sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
6.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரியானை, அந்தணர் தம் சிந்தை
பெரியதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=OC5AJDOyUGs
6.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   மங்குல் மதி தவழும் மாட
புக்கதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8XU3EbcF0DM
6.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
ஏழைத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=cKBYEE8irqE
6.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   சந்திரனை மா கங்கைத் திரையால்
அடையாளத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=Fhn2zaa0d8g
6.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
போற்றித்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=heBfq8uMYc0
6.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
காப்புத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=R_eoKaUD4Cs
6.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   விற்று ஊண் ஒன்று இல்லாத
திருத்தாண்டகம்   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=PHR3JLFtuIk
6.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணங்கள் தாம் பாடி, வந்து
திருத்தாண்டகம்   (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=i8Pv6biHxdI
6.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்  பூண்டார்;நூல்
திருத்தாண்டகம்   (திருப்பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் காம்பன்னதோளியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=rBP-WYYMCq4
6.011   திருநாவுக்கரசர்   தேவாரம்   பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
திருத்தாண்டகம்   (திருப்புன்கூரும் திருநீடூரும் சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=aBXPkk1gHx0
6.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
திருத்தாண்டகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=yyZzVNrCw50
6.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   நினைந்து உருகும் அடியாரை நைய
திருத்தாண்டகம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=S9-5_R-n1R0
6.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   குருகு ஆம்; வயிரம் ஆம்;
திருத்தாண்டகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pAmABtxi5nA
6.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப்படை உடையார் தாமே போலும்;
திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=6n1Oi9pN0ec
6.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=tnH6jbo3c98
6.018   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடி ஏறு திரிசூலம் தோன்றும்
திருத்தாண்டகம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
6.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
திருத்தாண்டகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XBV0vMkPOq4
6.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)
திருத்தாண்டகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HpYN_BrOtTU
6.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முடித் தாமரை அணிந்த மூர்த்தி
திருத்தாண்டகம்   (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg
6.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
திருத்தாண்டகம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mbK6F7eIxSY
6.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் அனைய சோதி
திருத்தாண்டகம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8qlEoNzqpXs
6.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mjAAy3BfEDE
6.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   உயிரா வணம் இருந்து, உற்று
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_aAV_RYUNto
6.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற  
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Q5VU-R7MCKg
6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9zK-eWS155o
6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Gs8cErbLXSY
6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=y6Gz9xn36Vk
6.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BC6LZz53r5g
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=c0llPrAgTrM
6.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் கை மதகரி உரிவைப்
அரநெறிதிருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=cziBzD2YS60
6.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=QI0JWVkFJDk
6.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் மேனித் தூநீறு
திருத்தாண்டகம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=hFvs40KR2kA
6.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் கடல் நஞ்சம்
திருத்தாண்டகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bZeeVHZ0J_I
6.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UniZhDqA0sk
6.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓசை ஒலி எலாம் ஆனாய்,
திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qIn-C_vMWG0
6.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு ஏறு திருமேனி உடையான்
திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_NKLqKVOpKA
6.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=s6naaNXL7j0
6.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   வகை எலாம் உடையாயும் நீயே
திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AFH4Ba5tTRo
6.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=eDHS5pl3gwA
6.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
திருத்தாண்டகம்   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=VY4BBCiv1J0
6.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
திருத்தாண்டகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=QksZ4vO04UU
6.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
திருத்தாண்டகம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Jp1uAZEaQA4
6.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=aONsKzVnCNw
6.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவே, என் செல்வமே, தேனே,
திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BNhQkPjS49Q
6.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்
திருத்தாண்டகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XjYKEwzWN_4
6.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்;
திருத்தாண்டகம்   (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=n_PbUkZ-gEA
6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   போர் ஆனை ஈர் உரிவைப்
திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=ZTYW9CUiCFc
6.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=H8CIDonOWZw
6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் அவன் காண்; கண்
திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=CkYRX-JSV7w
6.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   மான் ஏறு கரம் உடைய
திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=eCv3gJgFeu0
6.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
திருத்தாண்டகம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mpXiqrBMFK4
6.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொறை உடைய பூமி, நீர்,
போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pKyyHEruu5Y
6.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KrQ2A0SoGVc
6.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   மண் அளந்த மணி வண்ணர்
திருத்தாண்டகம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fs5u5igGi7o
6.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்
திருத்தாண்டகம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=exDBQf7Zoj4
6.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி
திருத்தாண்டகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=R34xLCd86Cg
6.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாதினை ஓர் கூறு உகந்தாய்!
திருத்தாண்டகம்   (திருக்கன்றாப்பூர் நடுதறிநன்னாயகர் மாதுமைநாயகியம்மை)
6.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தாயர், எத் தந்தை,
திருத்தாண்டகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nIoYJV0po7E
6.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி
திருத்தாண்டகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4IjVEJV0c6Q
6.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த
திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fvi9irZiev0
6.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   உரித்தவன் காண், உரக் களிற்றை
திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4sksPIUARVw
6.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
திருத்தாண்டகம்   (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xcgu5XmwG8M
6.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்
திருத்தாண்டகம்   (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)
6.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
திருத்தாண்டகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=uJX2Zs71xfY
6.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,
திருத்தாண்டகம்   (திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணவீசுவரர் மைமேவுங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1OArubB8AdQ
6.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்
திருத்தாண்டகம்   (பொது -அடைவுத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=6DIhALQKGjY
Audio: https://www.youtube.com/watch?v=_h7Ni6-aIaw
6.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் புனல் கங்கை
திருத்தாண்டகம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
6.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   கருமணி போல் கண்டத்து அழகன்
திருத்தாண்டகம்   (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LrztdYztjPU
6.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
திருத்தாண்டகம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xKwqTlNy4cs
6.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல் மலிந்த மறைநான்கு ஆறு
திருத்தாண்டகம்   (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xP-cvfkZWSQ
6.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   புரிந்து அமரர் தொழுது ஏத்தும்
திருத்தாண்டகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_IAxIoG1ly8
6.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட அடியார், பரவக் கண்டேன்;
திருத்தாண்டகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dW7dH_3fNrg
6.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
திருத்தாண்டகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jqqWSyfJW3w
6.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்
திருத்தாண்டகம்   (திருத்தலையாலங்காடு ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=udkcrtC1m1A
6.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரானை; பாரினது பயன் ஆனானை;
திருத்தாண்டகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=a7WooUMXuEM
6.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் தலம் சேர் நெற்றி
திருத்தாண்டகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=SggFtlZ_vRU
6.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
திருத்தாண்டகம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=7q7wO_NpGbU
6.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண் ஆகி, நிலன் ஆகி,
திருத்தாண்டகம்   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=27tcQZPa5i4
6.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
திருத்தாண்டகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=74eetbWjWn0
6.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆர்த்தான் காண், அழல் நாகம்
திருத்தாண்டகம்   (திருமுண்டீச்சுரம் முண்டீசுவரர் கானார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pgF5vU7Ih60
6.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்
திருத்தாண்டகம்   (திருஆலம்பொழில் ஆத்மநாதீசுவரர் ஞானாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=iq9PH-enp0Q
6.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவன் காண்; வானவர்க்கும் மேல்
திருத்தாண்டகம்   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qd5E5qODrUk
6.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆர் ஆரும் மூ இலை
திருத்தாண்டகம்   (திருஓமாம்புலியூர் துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9neemv_tOGA
6.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
திருத்தாண்டகம்   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
6.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூ இலை நல் சூலம்
திருத்தாண்டகம்   (திருக்கஞ்சனூர் அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lMhVEqpnkhw
6.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்
திருத்தாண்டகம்   (திருவெறும்பூர் )
Audio: https://www.youtube.com/watch?v=ZjxhsI_PTcE
6.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூ இலை வேல் கையானை,
திருத்தாண்டகம்   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=6JewIhBJ_x0
6.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்
திருத்தாண்டகம்   (பலவகைத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=HiQ90qquRaM
6.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   அப்பன் நீ, அம்மை நீ,
திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE
6.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw
6.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
திருத்தாண்டகம்   (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=WBrpAfWDe_4
6.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
திருத்தாண்டகம்   (பொது - மறுமாற்றம் )
Audio: https://www.youtube.com/watch?v=ySLUSOx0X50
6.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
திருத்தாண்டகம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Nc47vuCZpt4

