சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
பண் - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KrT89fazF1I
1.105   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடலன் நால்மறையன்; படி பட்ட
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ZeajoyxTUVA
2.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பவனம் ஆய், சோடை ஆய்,
பண் - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oEL9vEST34M
Audio: https://sivaya.org/audio/2.079 pavanaamaay sodaiyay.mp3
2.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பருக் கை யானை மத்தகத்து
பண் - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=L37mdxAAB-c
3.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தம் ஆய், உலகு ஆதியும்
பண் - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5Vuf3r9DVnc
4.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
பண் - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=IA_qRP6iwNw
4.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய் எலாம் வெண் நீறு
பண் - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=u12KnyQeeyI
4.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தீப் புகினும் எமக்கு
பண் - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vy1mhQrYsfY
4.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப் படை யானை; சூழ்
பண் - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=V1lAAzPKPFA
4.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
பண் - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LRz5ZvcX5-0
Audio: https://sivaya.org/audio/4.020 Kaandaalae Karuththaai.mp3
4.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து விதானம்; மணி பொன்
பண் - குறிஞ்சி   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oqk0okHIuQ0
4.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   படு குழிப் பவ்வத்து அன்ன
பண் - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=z_yUZuhRewc
4.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழல் வலம் கொண்ட சொல்லாள்
பண் - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=OK2k464CXQk
4.101   திருநாவுக்கரசர்   தேவாரம்   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
பண் - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pb6x_HCD83U
4.102   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
பண் - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=S9DI4ZlI9zA
5.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
பண் - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=SoQOOWXMD0Y
5.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பண் - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TNsBa7fjh4U
6.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mjAAy3BfEDE
6.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   உயிரா வணம் இருந்து, உற்று
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_aAV_RYUNto
6.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாதித் தன் திரு உருவில்
பண் -   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=n5XphMWDITw
6.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற  
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Q5VU-R7MCKg
6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9zK-eWS155o
6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Gs8cErbLXSY
6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=y6Gz9xn36Vk
6.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BC6LZz53r5g
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=c0llPrAgTrM
6.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் கை மதகரி உரிவைப்
பண் - அரநெறிதிருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=cziBzD2YS60
6.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
பண் - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=QI0JWVkFJDk
7.008   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
பண் - இந்தளம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9-PHgwe6lTc
7.012   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
பண் - இந்தளம்   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=wbRoTcLBYNI
7.033   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
பண் - கொல்லி   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=-x8t2TE_QZY
7.037   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குருகு பாய, கொழுங் கரும்புகள்
பண் - கொல்லி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=YGBV4XLqYbA
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=F-qNMxHIme8
Audio: https://www.youtube.com/watch?v=j3zT6yhDffM
7.047   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
பண் - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=3lVBB7jvhtw
7.051   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
பண் - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.059   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
பண் - தக்கேசி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=N1flgNNpWIM
7.073   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கரையும், கடலும், மலையும், காலையும்,
பண் - காந்தாரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=hHEPdFC_nVU
7.083   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
பண் - புறநீர்மை   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8uhZK3m-azs
7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=57PlwAi1hCc
7.096   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தூ வாயா! தொண்டு செய்வார்
பண் - பஞ்சமம்   (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=sOHNJXOFqXY
8.139   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
பண் - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/39 Thirupulambal Thiruvasagam.mp3
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
பண் -   (திருவாரூர் )
11.007   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை   திருவாரூர் மும்மணிக்கோவை
பண் -   (திருவாரூர் )

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.091   சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி )
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

[1]
பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே.

[2]
துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்
நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.

[3]
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்
கையினால்-தொழ, நையும், வினைதானே.

[4]
பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே.

[5]
பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்
வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.

[6]
வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்
செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.

[7]
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.

[8]
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.

[9]
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.

[10]
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.105   பாடலன் நால்மறையன்; படி பட்ட  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி )
பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;
கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

[1]
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்,
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்,
காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே.

[2]
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இரு பொழுதும்,
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய,
அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே.

