sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாரு மன்னும் முலை மங்கை
கொல்லி   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RWWoxMk9Bt8
5.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு
திருக்குறுந்தொகை   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Nvcv2kY9x6c

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.029   வாரு மன்னும் முலை மங்கை  
பண் - கொல்லி   (திருத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு வார்கொண்டமுலையம்மை உடனுறை அருள்மிகு தீயாடியப்பர் திருவடிகள் போற்றி )
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!

[1]
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப்
பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.

[2]
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி
அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே

[3]
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி
உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை
கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள்
நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!

[4]
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக்
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ள
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே

[5]
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்
ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக்
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!

[6]
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.

[7]
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர்
மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்,
கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்
தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.

[8]
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன்,
தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்-
கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள்
அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.

[9]
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள்
வாதினால் உரை அவை மெய் அல; வைகலும்,
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.

[10]
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்-
அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல்,
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்
பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.084   மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆரணியசுந்தரர் திருவடிகள் போற்றி )
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது
ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

[1]
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்!
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

[2]
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே,
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
ஞான நாயகனைச் சென்று நண்ணுமே!

[3]
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி
திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!

[4]
சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும்,
அற்றபோது அணையார், அவர் என்று என்றே,
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே!

[5]
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும்,
துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்;
கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி
உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே.

[6]
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,
பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்!
கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம்
ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே!

[7]
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர்,
சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்!
காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை
நீலகண்டனை நித்தல் நினைமினே!

[8]
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்
ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்!
அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!

[9]
எண் இலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன்,
கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை
நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.

[10]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php