சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாளை உடைக் கமுகு ஓங்கி,
பண் - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=au0ryk1FOoo
4.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரு நட்ட கண்டனை, அண்டத்
பண் - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qKzTzfPNIow
4.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் கொண்டு மூடிக் கடல்
பண் - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=A32b1qIWuMw
4.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   படை ஆர் மழு ஒன்று
பண் - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=eig6G1xaZM4
4.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலை எழுந்து, கடிமலர் தூயன
பண் - திருவிருத்தம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=Ja2zArm5ffk
4.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற
பண் - திருவிருத்தம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LUfkIoXphyA
4.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
பண் - திருவிருத்தம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xEIhCMkZD9U
4.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாலினை மால் உற நின்றான்,
பண் - திருவிருத்தம்   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=pT_B4tkck3g
4.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் இடம் சாடிய பல்
பண் - திருவிருத்தம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xOSrrpCR2YY
4.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   கையது, கால் எரி நாகம்,
பண் - திருவிருத்தம்   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=O6ovrf3yUtA
4.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   குறுவித்தவா, குற்றம் நோய் வினை
பண் - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=EcomQKQFDbc
4.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
பண் - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=S11_PW4-fX0
4.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவர் தானவர் வைகல் மலர்
பண் - திருவிருத்தம்   (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs
4.094   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம்   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8
4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
பண் - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wPzaZrWsx_E
4.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்
பண் - திருவிருத்தம்   (திருச்சத்திமுற்றம் வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=lH-R3BTHJ4Q
4.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   அட்டுமின், இல் பலி! என்று
பண் - திருவிருத்தம்   (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=6_bUKILqIFE
4.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
பண் - திருவிருத்தம்   (திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zKE8RxiX5Ao
4.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதுவித்தாய், முன் அற உரை;
பண் - திருவிருத்தம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dSuaUHZ0C5U
4.100   திருநாவுக்கரசர்   தேவாரம்   மன்னும் மலைமகள் கையால் வருடின;
பண் - திருவிருத்தம்   (திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=npcFMuLv1bM
4.101   திருநாவுக்கரசர்   தேவாரம்   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
பண் - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pb6x_HCD83U
4.102   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
பண் - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=S9DI4ZlI9zA
4.103   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடிவு உடை மாமலைமங்கை பங்கா!
பண் - திருவிருத்தம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MMUx_48xcZA
4.104   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் ஒள்வாள் போல்
பண் - திருவிருத்தம்   (திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-I3U494sOPI
4.105   திருநாவுக்கரசர்   தேவாரம்   தன்னைச் சரண் என்று தாள்
பண் - திருவிருத்தம்   (திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=hUJDOFGkh8k
4.106   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெய்தல் குருகு தன் பிள்ளை
பண் - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pMp7aCaeAm8
4.107   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த
பண் - திருவிருத்தம்   (திருக்கடவூர் வீரட்டம் பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Koeyeluippo
4.108   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாணிக்கு உயிர் பெறக் கூற்றை
பண் - திருவிருத்தம்   (திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=M5NdWJa-QAU
4.109   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொன் ஆர் திருவடிக்கு ஒன்று
பண் - திருவிருத்தம்   (திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=PjnXvyDvdyM
4.111   திருநாவுக்கரசர்   தேவாரம்   விடையும் விடைப் பெரும் பாகா!
பண் - திருவிருத்தம்   (பொது -சரக்கறை திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=V2RlPFkwLy8
4.112   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=IGooaC72-8s
4.113   திருநாவுக்கரசர்   தேவாரம்   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.080   பாளை உடைக் கமுகு ஓங்கி,  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?

[1]
பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்,
உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[2]
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்,
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்,
உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[3]
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

[4]
செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்,
கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

[5]
ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன்,
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன்,
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

[6]
தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க
எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[7]
சுற்றும் அமரர், சுரபதி, நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்,
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன்,
நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[8]
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

[9]
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.081   கரு நட்ட கண்டனை, அண்டத்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை,
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை, செந் தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியை, தில்லைக்கு இறையை, சிற்றம்பலத்துப்
பெரு நட்டம் ஆடியை, வானவர் கோன் என்று வாழ்த்துவனே.

[1]
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா;
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
என்று வந்தாய்? என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

[2]
கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே?
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி,
என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே!

[3]
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

[4]
வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி; மதித்திடுமின்!
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன்,-பத்தர் உள்ள
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான், தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ, நம் தம் கூழைமையே?

[5]
பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள்
ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்;
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?

[6]
முடி கொண்ட மத்தமும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிப்பும்,
துடி கொண்ட கையும், துதைந்த வெண் நீறும், சுரி குழலாள்
படி கொண்ட பாகமும், பாய் புலித்தோலும், என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா, தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே!