[3]
வெந்து உறு வெண் மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின்
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான், அணி ஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றை அம்தார்ப் பரமன் அடி பரவ, பாவம்
நைந்து அறும்; வந்து அணையும், நாள்தொறும் நல்லனவே.

[4]
வீடு பிறப்பு எளிது ஆம்; அதனை வினவுதிரேல், வெய்ய
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்திக் கை வீசி
ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று
பாடுதல், கைதொழுதல், பணிதல், கருமமே.

[5]
கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடு இல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையான், மழு ஏந்தும்
அம் கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர்
தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

[6]
நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்-
சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்
ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே.

[7]
வல்லியந்தோல் உடையான், வளர் திங்கள் கண்ணியினான், வாய்த்த
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான்,
அல்லி அம் கோதை தன்னை ஆகத்து அமர்ந்து அருளி, ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

[8]
செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன
இந்திரஞாலம் ஒழிந்து, இன்பு உற வேண்டுதிரேல்,
அந்தர மூ எயிலும் அரணம் எரியூட்டி, ஆரூர்த்
தம் திரமா உடையான் அவன்-எம் தலைமையனே.

[9]
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல
அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை,
வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச்
சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே.

[10]

Back to Top
சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
11.007   திருவாரூர் மும்மணிக்கோவை  
பண் -   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்
டிலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப்
பொங்குபுயல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.

[1]
மனம்மால் உறாதேமற் றென்செய்யும் வாய்ந்த
கனமால் விடையுடையான் கண்டத் - தினமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்;
கான்றனநீர் ஏந்திழையாள் கண்.

[2]
கண்ணார் நுதல்எந்தை காமரு
கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில்
ஆல்மட மான் அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.

[3]
உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ
டலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமே அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
கங்குலும் பகலும் காவல் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்
றுலவா நல்வரம் அருளிய உத்தமன்
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே.

[4]
துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார்.

[5]
காரும் முழக்கொடு மின்னொடு
வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப்
புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே
நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆரூரன்
ஐய அணங்கினுக்கே.

[6]
அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதில் புரிகுழல்
வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காத லாகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து
அல்லியங் கோதை அழலுற் றாஅங்
கெல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ண லாரூர்
வளமலி கமல வாள்முகத்
திளமயிற் சாயல் ஏந்திழை தானே.

[7]
இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின்
உழையாகப் போந்ததொன் றுண்டோ - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மாநேர் அன்ன களிறு.

[8]
களிறு வழங்க வழங்கா
அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண்
டாய்விண்ணினின் றிழிந்து
பிளிறு குரற்கங்கை தாங்கிய
பிஞ்ஞகன் பூங்கழல்மாட்
டொளிறு மணிக்கொடும் பூண்இமை
யோர்செல்லும் ஓங்கிருளே.

[9]
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்நிறை கொடுமை உரைப்ப போன்றன
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியர்ப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றி
தன்னது அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரல்
சுரும்பிவர் நறும்போது கொய்யப்
பெருஞ்செறு வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.

[10]
பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்க
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போல்ஒருவன் வந்து.

[11]
வந்தார் எதிர்சென்று நின்றேற்கு
ஒளிரும்வண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில்
லேன் தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச்
சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா
வனத்துக் குளிர்புனத்தே.

[12]
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதலன் ஆக
விடுசுடர் நடுவண்நின் றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்விய ளாகி
முள்ளிலை யீந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் வேய்ந்து மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.

[13]
கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தாள் ஆவாக - பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ணாரூர் சூழ்ந்த தடம்.

[14]
தடப்பாற் புனற்சடைச் சங்கரன்
தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச்
சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியின் வெருவும்
இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனஅல்ல வால்தமி
யேன்தையல் பட்டனவே.

[15]
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல்முரம் பதரும் அல்லது படுமழை
வரல்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேன்இவர் கோதை செல்ல மானினம்
அம்சில் ஓதி நோக்கிற்கு அழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக
மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற
குன்ற வேய்களும் கூற்றடைந் தொழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி யாயின குரவே.

[16]
குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் றன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.

