sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   1 th/nd Thirumurai (குறிஞ்சி   Location: திருநல்லூர் God: பெரியாண்டேசுவரர் Goddess: திரிபுரசுந்தரியம்மை) திருநல்லூர் ; அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Ctmd0yeKnNY  
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி,
நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை
முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு-
பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.


[ 1]


ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும்
வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன,
நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே.


[ 2]


சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ,
ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை
நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப்
பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே.


[ 3]


நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை,
நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை,
காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.


[ 4]


ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ
நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை,
தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர்
போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.


[ 5]


Go to top
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,
நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை,
செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர,
சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே.


[ 6]


எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும்
நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா,
தம் கை தலைக்கு ஏற்றி, ஆள் என்று அடிநீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.


[ 7]


காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன்
நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை,
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர்
தீபமனத்தார்கள்; அறியார், தீயவே.


[ 8]


வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை,
தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே.


[ 9]


பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர்,
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை,
நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை,
எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.


[ 10]


Go to top
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன்,
நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை,
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநல்லூர்
1.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொட்டும் பறை சீரால் குழும,
Tune - குறிஞ்சி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
2.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் அமரும் திருமேனி உடையீர்!
Tune - காந்தாரம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
3.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்டு இரிய விண்ட மலர்
Tune - சாதாரி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
4.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   அட்டுமின், இல் பலி! என்று
Tune - திருவிருத்தம்   (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை)
6.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   நினைந்து உருகும் அடியாரை நைய
Tune - திருத்தாண்டகம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_song.php