[7]
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்;
இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே!

[8]
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து, புரிசடைகள்
மின் ஒத்து இலங்க, பலி தேர்ந்து, உழலும் விடங்க வேடச்-
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால், இவ் இரு நிலமே.

[9]
சாட எடுத்தது, தக்கன் தன் வேள்வியில் சந்திரனை;
வீட எடுத்தது, காலனை; நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது,-தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ,-நம்மை ஆட்கொண்டதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.082   பார் கொண்டு மூடிக் கடல்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, இவர் எம்பெருமான் என்று சுட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞான சம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திரு வடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப் பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞான சம்பந்தர் கைகளைப்பற்றிக்கொண்டு தாமும் வணங்கி அப்பரே என்று அழைக்க, நாவுக்கரசரும் அடியேன் என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் பார்கொண்டுமூடி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
நல்ல நண்பரகள் நட்பு கிடைக்க
பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம்
கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?

[1]
கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும் கலந்து இலங்க
உடையான், உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி
விடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள
அடைவார்-வினைகள் அவை என்க!-நாள் தொறும் ஆடுவரே!

[2]
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து கொண்டு
நுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழு மலத்துள்(ள்) அழுந்தும்
விரை வாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கே
வரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.

[3]
விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்; விழுமிய நூல்
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர்; கேட்கில் உலகம் முற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட, கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே.

[4]
சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை!
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை, பசுபதியை,
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு
முந்தித் தொழு கழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே.

[5]
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய்,
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம்,
சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர்,
அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

[6]
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்து அமரர்
சுற்றிக் கிடந்து, தொழப்படுகின்றது-சூழ் அரவம்
தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும்
கற்றைச் சடை முடியார்க்கு இடம் ஆய கழுமலமே.

[7]
உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து
அடையும் உனை வந்து அடைந்தார், அமரர் அடி இணைக்கீழ்;
நடையும் விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள
விடையன் தனிப் பதம் நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

[8]
பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை; இப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படுகின்றது;-நீண்டு இருவர்
சிரமப்பட வந்து சார்ந்தார், கழல் அடி காண்பதற்கே-
அரவக் கழல் அடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.

[9]
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத்
தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத்
தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே-
அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.083   படை ஆர் மழு ஒன்று  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்,
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்-
மடைவாய்க் குருகு இனம், பாளை விரிதொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு, பேராது இருக்கும்-பெரும்பதியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.085   காலை எழுந்து, கடிமலர் தூயன  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[1]
வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[2]
அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான்,
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன்,
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[3]
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும்
பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே
சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!

[4]
கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை
நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்;
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்,
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே.

[5]
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!

[6]
ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்,
தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!

[7]
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[8]
கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்;
விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்;
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[9]
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த
துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.086   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச்
சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே.

[1]
சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்; தொண்டு ஆய் அடைந்தார்
அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி?-அலை கொள் முந்நீர்
மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!

[2]
பரவை வரு திரை நீர்க் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணி தரு-கொன்றை, இளந் திங்கள், சூடியது ஓர்
குரவ நறுமலர், கோங்கம், அணிந்து குலாய-சென்னி,
உரவு திரை கொணர்ந்து எற்று, ஒற்றியூர் உறை உத்தமனே!

[3]
தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது; தன் அடைந்தார்
ஊன் அகம் நாறும் உடை தலையில், பலி கொள்வது, தான்;
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறை வார் அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே.

[4]
வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!

[5]
புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்-
பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே.

[6]
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை; இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட நாள்
அன்று, அரைக் கண்ணும் கொடுத்து, உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே!

[7]
சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர் இடை நீ
ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு, உறும் என்று எண்ணி
விற்றி கண்டாய்; மற்று இது ஒப்பது இல், இடம்-வேதியனே!

[8]
சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்;
ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம்
பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத்
தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே?

[9]
அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே.

[10]
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான்,
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.087   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!

[1]
சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்; கடைத் தலையில்
மற்று நின்றார்; திருமாலொடு நான்முகன் வந்து அடிக்கீழ்ப்
பற்றி நின்றார், -பழனத்து அரசே!-உன் பணி அறிவான்
உற்று நின்றார்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[2]
ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து போய்; மேல் அவையும்
கூடி நின்றாய்; குவிமென் முலையாளையும் கொண்டு உடனே-
பாடி நின்றாய்;-பழனத்து அரசே!-அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய்; அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே!