[17]
கடிமலர்க் கொன்றையுஞ் திங்களுஞ்
செங்கண் அரவும்அங்கண்
முடிமலர் ஆக்கிய முக்கணக்
கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன்
அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்ததெம் அம்மனையே.

[18]
மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதின் கரந்து
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மில் லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அனைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.

[19]
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே
ஏலா இங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.

[20]
பொய்யால் தொழவும் அருளும்
இறைகண்டம் போல்இருண்ட
மையார் தடங்கண் மடந்தையர்
கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்வனில்
புல்லல் கலையளையல்
ஐயா இவைநன்கு கற்றாய்
பெரிதும் அழகியவே.

[21]
அழகுறு கிண்கிணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்
தொருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்த
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்
தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செழும்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.

[22]
நீயிருந்திங் கென்போது நெஞ்சமே, நீளிருட்கண்
ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீயரங்கத்
தைவாய் அரவசைத்தான் நன்பணைத்தோட் கன்பமைத்த
செய்வான தூரன் திறம்.

[23]
திறமலி சின்மொழிச் செந்துவர்
வாயின எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக
வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத்
துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதன்
றோசொல்லும் நற்கயமே.

[24]
கயங்கெழு கருங்கடல் முதுகுதெரு மரலுற
இயங்குதிமில் கடவி எறிஇளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி
விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித்
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்குங் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும்
அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேர்செலச் சிறந்தது சிறுநல் லூரே.

[25]
ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.

[26]
புள்ளுந் துயின்று பொழுதிறு
மாந்து கழுதுறங்கி
நள்நென்ற கங்குல் இருள்வாய்ப்
பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண்
ணனைத்தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண்
தேர்வந் துலாத்தருமே.

[27]
உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து
புலால்நீர் ஒழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்
வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்
திடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற் கருளுதி யோஎன
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்க மெல்லாந் தானா யினனே.

[28]
ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.

[29]
தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போல்அய் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.

[30]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.079   பவனம் ஆய், சோடை ஆய்,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு தோய்ச்சு
அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ
வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள
கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[1]
தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும்
போவார்;
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்,
கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை
நெஞ்சே!
அம் தண் ஆருர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சே!

[2]
நிணம், குடர், தோல், நரம்பு, என்பு, சேர் ஆக்கைதான்
நிலாயது அன்றால்;
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக்
குலுங்கினாயே?
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு
ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சமே!

[3]
நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன, நித்தம்
நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[4]
பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத்
தூங்கினாயே?
மறவல், நீ! மார்க்கமே நண்ணினாய்; தீர்த்த நீர் மல்கு
சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[5]
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய்த்
தேரைவாய்ச் சிறுபறவை
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று
கருதினாயே?
முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்தும்
முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[6]
ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி,
வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு
மயங்கினாயே?
மாறு இலா வனமுலை மங்கை ஓர் பங்கினர், மதியம்
வைத்த
ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[7]
என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்து
இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால்
முகடு கொண்டு
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில்
மூழ்கிடாதே,
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[8]
தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம்,
என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப்
பற்றினாயே?
வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர்,
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[9]
நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து, இன்னம்
நேடிக் காணாப்
படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர்
மலையாள் பாக
வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து
எண்தோள்
அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[10]
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.101   பருக் கை யானை மத்தகத்து  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர்
என்பதே.

[1]
விண்ட வெள் எருக்கு, அலர்ந்த வன்னி, கொன்றை,
மத்தமும்,
இண்டை, கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை
போய்,
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர்
என்பதே.

[2]
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர், காலன் இன் உயிர்
மறுத்து மாணிதன் தன் ஆகம் வண்மை செய்த மைந்தன்,
ஊர்
வெறித்து மேதி ஓடி, மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி
அறுத்து மண்டி, ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே.

[3]
அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு பூசி மேனியில்,
குஞ்சி ஆர வந்தி செய்ய, அஞ்சல்! என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல் அடி, பணைத்த கொங்கை, நுண்
இடை,
அம்சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே.