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.001   அரியானை, அந்தணர் தம் சிந்தை  
பண் - பெரியதிருத்தாண்டகம்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

[1]
கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
சூழ் வலஞ்சுழியும் கருதினானை,
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
எப்பொழுதும் வணங்கி ஏத்தப்-
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

[2]
கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை
கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி,
வரு மானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட,
வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி
அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண,
அமரர்கணம் முடி வணங்க, ஆடுகின்ற
பெருமானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

[3]
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை,
அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா-
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை,
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி
சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

[4]
அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்
புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும்
பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

[5]
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை,
கன வயிரக் குன்று அனைய காட்சியானை,
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை,
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை,
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, -
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

[6]
வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை
சிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த
அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை,
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்
-துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

[7]
கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு
பூங் கச்சி ஏகம்பன் தன்னை,
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை,
அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை,
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற
பரஞ்சுடரை, பரனை, எண் இல்
பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

[8]
முற்றாத பால் மதியம் சூடினானை, மூ உலகம் தான்
ஆய முதல்வன் தன்னை,
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னை, திகழ்
ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை,
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை,
கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை,- பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

[9]
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்,
கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம்
சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத்,
திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ்
உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற
பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத
நாள் எல்லாம் பிறவா நாளே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.002   மங்குல் மதி தவழும் மாட  
பண் - புக்கதிருத்தாண்டகம்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்; மருகல் உள்ளார்;
கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார்; குடமூக்கின் உள்ளார்; போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கும் இடம் அறியார்; சால நாளார்; தருமபுரத்து   உள்ளார்; தக்களூரார்-
பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[1]
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந் நாள் நனிபள்ளி   உள்ளார்; போய் நல்லூர்த் தங்கி
பாகப் பொழுது எலாம் பாசூர்த் தங்கி, பரிதி நியமத்தார், பன்னிரு நாள்;
வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை எழுநாள்-தங்கி,
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்-புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[2]
துறம் காட்டி, எல்லாம் விரித்தார் போலும்; தூ மதியும் பாம்பும் உடையார் போலும்;
மறம் காட்டி, மும்மதிலும் எய்தார் போலும்; மந்திரமும் தந்திரமும் தாமேபோலும்;
அறம் காட்டி, அந்தணர்க்கு அன்று ஆலநீழல் அறம் அருளிச்செய்த அரனார்-இந் நாள்,
புறங்காட்டு எரி ஆடிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

[3]
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை   ஏந்தி, மயானத்து ஆடி,
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு   வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்;
கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்-
போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[4]
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கபாலம் கை ஏந்தி, கணங்கள் பாட,
ஊரார் இடு பிச்சை கொண்டு, உழ(ல்)லும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்:
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர்; திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயார்-
போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[5]
காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்; கயிலாயமாமலையார்; காரோணத்தார்;
மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும் தாமே போலும்;
மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன் உடலம் காய்ந்தார்-இந்நாள்
போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