[3]
எரித்து விட்டாய், அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்;
உரித்து விட்டாய், உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை;
பரித்து விட்டாய்,-பழனத்து அரசே!-கங்கை வார் சடை மேல்-
தரித்து விட்டாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[4]
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே-
மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே!
உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[5]
ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை;
காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும்
பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[6]
மற்று வைத்தாய், அங்கு ஓர் மால் ஒரு பாகம்; மகிழ்ந்து உடனே-
உற்று வைத்தாய், உமையாளொடும் கூடும் பரிசு எனவே;
பற்றி வைத்தாய்,-பழனத்து அரசே!-அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[7]
ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு
பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[8]
போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை;
ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால்
ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[9]
அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக்
கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே-
படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல்
உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.088   மாலினை மால் உற நின்றான்,  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருப்பூந்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு அழகாலமர்ந்தநாயகி உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி )
மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய
பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல்
போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.

[1]
மறி உடையான், மழுவாளினன், மாமலை மங்கை ஓர்பால்
குறி உடையான், குணம் ஒன்று அறிந்தார் இல்லை; கூறில், அவன்
பொறி உடை வாள் அரவத்தவன்; பூந்துருத்தி(ய்) உறையும்
அறிவு உடை ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.

[2]
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால்
அறுத்தனை, ஆல் அதன் கீழனை, ஆல்விடம் உண்டு அதனைப்
பொறுத்தனை, பூதப்படையனை, பூந்துருத்தி(ய்) உறையும்
நிறுத்தனை, நீலமிடற்றனை-யான் அடி போற்றுவதே.

[3]
உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற
திருவினை, தேசம் படைத்தனை, சென்று அடைந்தேனுடைய
பொரு வினை எல்லாம் துரந்தனை, பூந்துருத்தி(ய்) உறையும்
கருவினை, கண் மூன்று உடையனை-யான் அடி போற்றுவதே.

[4]
தக்கன்தன் வேள்வி தகர்த்தவன்,-சாரம், அது(வ்) அன்று-கோள
மிக்கன மும்மதில் வீய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால்
புக்கனன், பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி(ய்) உறையும்
நக்கனை, நங்கள் பிரான்தனை-நான் அடி போற்றுவதே.

[5]
அருகு அடை மாலையும் தான் உடையான், அழகால் அமைந்த
உரு உடை மங்கையும் தன் ஒரு பால் உலகு ஆயும் நின்றான்,
பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி(ய்) உறையும்
திரு உடைத் தேச மதியனை-யான் அடி போற்றுவதே.

[6]
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும்
அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே.

[7]
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான்,
என் நிறம்? என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார்
பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும்
எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே.

[8]
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய
செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும்
நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே.

[9]
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே
வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே
மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும்
மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.089   பார் இடம் சாடிய பல்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[1]
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல்
பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!

[2]
கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம், ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி, பொருததும், -தேசம் எல்லாம் அறியும்;-
குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரை மேல்,
சென்று அடைந்தார் வினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே!

[3]
கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச்
சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[4]
கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி, மத்தமும், கூவிளமும்,
மொய்ம்மலர், வேய்ந்த விரிசடைக்கற்றை விண்ணோர் பெருமான்;
மைம்மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர் பால் மகிழ்ந்தான்;
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே.

[5]
பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே
போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச்
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே.

[6]
பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல் உடையன்;
முற்றின மூன்றும் மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்;
சுற்றிய பூதப்படையினன்சூலம் மழு ஒருமான்,
செற்று நம் தீவினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே.

[7]
விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்;
உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே-
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட,
தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.

[8]
தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய செஞ்சடை மேல்
வாங்கா மதியமும், வாள் அரவும், கங்கை, தான் புனைந்தான்;
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான், உமையவளோடு; நெய்த்தானத்து இருந்தவனே.

[9]
ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால்
மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை
நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.090   கையது, கால் எரி நாகம்,  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவேதிகுடி ; (திருத்தலம் அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது;
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே.

[1]
கைத்தலை மான் மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்;
பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்;
செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதி குடி
அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.

[2]
முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்;
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும்
செம் பொனை; நல் மலர் மேலவன் சேர் திரு வேதி குடி
அன்பனை; நம்மை உடையனை;-நாம் அடைந்து ஆடுதுமே.

[3]
பத்தர்கள், நாளும் மறவார், பிறவியை ஒன்று அறுப்பான்;
முத்தர்கள் முன்னம் பணி செய்து பார் இடம் முன் உயர்ந்தான்;
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதி குடி
அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே

[4]
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார்? அவர் கை
மான் அணைந்து ஆடும்; மதியும் புனலும் சடை முடியன்;
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதி குடி,
ஆன் அண் ஐந்து ஆடும், மழுவனை-நாம் அடைந்து ஆடுதுமே.