[4]
சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை உன்னுவார் மனத்து
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்
தெங்கு உலாவு சோலை, நீடு தேன் உலாவு செண்பகம்
அங்கு உலாவி, அண்டம் நாறும் அம் தண் ஆரூர்
என்பதே.

[5]
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு, அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர்
துள்ளி வாளை பாய் வயல், சுரும்பு உலாவு நெய்தல்வாய்
அள்ளல் நாரை ஆரல் வாரும், அம் தண் ஆரூர் என்பதே.

[6]
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர், காமனை
மங்க வெங்கணால் விழித்த மங்கைபங்கன், மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து,
மாவின்மேல்
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே.

[7]
வரைத்தலம்(ம்) எடுத்தவன் முடித்தலம்(ம்) உரத்தொடும்
நெரித்தவன், புரத்தை முன்(ன்) எரித்தவன்(ன்), இருந்த ஊர்
நிரைத்த மாளிகைத் திருவின் நேர் அனார்கள், வெண் நகை
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே.

[8]
இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண் பறந்து, மெய்
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், செழுங்
குரா,
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே.

[9]
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம்
வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன்,
மேவும் ஊர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செநெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே.

[10]
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை,
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.045   அந்தம் ஆய், உலகு ஆதியும்  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,
வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்,
சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம்
எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ?

[1]
கருத்தனே! கருதார் புரம் மூன்று எய்த
ஒருத்தனே! உமையாள் ஒருகூறனே!
திருத்தனே! திரு ஆரூர் எம் தீவண்ண!
அருத்த! என், எனை அஞ்சல்! என்னாததே?

[2]
மறையன், மா முனிவன், மருவார் புரம்
இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான்,
சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ?

[3]
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரிந்து
எல்லி வந்து, இடுகாட்டு எரி ஆடுவான்-
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்;
அல்லல் தீர்த்து, எனை, அஞ்சல்! எனும்கொலோ?

[4]
குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி,
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை,
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்-
வருந்தும்போது எனை, வாடல்! எனும்கொலோ?

[5]
வார் கொள் மென்முலையாள் ஒரு பாகமா,
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்-
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்;
ஆர்கணா, எனை, அஞ்சல்! எனாததே?

[6]
வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமா,
துளைக்கையானை துயர் படப் போர்த்தவன்-
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்;
இளைக்கும்போது, எனை ஏன்று கொளும்கொலோ?

[7]
இலங்கை மன்னன் இருபதுதோள் இறக்
கலங்க, கால்விரலால், கடைக் கண்டவன்-
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்;
அலங்கல் தந்து, எனை, அஞ்சல்! எனும்கொலோ?

[8]
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படியவன், பனி மா மதிச் சென்னியான்-
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள் தான்; எனை, அஞ்சல்! எனும்கொலோ?

[9]
மாசு மெய்யினர், வண் துவர் ஆடை கொள
காசை போர்க்கும் கலதிகள், சொல் கொளேல்!
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்கொலோ?

[10]
வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம்,
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை,
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.004   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்பழனத்திலிருந்து திருநல்லூர், வலஞ்சுழி, குடமூக்கு முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூர் வந்தார். அடியார் பெருமக்கள் பலரும் எதிர்கொண்டழைத்துப் போற்றினர். திரு வாரூரில் புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும் பணிந்து பாடிளம் பூதத்தினானும் என்று தொடங்கிப் பதிகம் பாடினார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் திருவுலாப் போந்தருளியது கண்டு வணங்கி மகிழ்ந்து திருப்புகலூர்க்குப் புறப்பட்டார்.
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.

[1]
நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும்,
விரதம் கொண்டு ஆட வல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும்,
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த,
அரவு அரைச் சாத்தி நின்றானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.



[2]
நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும்,
ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும்,
நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும்,
ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

[3]
கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்,
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும்,
வம்பு நல் கொன்றையினானும், வாள் கண்ணி வாட்டம் அது எய்த
அம்பர ஈர் உரியானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.