[6]
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்; தன் பெருமையே பேச நின்று,
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்; மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்-
புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[7]
குலா வெண்தலைமாலை என்பு பூண்டு, குளிர் கொன்றைத்தார் அணிந்து, கொல் ஏறு ஏறி,
கலா வெங்களிற்று உரிவைப்போர்வை மூடி, கை ஓடு அனல் ஏந்தி, காடு உறைவார்;
நிலா வெண்மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர்-
புலா வெண்தலை ஏந்திப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[8]
சந்தித்த கோவணத்தர், வெண் நூல் மார்பர்; சங்கரனைக் கண்டீரோ? கண்டோம்-இந் நாள்,
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி, படுதலையில்   என்கொலோ ஏந்திக் கொண்டு,
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம், மணி ஆரூர் நின்று, அந்தி கொள்ளக்கொள்ள,
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[9]
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி செய்யும் தொண்டர்தங்கள்
ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம்-
வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று தாம் ஏறி, வேதகீதர்,
பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[10]
பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்;
விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே; ஓதுவதும் வேதமே; வீணை உண்டே;
கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.003   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,  
பண் - ஏழைத்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருப்பாதிரிப்புலியூரில் சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத் தினை நகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையை அடைந்தார். சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய் திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திரு வீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து வெறிவிரவு கூவிளம் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை,
பொறி அரவினானை, புள் ஊர்தியானை, பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை,
அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை, அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை,
எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[1]
வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை, வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னை,
புள்ளிவரிநாகம் பூண்டான் தன்னை, பொன்   பிதிர்ந்தன்ன சடையான் தன்னை,
வள்ளி வளைத் தோள் முதல்வன் தன்னை, வாரா   உலகு அருள வல்லான் தன்னை,
எள்க இடு பிச்சை ஏற்பான்தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[2]
முந்தி உலகம் படைத்தான் தன்னை, மூவா முதல்   ஆய மூர்த்தி தன்னை,
சந்த வெண்திங்கள் அணிந்தான் தன்னை,   தவநெறிகள் சாதிக்க வல்லான்தன்னை,
சிந்தையில்-தீர்வினையை, தேனை, பாலை, செழுங்   கெடில வீரட்டம் மேவினானை,
எந்தை பெருமானை, ஈசன் தன்னை, -ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[3]
மந்திரமும், மறைப் பொருளும், ஆனான்தன்னை; மதியமும், ஞாயிறும், காற்றும், தீயும்,
அந்தரமும், அலைகடலும், ஆனான் தன்னை; அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை;
கந்தருவம் செய்து, இருவர், கழல் கைகூப்பி, கடிமலர்கள் பல தூவி, காலைமாலை.
இந்திரனும் வானவரும் தொழ, செல்வானை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[4]
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்;
வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி   காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி,
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது,
இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[5]
ஆறு ஏற்க வல்ல சடையான் தன்னை; அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னை;
கூறு ஏற்க, கூறு அமர, வல்லான் தன்னை; கோல் வளைக்கை மாதராள் பாகன்தன்னை;
நீறு ஏற்கப் பூசும் அகலத்தானை; நின்மலன் தன்னை; நிமலன் தன்னை;
ஏறு ஏற்க ஏறுமா வல்லான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[6]
குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு, குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி,
உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு,
 உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி;
வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை,   வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை,
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[7]
உறி முடித்த குண்டிகை தம் கையில்-தூக்கி,
ஊத்தைவாய்ச் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்க(ன்)னாய்,
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு, கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்;
மறிதிரை நீர்ப்பவ்வம் நஞ்சு உண்டான் தன்னை, 
மறித்து ஒரு கால் வல்வினையேன், நினைக்க மாட்டேன்;
எறிகெடில நாடர் பெருமான் தன்னை-ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[8]
நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை, நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை,
மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை, வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை,
கறையானை, காது ஆர் குழையான் தன்னை, கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை,
இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[9]
தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட, வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை
கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும், நான்முகனும், கூடி எங்கும்
எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;- ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[10]
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால், நம் தெய்வம் என்று தீண்டி,
தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே என்று அவம் செய்து, தக்கது ஓரார்;
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன் அழியச் செற்ற சேவடியினானை,
இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.004   சந்திரனை மா கங்கைத் திரையால்  
பண் - அடையாளத்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.

[1]
ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே;
பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம் தடமார்பில் பயில்வித்தானே;
நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே;
ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[2]
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே;
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே;
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி
அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[3]
செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள் எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக
வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும்
கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த
ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[4]
பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல் ஒளி திகழப் பனி வெண்திங்கள்
சூடுமே; அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே; தொண்டைவாய் உமை ஓர் பாகம்
கூடுமே; குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு பூதம் முழக்க, மாக்கூத்து
ஆடுமே; அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[5]
ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால்
விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ; வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே; இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால்
அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[6]
குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை, குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே;
கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின் கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே;
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;- ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும்
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[7]
மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து, மற்று அதனின் உரிவை கொண்டு,
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம் புலால் கை கலக்க, மெய் போர்த்தானே;
கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி, குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[8]
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை எம்பெருமானே; தெய்வம் நாறும்
வம்பின் நாள்மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே; வலங்கை மழுவாள(ன்)னே:
நம்பனே; நால்மறைகள் தொழ நின்றானே; நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே; அண்ட கோசத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[9]
எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே;
கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி
கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே; சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[10]
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே; நேர் ஒருவர் இல்லாதானே;
கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல் வேங்கை அதளனே; கோவணவனே;
பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே; புரிநூலானே;
அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.005   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,  
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவார்ச்சனை ‌ ‌
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.

[1]
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[2]
முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.

[3]
சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[4]
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.

[5]
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[6]
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.

[7]
வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[8]
சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[9]
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.007   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,  
பண் - காப்புத்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும்,
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும்,
தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும்,
நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும்,
  நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்-
கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே.

[1]
தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திருக்கோவல்வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,
ஆர்த்து அருவி வீழ் சுனைநீர் அண்ணாமலை,
அறையணி நல்லூரும்(ம்), அரநெறியும், -
ஏத்துமின்கள்! நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது,
இன்னம்பர், ஏகம்ப(ம்) மும்,
கார்த் தயங்கு சோலைக் கயிலாய (ம்)
  மும்-கண்நுதலான் தன்னுடைய காப்புக்களே.

[2]
சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருப் பாதிரிப்புலியூர், திரு ஆமாத்தூர்,
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற
சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தான(ம்)மும், -
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று
  அமுதர்-பழனம், நல்லம்,
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும்,
  கழுக்குன்றும்-தம்முடைய காப்புக்களே.

[3]
திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
 ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா,
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும்,
மாற்பேறும், மாந்துறையும்,
வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம்,
கேதாரம், மா மேரு(வ்)வும்-
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை
உறைவார் காப்புக்களே.

[4]
செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம்,
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும்,
குடமூக்கும், கோகரணம், கோலக்காவும்,
பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர்,
பயற்றூர், பராய்த்துறையும்,
கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - 
கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே.