[5]
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய,
பண்ணின் இசை மொழி பாடிய வானவர் தாம் பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதி குடி
நண்ண அரிய அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.

[6]
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்;
ஆர்ந்த மடமொழி மங்கை ஓர் பாகம் மகிழ்ந்து உடையான்;
சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதி குடிச்
சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.

[7]
எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள
திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்;
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதி குடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே.

[8]
மை அணி கண்டன்; மறை விரி நாவன்; மதித்து உகந்த
மெய் அணி நீற்றன்; விழுமிய வெண்மழுவாள் படையன்;
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.

[9]
வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய
திருத்தனை, தேவர் பிரான் திரு வேதி குடி உடைய
அருத்தனை, ஆரா அமுதினை,-நாம் அடைந்து ஆடுதுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.091   குறுவித்தவா, குற்றம் நோய் வினை  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய்
உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[1]
கூர்வித்தவா, குற்றம் நோய்வினை காட்டியும்! கூர் வித்த நோய்
ஊர்வித்தவா! உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
ஆர்வித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சேர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[2]
தாக்கினவா, சலம் மேல் வினை காட்டியும்! தண்டித்த நோய்
நீக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
ஆக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
நோக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[3]
தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால்
நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[4]
இழிவித்த ஆறு, இட்ட நோய் வினைக் காட்டி! இடர்ப்படுத்துக்
கழிவித்தவா! கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி
அழிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொழுவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[5]
இடைவித்த ஆறு, இட்ட நோய்வினை காட்டி! இடர்ப்படுத்து(வ்)
உடைவித்த ஆறு! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அடைவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[6]
படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய்
அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[7]
மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த நோய்
துறப்பித்தவா! துக்க நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
இறப்பித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சிறப்பித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[8]
துயக்கினவா, துக்க நோய்வினை காட்டி! துயக்கின நோய்
இயக்கின ஆறு! இட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்து அருளி
அயக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
மயக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[9]
கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள
இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள்
அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே;
பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.092   சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி
அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.

[1]
இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என் மனத்தே
பொழித்தன; போர் எழில் கூற்றை உதைத்தன; போற்றவர்க்கு ஆய்க்
கிழித்தன, தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று
அழித்தன-ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.

[2]
மணி நிறம் ஒப்பன; பொன் நிறம் மன்னின; மின் இயல் வாய்
கணி நிறம் அன்ன; கயிலைப் பொருப்பன; காதல் செய்யத்
துணிவன; சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன; சேயன, தேவர்க்கு;-ஐயாறன் அடித்தலமே.

[3]
இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து, உண் பொருள் நாடி, புகல் இழந்த
குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும்-ஐயாறன் அடித்தலமே.

[4]
எழுவாய் இறுவாய் இலாதன; எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன; மா நரகக் குழிவாய்
விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[5]
துன்பக்கடல் இடைத் தோணித்தொழில் பூண்டு, தொண்டர் தம்மை
இன்பக்கரை முகந்து ஏற்றும் திறத்தன; மாற்று அயலே
பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப் பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[6]
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன்
தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே.

[7]
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலை
வருத்திக் கடி மலர்வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்-
அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.

[8]
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து பல்பேய்
கூடி முழவக் குவி கவிழ் கொட்ட, குறு நரிகள்
நீடும் குழல் செய்ய, வையம் நெளிய நிணப் பிணக்காட்டு
ஆடும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[9]
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா
என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.

[10]
மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி
நிலை ஆய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள் நிலத்துப்
புலை ஆடு புன்மை தவிர்ப்பன-பொன்னுலகம்(ம்) அளிக்கும்,
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே.

[11]
பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன; போற்றி! என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன; பொன் அனையாள்
சிலம்பும், செறி பாடகமும், செழுங் கிண்கிணித்திரளும்,
அலம்பும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[12]
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன; ஓதி நன் நூல்
கற்றார் பரவப் பெருமை உடையன; காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்;
அற்றார்க்கு அரும்பொருள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[13]
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார்
ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு
ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச
ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[14]
மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின்
மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார்
தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[15]
பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால்
ஏணிப்படி நெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடி மேல்
மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி,
ஆணிக் கனகமும் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.

[16]
ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த
வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும்
சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு;
ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே.

[17]
சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி-அணி ஆர் வளைக்கரம் கூப்பி நின்று,
வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.