[4]
ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,
தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும்,
தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க,
ஆழி வளைக் கையினானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.



[5]
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,
சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,
வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,
ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.



[6]
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருள வல்லானும்;
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கன்ற்ற நின்றானும்;
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடை கரந்தானும்;
அழல், கம், கை ஏந்த வல்லானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.



[7]
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.



[8]
வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்,
காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து
ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.



[9]
பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,
கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.005   மெய் எலாம் வெண் நீறு  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யல் ஆம் என்று எண்ணி, உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு,
கொய் உலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால்-தொழாது ஒழிந்து,-கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!

[1]
என்பு இருத்தி, நரம்பு தோல் புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு, என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி, அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி,-முயல் விட்டுக் காக்கைப்பின் போன ஆறே!

[2]
பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு
உருகுவித்து, என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்து, பிணி காட்டி, ஆட்கொண்டு, பிணி தீர்த்த ஆரூரர் தம்
அருகு இருக்கும் விதி இன்றி,-அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்ட ஆறே!

[3]
குண்டனாய்த் தலை பறித்து, குவிமுலையார் நகை காணாது, உழிதர் வேனை-
பண்டமாப் படுத்து, என்னைப் பால் தலையில்-தெளித்து, தன் பாதம் காட்டி,
தொண்டு எலாம் இசை பாட- தூமுறுவல் அருள் செய்யும் ஆரூரரைப்
பண்டு எலாம் அறியாதே,-பனி நீரால் பரவை செயப் பாவித்தேனே!

[4]
துன்நாகத்தேன் ஆகி, துர்ச்சனவர் சொல் கேட்டு, துவர் வாய்க்கொண்டு(வ்)
என்னாகத் திரிதந்து, ஈங்கு இருகை ஏற்றிட உண்டேன், ஏழையேன் நான்,
பொன் ஆகத்து அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே,-ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே!

[5]
பப்பு ஓதிப் பவணனாய்ப் பறித்தது ஒரு தலையோடே திரிதர் வேனை
ஒப்பு ஓட ஓதுவித்து, என் உள்ளத்தினுள் இருந்து, அங்கு உறுதி காட்டி,
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆர் அமுது ஆம் ஆரூரரை
எப்போதும் நினையாதே,-இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே!

[6]
கதி ஒன்றும் அறியாதே, கண் அழலைத் தலை பறித்து, கையில் உண்டு
பதி ஒன்று நெடுவீதிப் பலர் காண நகை நாணாது உழிதர் வேற்கு
மதி தந்த ஆருரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித்தீக் காய்ந்த ஆறே!

[7]
பூவை ஆய்த் தலை பறித்து, பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன் தன்
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே,-பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே!

[8]
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை, காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானை, சாராதே,-தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே!

[9]
மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க இரும்பு கடித்து எயத்த ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.017   எத் தீப் புகினும் எமக்கு  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.

[1]
வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர்
தாரமும் பூண்பர்; தமக்கு அன்புபட்டவர்
பாரமும் பூண்பர்; நன் பைங் கண் மிளிர் அரவு-
ஆரமும் பூண்பர்-அரநெறியாரே.

[2]
தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர்
வஞ்ச வண்ணத்தர்; வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர்; துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர்-அரநெறியாரே.

[3]
விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று
இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம்
கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும்
அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே.

[4]
துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம்
தற்றவர்; தம் வினை ஆன எலாம் அற
அற்றவர்; ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே.

[5]
கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள்
பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து
ஆடு அரவத்தர் -அரநெறியாரே.

[6]
கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்;
பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி
நாட வல்லார்; வினை வீட வல்லாரே.

[7]
பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை,
மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி
காலையும் மாலையும் கை தொழுவார் மனம்
ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.

[8]
முடி வண்ணம் வான மின் வண்ணம்; தம் மார்பின்
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்;
படி வண்ணம் பாற்கடல் வண்ணம்; செஞ்ஞாயிறு
அடி வண்ணம்-ஆரூர் அரநெறியார்க்கே.

[9]
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல்,
மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும்
அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.