[5]
தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந்
தண் பிடவூரும், சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பத(ம்)மும், பறியலூர்
  வீரட்டம், பாவநாசம்,
மவ்வம் திரையும் மணி முத்த(ம்)மும்,
 மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழி(ய்)யும்,
கவ்வை வரிவண்டு பண்ணேபாடும்
 கழிப்பாலை-தம்முடைய காப்புக்களே.

[6]
தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
 தீக்காலிவல்லம், திரு வேட்டி(ய்)யும்,
உண் நீர் ஆர் ஏடகமும், ஊறல், அம்பர்,
  உறையூர், நறையூர், அரண நல்லூர்,
விண்ணார் விடையான் விளமர், வெண்ணி,
  மீயச்சூர், வீழிமிழலை, மிக்க
கண் ஆர் நுதலார் கரபுர(ம்)மும்-காபாலியார்
அவர்தம் காப்புக்களே.

[7]
தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திண்டீச்சுரமும், திருப்புக(ல்)லூர்,
எள்ளும் படையான் இடைத்தான(ம்)மும்,
ஏயீச்சுரமும், நல் ஏமம், கூடல்,
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும், குரங்கணில்
 முட்டமும், குறும்பலாவும்,
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
 காரோணம்-தம்முடைய காப்புக்களே.

[8]
சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும்,
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்,
  பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம்,
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும்,
 நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும்,
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு 
என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.

[9]
சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
வாஞ்சியமும், திரு நள்ளாறும்,
அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும்,
ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும்,
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்)
 இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும்,
கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க்
கரக்கோயில்-காப்புக்களே.

[10]
தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச்
செம்பொன்பள்ளி, திருப் பூவணமும்,
வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும்,
மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு
  ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக்
கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - 
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

[11]
திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
  அளப்பூர், தெற்கு ஏறு சித்தவடம்,
உரு நீர் வளம் பெருகு மா நிருப(ம்)மும் -
மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற -
  பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம்
கருநீலவண்டு அரற்றும் காளத்தி(ய்)யும்,
 கயிலாயம்-தம்முடைய காப்புக்களே.

[12]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.008   விற்று ஊண் ஒன்று இல்லாத  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்காளத்தி ; (திருத்தலம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி )
திருப்பைஞ்ஞீலியில் சிலநாள் தங்கித் திருவண்ணாமைலக்குப் புறப்பட்டார். திருவண்ணாமைல, திருவோத்தூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருப்பாசூர், திருவாலங்காடு, காரிகரை முதலான தலங்களைத் தரிசித்துத் திருக்காளத்திக்கு வந்தார். கண்ணப்பர்க்கருள் செய்த காளத்திநாதனைப் பாடிப் பரவி இன்புற்றார்.
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்,
  வியன்கச்சிக் கம்பன் காண், பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண்,
மயானத்து மைந்தன்காண், மாசு ஒன்று இல்லாப்
பொன் தூண் காண், மா மணி நல்குன்று ஒப்பான்
காண், பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல்-தூண் காண்-காளத்தி காணப்பட்ட கண
  நாதன் காண்;அவன் என் கண் உளானே.

[1]
இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன்
 காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே
முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்;
 முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;
  பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்;
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் -
  காளத்தியான் அவன், என் கண் உளானே.

[2]
நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன்
  காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான்
காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்,
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான்
 காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன்
காண்;அவன் என் கண் உளானே.

[3]
செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ காண்;
திரு ஒற்றியூரான் காண்;சிந்தைசெய்வார்க்கு
உற்றான் காண்;ஏகம்பம் மேவினான் காண்;
 உமையாள் நல்கொழு நன் காண்;இமையோர் ஏத்தும்
சொல்-தான் காண்;சோற்றுத்துறை உளான் காண்;
 சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான் காண்-காளத்தி காணப்பட்ட கணநாதன்
  காண்;அவன் என் கண் உளானே.

[4]
மனத்து அகத்தான்;தலைமேலான்;வாக்கின் உள்ளான்;
வாய் ஆரத் தன் அடியே பாடும் தொண்டர்-
இனத்து அகத்தான்;இமையவர்தம் சிரத்தின்மேலான்;
ஏழ் அண்டத்து அப்பாலான்;இப் பால் செம்பொன்
புனத்து அகத்தான்;நறுங்கொன்றைப் போதின் உள்ளான்;
 பொருப்பு இடையான்;நெருப்பு இடையான்;காற்றின் உள்ளான்;
கனத்து அகத்தான்;கயிலாயத்து உச்சி உள்ளான்
 காளத்தியான் அவன், என் கண் உளானே.

[5]
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்;
ஏகம்பம் மேயான் காண்;இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலன் ஐந்தும் போக்கினான் காண்;
  புரிசடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்;
நல்ல விடை மேற்கொண்டு, நாகம் பூண்டு, நளிர்
  சிரம் ஒன்று ஏந்தி, ஓர் நாண் ஆய் அற்ற
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் - 
  காளத்தியான் அவன், என் கண் உளானே.

[6]
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்;
எரி, பவள, வண்ணன் காண், ஏகம்பன் காண்; எண்திசையும் தான் ஆய குணத்தினான் காண்;
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடி காண்; தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்;
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் -  காளத்தியான் அவன், என் கண் உளானே.

[7]
இல் ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண்; இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்;
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண்; வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண்;
மல் ஆடு திரள் தோள்மேல் மழுவாளன் காண்; மலைமகள் தன் மணாளன் காண்; மகிழ்ந்து முன்நாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலீகான் காளத்தியான் அவன், என் கண் உளானே.

[8]
தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான் காண்;
 திரு ஏகம்பத்தான் காண்;தேன் ஆர்ந்து உக்க
ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்;
  நம்பன் காண்;ஞானத்து ஒளி ஆனான் காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து
 நின்றான் காண்;வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான் காண்;கறைக் கண்டன் காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.

[9]
இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்;
  ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்;
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்;
 குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்;
மறை உடைய வானோர் பெருமான் தான் காண்;
  மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்;
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.

[10]
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ
அன்னான் காண்;உகப்பார் காணப்
பண் ஆரப் பல் இலயம் பாடினான் காண்;பயின்ற
நால் வேதத்தின் பண்பினான் காண்;
அண்ணாமலையான் காண்;அடியார் ஈட்டம் அடி
இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்;
கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் -
 காளத்தியான் அவன், என் கண் உளானே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.009   வண்ணங்கள் தாம் பாடி, வந்து  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவாமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து,
  வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது
  ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்;
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல்
 உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
  ஆமாத்தூர் ஐயனாரே!.

