sivasiva.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
1294 - நாளு மிகுத்த (பொதுப்பாடல்கள்) Songs from this sthalam 1337 - காதின்மணி ஓலை
1294 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 386 - வாரியார் # 1095 )
நாளு மிகுத்த முன் திருப்புகழ் அடுத்த திருப்புகழ் தான தனத்த ...... தனதான
நாளு மிகுத்த ...... கசிவாகி
ஞான நிருத்த ...... மதைநாடும்
ஏழை தனக்கு ...... மநுபூதி
ராசி தழைக்க ...... அருள்வாயே
பூளை யெருக்கு ...... மதிநாக
பூண ரளித்த ...... சிறியோனே
வேளை தனக்கு ...... சிதமாக
வேழ மழைத்த ...... பெருமாளே.
Easy Version:
நாளு மிகுத்த கசிவாகி
ஞான நிருத்தம் அதைநாடும்
ஏழை தனக்கும் அநுபூதி
ராசி தழைக்க அருள்வாயே
பூளை யெருக்கு மதிநாக
பூண ரளித்த சிறியோனே
வேளை தனக்கு உசிதமாக
வேழ மழைத்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
நெகிழ்ந்த மனத்தினனாய்,
ஞான நிருத்தம் அதைநாடும் ... உனது நடனக் கோலத்தைக்
காண விரும்பும்
ஏழை தனக்கும் அநுபூதி ... எளியோனாகிய எனக்கும் அனுபவ
ஞானம் என்னும்
ராசி தழைக்க அருள்வாயே ... பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க
அருள் புரிவாயாக.
பூளை யெருக்கு மதிநாக ... பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச்
சந்திரன், பாம்பு ஆகியவற்றை
பூண ரளித்த சிறியோனே ... சடையிலே அணிந்துள்ள சிவபெருமான்
அளித்த குழந்தையே,
வேளை தனக்கு உசிதமாக ... உனக்கு வேண்டிய சமயத்தில்
சமயோசிதமாக
வேழ மழைத்த பெருமாளே. ... யானையாகக் கணபதியை
வரவழைத்த பெருமாளே.
1
Similar songs:
தான தனத்த ...... தனதான
This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
send corrections and suggestions to admin @ sivasiva.org
https://www.sivaya.org/thiruppugazh_song.php