[10]
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட
மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து,
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.019   சூலப் படை யானை; சூழ்  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி
கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை;
பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய
ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே.

[1]
பக்கமே பாரிடங்கள் சூழ, படுதலையில்
புக்க ஊர்ப் பிச்சை ஏற்று, உண்டு, பொலிவு உடைத்து ஆய்க்
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த, கோவணத்தோடு
அக்கு அணிந்த, அம்மானை-நான் கண்டது ஆரூரே.

[2]
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை,
மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை,
வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின்
ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே.

[3]
ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர,
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே.

[4]
தாம் கோல வெள் எலும்பு பூண்டு, தம் ஏறு ஏறி,
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர்த் தொல்-நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.

[5]
எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே.

[6]
போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான், வெள் வளையாள் தான் வெருவ,
ஊழித் தீ அன்னானை, ஒங்கு ஒலிமாப் பூண்டது ஓர்
ஆழித் தேர் வித்தகனை,-நான் கண்டது ஆரூரே.

[7]
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை,
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து
அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே.

[8]
கார முது கொன்றை கடி நாறு தண் என்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன்,
பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு
ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே.

[9]
தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன்,
கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான்,
ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை,
ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே.

[10]
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால்,
துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்-
செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று-
அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.020   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி
பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?-
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே!

[1]
கடம் பட(ந்) நடம் ஆடினாய்; களைகண் நினைக்கு ஒரு காதல் செய்து, அடி
ஒடுங்கி வந்து அடைந்தேன்; ஒழிப்பாய், பிழைப்ப எல்லாம்!-
முடங்கு இறா, முது நீர் மலங்கு, இள வாளை, செங்கயல், சேல் வரால், களிறு,
அடைந்த தண் கழனி, அணி ஆரூர் அம்மானே!

[2]
அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே!

[3]
பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா! உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்; என்ன குறை உடையேன்?-
ஓங்கு தெங்கு, இலை ஆர் கமுகு, இள வாழை, மாவொடு, மாதுளம், பல-
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே!

[4]
நீறு சேர் செழு மார்பினாய்; நிரம்பா மதியொடு நீள்சடை இடை
ஆறு பாய வைத்தாய்; அடியே அடைந்தொழிந்தேன்
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற, விண்ட மலர் இதழ் வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே!

[5]
அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை கெடும் என்று இ(வ்) வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆடக் காதல் ஆய்க்
குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத்
தெளிக்கும் தீர்த்தம் அறாத் திரு ஆரூர் அம்மானே!

[6]
திரியும் மூ எயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே! என் சிந்தையுள
பிரியும் ஆறு எங்ஙனே? பிழைத்தேயும் போகல் ஒட்டேன்
பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்று இவை அகத்து
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே!

[7]
பிறத்தலும், பிறந்தால் பிணிப் பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்கும் ஆறு உளதே; இழித்தேன், பிறப்பினை நான்;
அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச்செற்றக்குரோதம் நீக்கி, உன்
திறத்தனாயொழிந்தேன் -திரு ஆரூர் அம்மானே!

[8]
முளைத்த வெண்பிறை மொய் சடை உடையாய்! எப்போதும் என் நெஞ்சு இடம் கொள
வளைத்துக் கொண்டிருந்தேன்; வலி செய்து போகல் ஒட்டேன்
அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகு தந்த காலமும் கண்டு தன் பெடை
திளைக்கும் தண் கழனித் திரு ஆரூர் அம்மானே!