[1]
வெந்தார் வெண்பொடிப் பூசி, வெள்ளை மாலை
  விரிசடைமேல்-தாம் சூடி, வீணை ஏந்தி,
கந்தாரம் தாம் முரலா, போகா நிற்க, :கறை
சேர் மணிமிடற்றீர்! ஊர் ஏது? என்றேன்;
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு,
நுடங்கு ஏர் இடை மடவாய்! நம் ஊர் கேட்கில்,
அம் தாமரை மலர் மேல் அளி-வண்டு யாழ்
 செய் ஆமாத்தூர் என்று, அடிகள் போயினாரே.

[2]
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி, கடிய
விடை ஏறி-காபாலி(ய்)யார்-
இட்டங்கள் தாம் பேசி, இல்லே புக்கு, இடும்
 பலியும் இடக் கொள்ளார்;போவார் அல்லர்;
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்;பார்ப்பாரைப்
பரிசு அழிப்பார் போல்கின்றார், தாம்;
அட்டிய சில்பலியும் கொள்ளார்;விள்ளார் - 
  அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[3]
பசைந்த பல பூதத்தர், பாடல் ஆடல்;பட
நாகக்கச்சையர்;பிச்சைக்கு என்று அங்கு
இசைந்தது ஓர் இயல்பினர்;எரியின் மேனி
 இமையா முக்கண்ணினர்;நால்வேதத்தர்;
பிசைந்த திருநீற்றினர்;பெண் ஓர்பாகம் பிரிவு
 அறியாப் பிஞ்ஞகனார்;தெண் நீர்க் கங்கை
அசைந்த திருமுடியர்;அங்கைத் தீயர் - 
  அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[4]
உருள் உடைய தேர், புரவியோடும், யானை,
ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்திவெள் ஏறு;
இருள் உடைய கண்டத்தர்;செந்தீவண்ணர்;
  இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார், தாம்;
பொருள் உடையர் அல்லர்;இலரும் அல்லர்;
 புலித்தோல் உடை ஆகப் பூதம் சூழ,
அருள் உடைய அம் கோதை, மாலை 
மார்பர் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[5]
வீறு உடைய ஏறு ஏறி, நீறு பூசி, வெண்தோடு
  பெய்து, இடங்கை வீணை ஏந்தி,
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு,
 குழை ஆட, கொடுகொட்டி கொட்டா, வந்து,
பாறு உடைய படுதலை ஓர் கையில் ஏந்தி,
பலி கொள்வார் அல்லர், படிறே பேசி;
ஆறு உடைய சடைமுடி எம் அடிகள்
 போலும்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[6]
கை ஓர் கபாலத்தர்;மானின் தோலர்;கருத்து
 உடையர்;நிருத்தராய்க் காண்பார் முன்னே;
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி, திகழ்
புன்சடை முடிமேல்-திங்கள் சூடி,
மெய் ஒருபாகத்து உமையை வைத்து, மேவார்
 திரிபுரங்கள் வேவச் செய்து(வ்),
ஐயனார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
  ஆமாத்தூர் ஐயனாரே!.

[7]
ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள் ஏறு;
ஒற்றியூர் உம் ஊரே? உணரக் கூறீர்!
நின்று தான் என் செய்வீர், போவீர் ஆகில்?
  நெற்றிமேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்;
என்றும் தான் இவ் வகையே இடர் செய்கின்றீர்;
  இருக்கும் ஊர் இனி அறிந்தோம், ஏகம்ப(ம்)மோ?
அன்றித்தான் போகின்றீர், அடிகள்! எம்மோடு; 
-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[8]
கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய
  விடை ஏறி, காணக்காண
இல்லமே தாம் புகுதா, இடுமின், பிச்சை!
  என்றாருக்கு எதிர் எழுந்தேன்;எங்கும் காணேன்;
சொல்லாதே போகின்றீர்;உம் ஊர் ஏது?
  துருத்தி? பழனமோ? நெய்த்தான(ம்)மோ?
அல்லலே செய்து அடிகள் போகின்றார்,
 தாம்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[9]
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும்;மணி
 மிழலை மேய மணாளர் போலும்;
கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும்;
  கொடுகொட்டி, தாளம், உடையார் போலும்;
செழுங் கயிலாயத்து எம் செல்வர் போலும்;
 தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும்;
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் -
அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.010   நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்  பூண்டார்;நூல்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருப்பந்தணைநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு காம்பன்னதோளியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்
பூண்டார்;நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்;
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி;பிறை
சூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி;
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்;அனல்
கொண்டார்;அந்திவாய் வண்ணம் கொண்டார்;
பாதம் கம் நீறு ஏற்றார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[1]
காடு அலால் கருதாதார்;கடல்நஞ்சு உண்டார்;களிற்று
 உரிவை மெய் போர்த்தார்;கலன் அது ஆக;
ஓடு அலால் கருதாதார்;ஒற்றியூரார்;உறு பிணியும்
செறு பகையும் ஒற்றைக் கண்ணால்
பீடு உலாம் தனை செய்வார்;பிடவம், மொந்தை,  குடமுழவம், கொடுகொட்டி, குழலும், ஓங்கப்
பாடலார்;ஆடலார்;பைங்கண் ஏற்றார்;  பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[2]
பூதப்படை உடையார்;பொங்கு நூலார்;
  புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்;
வேதத்தொழிலார் விரும்ப நின்றார்;
  விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி,
ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்;
  உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு
பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[3]
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்;
 நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்;
ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்;
 ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்;
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்;
 மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்;
பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்;
 பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[4]
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்;
துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்;
இண்டைச் சடை முடியார்; ஈமம் சூழ்ந்த இடு
பிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்;
அண்டத்துக்கு அப் புறத்தார்; ஆதி ஆனார்;
அருக்கனாய், ஆர் அழல் ஆய், அடியார்மேலைப்
பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[5]
கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்;
கானப்பேர் காதலார்; காதல்செய்து
மடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்;
   மான் உரி தோல் மிசைத்தோளார்; மங்கை காண
நடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்;
நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;
படம் மன்னு திருமுடியார்; பைங்கண்ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[6]
முற்றா மதிச் சடையார்; மூவர் ஆனார்; மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்;
கற்றார்பரவும்கழலார்;திங்கள்,கங்கையாள்,காதலார்; காம்புஏய்தோளி
பற்று ஆகும் பாகத்தார்; பால் வெண் நீற்றார்; பான்மையால் ஊழி, உலகம், ஆனார்;
பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[7]
கண் அமரும் நெற்றியார்; காட்டார்; நாட்டார்; கன
மழுவாள் கொண்டது ஓர் கையார்; சென்னிப்
பெண் அமரும் சடைமுடியார்; பேர் ஒன்று இல்லார்;
  பிறப்பு இலார்; இறப்பு இலார்; பிணி ஒன்று இல்லார்;
மண்ணவரும், வானவரும், மற்றையோரும்,
மறையவரும், வந்து எதிரே வணங்கி ஏத்தப்
பண் அமரும் பாடலார்; பைங்கண் ஏற்றார்; பலி
ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[8]
ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்;
   இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்;
நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு  உண்டார்; அங்கை அனலும் உண்டார்;
ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல்
உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்;
பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[9]
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்;
காரோணம் காதலார்; காதல்செய்து
நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்;
  நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;
மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள்
  அரக்கர்கோன் தலையை மாளச் செற்று,
பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி
ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.011   பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருப்புன்கூரும் திருநீடூரும் ; (திருத்தலம் அருள்தரு சொக்கநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகநாதர், சோமநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
பேணாதார் அவர் தம்மைப் பேணாதானை,
துறவாதே கட்டு அறுத்த சோதியானை, தூ
  நெறிக்கும் தூ நெறி ஆய் நின்றான் தன்னை;
திறம் ஆய எத்திசையும் தானே ஆகித் திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிறம் ஆம் ஒளியானை, நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

