், தீ மேவும் தொழிலார்,  (சீர்காழி)   குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரவு ஆர் கலையின் கவிதைப்  (சீர்காழி)   குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.011 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்வல்லானை,  (சீர்காழி)   இந்தளம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண்ணின் நேர் மொழி மங்கைமார்  (சீர்காழி)   சீகாமரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.059 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலம் கொள் முத்தும் மணியும்  (சீர்காழி)   காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.075 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்  (சீர்காழி)   காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.096 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்புரி வளரும் பொற்பு  (சீர்காழி)   பியந்தைக்காந்தாரம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி இலங்கும் திருமேனியாளர், புலி  (சீர்காழி)   செவ்வழி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.043 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சந்தம் ஆர் முலையாள் தன  (சீர்காழி)   கௌசிகம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.089 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்து மா களிற்று இள  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))   சாதாரி   ( )
1.079 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் உறு படையினர்; விடையினர்;  (சீர்காழி)   குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.129 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சே உயரும் திண் கொடியான்  (சீர்காழி)   மேகராகக்குறிஞ்சி   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  (சீர்காழி)   இந்தளம்   ( )
3.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல்லால் நீழல் அல்லாத் தேவைநல்லார்  (சீர்காழி)   கொல்லி   ( )
3.125 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல் ஊர்ப் பெரு மணம்  (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்))   அந்தாளிக்குறிஞ்சி   ( சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை)
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்னும் நினைவினராய் இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம் என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று கல்லூர்ப் பெருமணம் வேண்டா எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
3.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம்)   கௌசிகம்   ( )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
3.901 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்பிறியாத  (திருவிடைவாய்)     ( )
3.902 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்சீர்சி  (திருக்கிளியன்னவூர்)     ( )

This page was last modified on Fri, 15 Dec 2023 20:46:37 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_historical_order.php