[9]
நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன்,
நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை,
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.021   முத்து விதானம்; மணி பொன்  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
திருவாரூரிலிருந்து வழியில் பல சிவதலங்களையும் தரிசித்துக் கொண்டே திருப்புகலூருக்கு வந்தார். அப்பொழுது முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரும் அப்பரை எதிர்கொண்டழைத்தார். திருவாரூரில் நிகழ்ந்த சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவத் திருநாவுக்கரசர், முத்து விதானம் என்று தொடங்கித் திருவாதிரைச் சிறப்பை எடுத்துரைத்தார்.
முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[1]
நணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்;-
மணியே! பொன்னே! மைந்தா! மணாளா! என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[2]
வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மா மணிகள்; ஒளி தோன்றச்
சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[3]
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[4]
நில வெண் சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்து, எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[5]
விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்;
தம் மாண்பு இலராய்த் தரியார், தலையான் முட்டுவார்
எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[6]
செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர், சித்தர், எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[7]
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல,
வடி கொள் வேய்த்தோள் வான் அரமங்கையர் பின் செல்ல,
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ,
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[8]
துன்பம், நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்,
இன்பம், நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்,
நுன்பின் எம்மை நுழையப் பணியே! என்பாரும்;
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[9]
பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.052   படு குழிப் பவ்வத்து அன்ன  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்;
முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!

[1]
புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது(வ்) வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை;
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய,
அழிப்பனாய் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!

[2]
பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து, நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சு அணி மிடற்றினானே! நாதனே! நம்பனே! நான்
அஞ்சினேற்கு, அஞ்சல்! என்னீர்-ஆரூர் மூலட்டனீரே!

[3]
கெண்டை அம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரி தந்து ஐவர் குலைத்து இடர்க் குழியில் நூக்கக்
கண்டு நான் தரிக்ககில்லேன்; காத்துக் கொள்! கறை சேர் கண்டா!
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே!

[4]
தாழ் குழல் இன் சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று(வ்)
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன்? எந்தை பெம்மான்!
வாழ்வ தேல் அரிது போலும்; வைகலும் ஐவர் வந்து(வ்)
ஆழ் குழிப் படுக்க ஆற்றேன்-ஆரூர் மூலட்டனீரே!

[5]
மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி இலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர்; சிக்கனவு உடையர் ஆகிக்
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய,
ஆற்றவும் கில்லேன், நாயேன் ஆரூர் மூலட்டனீரே!

[6]
உயிர் நிலை உடம்பே காலா, உள்ளமே தாழி ஆக,
துயரமே ஏற்றம் ஆக, துன்பக் கோல் அதனைப் பற்றி,
பயிர் தனைச் சுழிய விட்டு, பாழ்க்கு நீர் இறைத்து, மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே!

[7]
கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு ஆடிப்
பெற்ற தேல் பெரிதும் துன்பம்; பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய
அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே!

[8]
பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய் வினை பலவும் செய்ய,
மத்து உறு தயிரே போல மறுகும், என் உள்ளம் தானும்
அத்தனே! அமரர்கோவே! ஆரூர் மூலட்டனீரே!

[9]
தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்;
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.053   குழல் வலம் கொண்ட சொல்லாள்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே.

[1]
நாகத்தை நங்கை அஞ்ச; நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தைத் தவிர, நாகம்; வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும், ஆரூரனார்க்கே.

[2]
தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்
அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர்
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப்
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே.

[3]
நஞ்சு இருள் மணி கொள் கண்டர்; நகை இருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே.

[4]
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த,
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டு,
தம் சடைத் தொத்தினாலும் த(ம்)மது ஓர் நீர்மையாலும்
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே.

[5]
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்,
ஊன் அகம் கழிந்த ஓட்டில்; உண்பதும், ஒளி கொள் நஞ்சம்-
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே.

[6]
அஞ்சு அணை கணையினானை அழல் உற அன்று நோக்கி,
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு(வ்),
அஞ்சு அணை அஞ்சும் ஆடி, ஆடு அரவு ஆட்டுவார் தாம்,
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டாரே.

[7]
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீரப்
பிணங்கு உடைச் சடையில் வைத்த பிறை உடைப் பெருமை அண்ணல்,
மணம் கமழோதி பாகர்-மதி நிலா வட்டத்து ஆடி
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே.

[8]
நகல் இடம் பிறர்கட்கு ஆக, நால்மறையோர்கள் தங்கள்
புகல் இடம் ஆகி வாழும் புகல் இலி-இருவர் கூடி
இகல் இடம் ஆக, நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி,
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே.