[1]
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை,
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை,
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி
நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னை,
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை,
திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நின்று ஆய நீடூர் நிலாவினானை, -நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

[2]
இல்லானை, -எவ் இடத்தும், -உள்ளான் தன்னை;
இனிய நினையாதார்க்கு இன்னா தானை;
வல்லானை, வல் அடைந்தார்க்கு அருளும்
   வண்ணம்; மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை;
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை;
நெல்லால் விளை கழனி நீடூரானை;-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

[3]
கலைஞானம் கல்லாமே கற்பித்தானை, கடு நரகம்
சாராமே காப்பான் தன்னை,
பல ஆய வேடங்கள் தானே ஆகி,
பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானை;
சிலையால் புரம் எரித்த தீஆடி(ய்)யை, திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிலை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

[4]
நோக்காதே எவ் அளவும் நோக்கினானை, நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை,
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை, அணுகாதார் அவர் தம்மை அணுகாதானை,
தேக்காதே தெண்கடல் நஞ்சு உண்டான்
தன்னை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை,-நீதனேன்   என்னே நான் நினையா ஆறே!.

[5]
பூண் அலாப் பூணானை, பூசாச் சாந்தம் உடையானை, முடை நாறும் புன் கலத்தில்
ஊண் அலா ஊணானை, ஒருவர் காணா   உத்தமனை, ஒளி திகழும் மேனியானை,
சேண் உலாம் செழும் பவளக்குன்று ஒப்பானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீண் உலாம் மலர்க் கழனி நீடூரானை,-நீதனேன்   என்னே நான் நினையா ஆறே!.

[6]
உரை ஆர் பொருளுக்கு உலப்பு இலானை, ஒழியாமே எவ் உருவும் ஆனான் தன்னை,
புரை ஆய்க் கனம் ஆய் ஆழ்ந்து ஆழாதானை, புதியனவும் ஆய் மிகவும் பழையான் தன்னை
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிரை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.

[7]
கூர் அரவத்து அணையானும் குளிர்தண்பொய்கை மலரவனும் கூடிச் சென்று அறியமாட்டார்;
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார்? தேவர், அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகாச்
சீர் அரவக் கழலானை, நிழல் ஆர் சோலைத் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீர் அரவத் தண்கழனி நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.

[8]
கை எலாம் நெய் பாய, கழுத்தே கிட்ட, கால் நிமிர்த்து, நின்று உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்;
செய் எலாம் செழுங் கமலப் பழன வேலித் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை, -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.

[9]
இகழும் ஆறு எங்ஙனே? ஏழைநெஞ்சே! இகழாது   பரந்து ஒன்று ஆய் நின்றான் தன்னை,
நகழ மால்வரைக்கீழ் இட்டு, அரக்கர்கோனை
நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான் தன்னை,
திகழும் மா மதகரியின் உரி போர்த்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிகழுமா வல்லானை, நீடூரானை,-நீதனேன் என்னே   நான் நினையா ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.012   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,
தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார்,
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[1]
முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று,
முன்னும் ஆய், பின்னும் ஆய், முக்கண் எந்தை;
பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை,
பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார்; பெரிய நஞ்சுக்
கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை- கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;
மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை,
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[2]
நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன் தன்னை நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆய
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள் தன்னை ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்த,
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;
வளி உண்டு ஆர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.

[3]
பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்;
அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்-
கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மடி நாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[4]
விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து,   வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும்
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல் ஏழ்
ஆனாய்! இறை ஆனாய் எம் இறையே! என்று நிற்கும்
கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார்,
மண் ஆன மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[5]
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி கதிரோன்,   எரி சுடரான், விண்ணும் ஆகி,
பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி; பாசுபதன்; தேசமூர்த்தி;
கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்- கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[6]
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதை மீர்காள்!
நிணம் புல்கு சூலத்தர்; நீலகண்டர்; எண் தோளர்;   எண் நிறைந்த குணத்தினாலே
கணம் புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி உள்ளார்-கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[7]
இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை, என் சிந்தை மேவி உறைகின்றானை,
முயல்வானை, மூர்த்தியை, தீர்த்தம் ஆன தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மயல் ஆய மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[8]
செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து, சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால்
உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம்
எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம்
கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[9]
பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன் புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,
ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.014   நினைந்து உருகும் அடியாரை நைய  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
திருவடி தீகை்ஷக்கு நல்லூருக்கு வருக என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். நினைப்பதனை முடிக் கின்றோம் என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். நினைந்துருகும் அடியாரை என்று தொடங்கி இறை அருளை வியந்து நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான் என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.
இறைவனது திருவடி கான, தீக்க்ஷை பெற
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[1]
பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல்
வைத்தார்; புலி உரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்;
மன் நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார் காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்;
மின் நலத்த நுண் இடையாள் பாகம் வைத்தார்; வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்;
நல்-நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[2]
தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் 
வைத்தார்; துன் எருக்கின்வடம் வைத்தார்; துவலை சிந்த,
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார்; பனிமத்தமலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்;
சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்; சிலை வைத்தார்; மலை பெற்ற மகளை வைத்தார்;
நாடு ஏறு திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[3]
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம்
பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்;
கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக் கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்;
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்; சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்;
நல் அருளால்-திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[4]
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்; வினை, தொழுவார்க்கு, அற வைத்தார்; துறவி வைத்தார்;
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்; கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்;
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்; திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ண(அ)அரிய திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[5]
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்;
உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்;
மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்;
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்;
நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[6]
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்;
நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்;
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்; ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்;
நாறு மலர்த்திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[7]
குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்;
குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்;
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்;
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்;
நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள்
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[8]
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்; திசைபத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்;
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்; நிறை தவமும் மறை பொருளும் நிலவ வைத்தார்;
கொன்று அருளி, கொடுங் கூற்றம் நடுங்கி ஓட, குரைகழல்சேவடி வைத்தார்; விடையும் வைத்தார்;
நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[9]
பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக் கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;
அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்;
ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்; உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர்,
நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[10]
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒருவிரலால் உற வைத்தார்; இறைவா! என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.015   குருகு ஆம்; வயிரம் ஆம்;  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கருகாவூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்;
பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்;
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்;
கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[1]
வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்; வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்; பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்;
தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத் தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண்   ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[2]
பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்;   பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற
கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[3]
இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண்
திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்;
அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்;
ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும்
குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்;
கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண்
ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[4]
படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு
ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்;
உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்)
அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம்
   அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்;
கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[5]
மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்;
மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்;
சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன்
  ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்;
மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று
ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம்
காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[6]
அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்;
ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர்
திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை
நாசன், என் சிந்தையான் ஆம்;
உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்;
  உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக்
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[7]
துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்;
சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்;
படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால்
நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்;
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்;
கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே.

[8]
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்;
விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்;
பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்; பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்;
எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்;
என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்;
கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[9]
பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள்
இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய்,
செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை
குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்;
அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி
இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி;
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[10]
ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
அழலை மாட்டி; உடனே வைத்து(வ்)
இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்;
  இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்;
அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே
ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்;
கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.016   சூலப்படை உடையார் தாமே போலும்;  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த
திங்கள் கண்ணி உடையார் போலும்;
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்;
மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்;
வேலைக்-கடல் நஞ்சம் உண்டார் போலும்;
மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்;
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[1]
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிபோலும்;
கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்;
பாரார் பரவப்படுவார் போலும்; பத்துப்பல்
ஊழி பரந்தார் போலும்;
சீரால் வணங்கப்படுவார் போலும்; திசைஅனைத்தும்
ஆய், மற்றும் ஆனார் போலும்;
ஏர் ஆர் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே!.

[2]
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்;
  விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்;
பூதங்கள் ஆய புராணர் போலும்;
புகழ வளர் ஒளி ஆய் நின்றார் போலும்;
பாதம் பரவப்படுவார் போலும்; பத்தர்களுக்கு
இன்பம் பயந்தார் போலும்;
ஏதங்கள் ஆன கடிவார் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[3]
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை
வணங்கச் சேவடியை வைத்தார் போலும்;
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி,
   வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்;
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்;
எண் குணத்தார்; எண்ணாயிரவர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே.

[4]
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்
பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்,
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி,
படுவெண் தலையில் பலி கொள்வாரும்,
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும்,
மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்,
ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[5]
ஐ-இரண்டும், ஆறு ஒன்றும், ஆனார் போலும்; அறு-மூன்றும், நால்-மூன்றும் ஆனார் போலும்;
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்; திசை அனைத்தும் ஆய் நிறைந்த செல்வர் போலும்;
கொய் மலர் அம் கொன்றைச் சடையார் போலும்; கூத்து ஆட வல்ல குழகர் போலும்;
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே.

[6]
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு ஆய்,
   பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடு ஒன்று ஆய்,
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்;
  விரிவு இலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்;
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும்
பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும்,
எரி ஆய தாமரைமேல் இயங்கினாரும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[7]
தோலின் பொலிந்த உடையார் போலும்; சுடர் வாய்
அரவு அசைத்த சோதி போலும்;
ஆலம் அமுதுஆக உண்டார்போலும்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனார் போலும்;
காலனையும் காய்ந்த கழலார் போலும்;
கயிலாயம் தம் இடமாகக் கொண்டார் போலும்;
ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[8]
பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்;
படைக்கணாள் பாகம் உடையார் போலும்;
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்;
அணி நீலகண்டம் உடையார் போலும்;
வந்த வரவும் செலவும் ஆகி, மாறாது என்
உள்ளத்து இருந்தார் போலும்;
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[9]
கொன்றை அம் கூவிள மாலை தன்னைக்
   குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும்,
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு
உருவம் ஆய் நின்ற நிமலனாரும்,
அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ
அரு வரையைக் காலால் அழுத்தினாரும்,
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.017   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்;
படை உடையர்; அம் பொன்தோள் மேல்
நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம்
பலி கொள்வர்; மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள்
தால வேடத்தர்; கொள்கை சொல்லின்,
ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

[1]
மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான்
இடம் உடையர்; மாதராளைப்
பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்;
பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்;
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்;
சரிதை பல உடையர்; தன்மை சொல்லின்,
எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது
மேவி இடம்கொண்டாரே.

[2]
ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு
வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்;
காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்;
கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு;
கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்;
கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்;
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது
மேவி இடம்கொண்டாரே.