[9]
ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.101   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[1]
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[2]
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[3]
மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ-
தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[4]
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, அரனே! என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[5]
வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று, வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ-
தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன், செய்ய-
பூங்கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[6]
பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ-
திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள்
புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[7]
கரப்பர்கள், மெய்யை; தலை பறிக்கச் சுகம் என்னும் குண்டர்
உரைப்பன கேளாது, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
திருப் பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்-
பொருப்பன், விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[8]
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[9]
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.102   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை பெருக்கி,
தூம்பினைத் தூர்த்து, அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர், தொண்டீர்!
ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ்,
சாம்பலைப் பூசி, சலம் இன்றி, தொண்டுபட்டு உய்ம்மின்களே!

[1]
ஆராய்ந்து, அடித்தொண்டர் ஆணிப் பொன், ஆரூர் அகத்து அடக்கிப்
பார் ஊர் பரப்பத் தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான்,
நார் ஊர் நறுமலர் நாதன், அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால்-திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே!

[2]
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்-
தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே!

[3]
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா மதி அணிந்து,
முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி,
பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன், ஆரூர் அமுதினுக்கே.

[4]
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார்; இவர்கள் நிற்க,
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை, யாது ஒன்று? நான் உன்னை வேண்டுவனே.

[5]
கொடி, கொள் விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கோடு,
இடிவு இல் பெருஞ் செல்வம் எய்துவர்; எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும், அம் தவளப்-
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும், நந்தி புறப்படினே.

[6]
சங்கு ஒலிப்பித்திடுமின், சிறுகாலைத் தடவு அழலில்
குங்கிலியப்புகைக்கூட்டு என்றும் காட்டி! இருபதுதோள்
அங்கு உலம் வைத்தவன் செங்குருதிப்புனல் ஓட அஞ் ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே.

[7]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.006   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்,
செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன்,
அப் போதைக்கு, அஞ்சல்! என்னும்-ஆரூரனே.

[1]
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்,
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்,
படையின் நேர் தடங்கண் உமை பாகமா
அடைவர்போல், இடுகாடர்-ஆரூரரே.

[2]
விண்ட வெண்தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்;
துண்டவெண்பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே.

[3]
விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி
கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்;
உடையும் சீரை; உறைவது காட்டுஇடை;
அடைவர்போல், அரங்குஆக; ஆரூரரே.

[4]
துளைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்;
வளைக்கையாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.

[5]
பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா,
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே,
சுண்ண-நீறு மெய்ப் பூசி, சுடலையின்
அண்ணி ஆடுவர்போலும்-ஆரூரரே.

[6]
மட்டு வார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்-
கட்டுவாங்கம், கனல், மழு, மான் தனோடு,
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே.

[7]
தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்;
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.

[8]
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்;
கொண்ட கோவண ஆடையன்கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே.

[9]
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்;
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.007   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்,
அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.

[1]
எந்த மா தவம் செய்தனை, நெஞ்சமே!-
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே?

[2]
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு
இண்டைமாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.

[3]
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்,
என்பு எலாம் நெக்கு, இராப்பகல் ஏத்தி நின்று,
இன்பராய் நினைந்து, என்றும் இடை அறா
அன்பர் ஆமவர்க்கு அன்பர்-ஆரூரரே.

[4]
முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம்,
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர்,
முரண்-தடித்த அத் தக்கன் தன் வேள்வியை
அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே!

[5]
எம் ஐயார் இலை; யானும் உளேன் அலேன்;
எம்மை யாரும் இது செய வல்லரே?
அம்மை யார், எனக்கு? என்று என்று அரற்றினேற்கு
அம்மை ஆரத் தந்தார், ஆரூர் ஐயரே.

[6]
தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,-
செண்டு அது ஆடிய தேவரகண்டனை,
கண்டு கண்டு இவள் காதலித்து அன்பு அது ஆய்க்
கொண்டி ஆயின ஆறு, என் தன் கோதையே!

[7]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list