[3]
தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்;
திரு ஆரூர் என்றும் உள்ளார்;
வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்;
மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்;
நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு
  நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும்
ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

[4]
கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம்
கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்;
தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி
நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள்
  சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம்
இரப்பர்; எமை ஆள்வர்; என் உள்
   நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.

[5]
கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர்
கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த
பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்;
புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்;
அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின்
மந்திரத்தார்; அமரர் போற்ற
இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

[6]
பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்;
பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்;
கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று
கை ஏந்தி, இல்லம் தோறும்
பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு
சடைமுடியர்; பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

[7]
கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம்
மன்னினார்; பன்னும் இன்சொல்
பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி
பயிலும் திரு உருவம் பாகம் மேயார்;
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம்
மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட
ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

[8]
புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில்  ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும்    பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில்
எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ்  இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால்
இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும்  இடைமருது மேவி இடம் கொண்டாரே.

[9]
விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; 
விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்;
மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்;  மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்;
சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று 
செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால்
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், 
வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.018   வடி ஏறு திரிசூலம் தோன்றும்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருப்பூவணம் ; (திருத்தலம் அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி )
வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்;
வளர்  சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; 
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்;
  எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்  திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[1]
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்;
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்;
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்;
ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்;
செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த
பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[2]
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும்
கவின்  மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; 
சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்;
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; 
ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்;
பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[3]
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; 
பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்;
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; 
நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்;
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; 
ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்;
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[4]
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், 
மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்;
இருங்கடல்  நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்;
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம்  ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும்.
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[5]
பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட
பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்;
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன
திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்;
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன்
உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று,
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[6]
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;
மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;
துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் 
தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்;
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[7]
செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;
திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;
நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;
மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;
பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[8]
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்;
அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்;
மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத்
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்;
செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[9]
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி,
அன்று, தன்  முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும்
குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[10]
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ் உரு  ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்;
வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை 
மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;
நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை
நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.019   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள்
வளைத்தானை; வல் அசுரர் புரங்கள் மூன்றும், வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்
துளைத்தானை, சுடு சரத்தால் துவள நீறா; தூ  முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானை;-தென் கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[1]
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை,
பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை, பசும் பொன்னின் நிறத்தானை, பால் நீற்றானை,
உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை,-
தெள்-நிலவு தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[2]
நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை,
பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை,
பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை,
கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங் குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித்
தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[3]
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக்
கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[4]
ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை,
ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும்
பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை, பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை, அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[5]
மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை, மூ உலகும் தானே எங்கும்
பாவனை, பாவம் அறுப்பான் தன்னை, படி எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த
தேவனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[6]
துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான் தன்னை, துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை,
இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை, எல்லி நடம் ஆட வல்லான் தன்னை;
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை, மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்
சிறந்தானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[7]
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை,
தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை,
சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என்
தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[8]
பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை, பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை,
வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை,
வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை,
மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை,   மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[9]
மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன்   சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என் தலையின் உச்சி என்றும்   தாபித்து இருந்தானை, தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[10]
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை, தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை,
பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை,
ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.020   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருநள்ளாறு ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத   சொல் உரைக்கத் தன் கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவானை,
மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல்   அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[1]
படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு அனங்கற் பார்த்தானை, பாவம் எல்லாம்
அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள் அரு மருந்தை, ஆவா! என்று அருள் செய்வானை,
சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை, சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்
நடையானை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[2]
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை,
அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை, ஆதியானை,
மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை, மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை
நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[3]
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி, கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு,
சுட்ட(அ)ங்கம் கொண்டு துதையப் பூசி, சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானை;
பட்ட(அ)ங்கமாலை நிறையச் சூடி, பல்கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[4]
உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை, உலப்பு இல் செல்வம்
சிலந்தி தனக்கு அருள் செய்த தேவதேவை, திருச் சிராப்பள்ளி எம் சிவலோக(ன்)னை,
கலந்தார் தம் மனத்து என்றும் காதலானை, கச்சி ஏகம்பனை, கமழ் பூங்கொன்றை
நலம் தாங்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தஆறே!.

[5]
குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை, குலவரையின் மடப்பாவை இடப்பாலானை,
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை
சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும்
தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[6]
பூ விரியும் மலர்க் கொன்றைச் சடையினானை,   புறம்பயத்து எம்பெருமானை, புகலூரானை,
மா இரியக் களிறு உரித்த மைந்தன் தன்னை,   மறைக்காடும் வலி வலமும் மன்னினானை,
தே இரியத் திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை,   உதைத்து அவன் தன் சிரம் கொண்டானை,
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[7]
சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல் அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை, மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை, காளத்தியானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[8]
குன்றாத மா முனிவன் சாபம் நீங்கக் குரை கழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல் வாய் ஓட்டி அடர்வித்தானை,
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்தன்னை,
சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும்
நன்று ஆகும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே!.

[9]
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி,
உறவு ஆகி, இன் இசை கேட்டு, இரங்கி, மீண்டே உற்ற பிணி தவிர்த்து, அருள வல்லான் தன்னை;
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை; மா மதியம், மலர்க் கொன்றை, வன்னி, மத்தம்,
நறவு, ஆர் செஞ்சடையானை; நள்ளாற்றானை;-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.021   முடித் தாமரை அணிந்த மூர்த்தி  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருஆக்கூர் ; (திருத்தலம் அருள்தரு கட்கநேத்திராம்பிகை உடனுறை அருள்மிகு சுயம்புநாதவீசுவரர் திருவடிகள் போற்றி )
முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[1]
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[2]
மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி   நீலகண்டம் உடையார் போலும்;
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு   ஏறு தோள் எட்டு உடையார் போலும்;
வை ஆர் மழுவாள் படையார் போலும்; வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்;
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[3]
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[4]
ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[5]
மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்;
மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்;
தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்;
ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[6]
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்;
ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[7]
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு   ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[8]
கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்   போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[9]
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[10]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php