[18]
சுழல் ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன; என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ; காலவனம் கடந்த
அழல் ஆர் ஒளியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[19]
வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற வரை அடர்த்து
மெலியா வலி உடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே
பலி சேர் படு கடைப் பார்த்து, பல்-நாளும் பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும்-ஐயன் ஐயாறன் அடித்தலமே.

[20]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.093   வானவர் தானவர் வைகல் மலர்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருக்கண்டியூர் ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.

[1]
வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன்,
கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.

[2]
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை,
உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்;
கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.

[3]
முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற(வ்) விடை ஏறி, ஓர் கூற்று ஒருபால் உடையான்;
கடிய முற்று அவ் வினைநோய் களைவான், கண்டியூர் இருந்தான்;
அடியும் உற்றார் தொண்டர்; இல்லைகண்டீர், அண்டவானரே.

[4]
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள் போல்
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான், முன்னமே கொடுத்த
கல்- தம் குடையவன் தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம், அண்டர் கூறுவதே.

[5]
போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம்
சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக்
காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே.

[6]
அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று
சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக்
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே.

[7]
அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம்,
இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக்
கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே.

[8]
மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத்
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக்
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?

[9]
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.094   ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார்.
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.

[1]
பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும்
சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு;
உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.

[2]
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?

[3]
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.

[4]
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!

[5]
கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்;
உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்,
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;
தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!

[6]
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.

[7]
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!

[8]
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.

[9]
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.095   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு தோகையம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தோன்றாத்துணையீசுவரர் திருவடிகள் போற்றி )
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[1]
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர்! பசு ஏற்று உகந்தீர்
வெந்தழல் ஓம்பும் மிழலை உள்ளீர்!-என்னைத் தென்திசைக்கே
உந்திடும்போது மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[2]
அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[3]
தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[4]
தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[5]
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[6]
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்! தூய வெள் எருது ஒன்று
ஏற்றம் கொண்டீர்! எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம் கொண்டு என்மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெங்
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[7]
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பு அரைப் பற்று உடையீர்! படர் தீப் பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்! மிழலை உள்ளீர்!-பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[8]
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[9]
கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும்
நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள
இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.096   கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருச்சத்திமுற்றம் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து கோவாய்முடுகி என்று தொடங்கி கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக என்று திருவடி தீகை்ஷ செய்யுமாறு வேண்டினர்.
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத்
தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[1]
காய்ந்தாய், அநங்கன் உடலம் பொடிபட; காலனை முன்
பாய்ந்தாய், உயிர் செக; பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய், அடியேற்கு அருளாய்! உன் அன்பர் சிந்தை
சேர்ந்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[2]
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப,
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி!
அத்தா! அடியேன் அடைக்கலம் கண்டாய்-அமரர்கள் தம்
சித்தா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[3]
நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று
அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்;
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[4]
கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன்; கருப்புவியில்-
தெருவில் புகுந்தேன்; திகைத்த(அ)அடியேனைத் திகைப்பு ஒழிவி!
உருவில்-திகழும் உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[5]
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதிவை! ஈங்கு இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்?-
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[6]
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[7]
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு, இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய், நீலகண்டா!
புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்!-
திகழ்ந்த திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[8]
தக்கு ஆர்வம் எய்திச் சமண் தவிர்ந்து உன் தன் சரண் புகுந்தேன்;
எக் காதல், எப் பயன், உன் திறம் அல்லால் எனக்கு உளதே?-
மிக்கார் திலையுள் விருப்பா! மிக வடமேரு என்னும்
திக்கா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[9]
பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன் பொன்முடி தோள்
இற, தாள் ஒருவிரல் ஊன்றிட்டு, அலற இரங்கி, ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய்; கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.097   அட்டுமின், இல் பலி! என்று  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவக்கொழுந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.

[1]
பெண் இட்டம் பண்டையது அன்று; இவை பெய் பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு, வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே
பண் இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி, நோக்கி நின்று,
கண்ணிட்டு, போயிற்றுக் காரணம் உண்டு-கறைக்கண்டரே.

[2]
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர்
இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து,
நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ?
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே.

[3]
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய,
நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால்
துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்
நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.

[4]
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ;
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்;
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே.

[5]
தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்;
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல்
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே.

[6]
நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா! என்று சொல்லிக் கிறிபடத் தான்
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ, இவ் அகலிடமே?

[7]
அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல்
நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்-
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே.

[8]
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை,
அன்னியர் அற்றவர், அங்கணனே, அருள் நல்கு! என்பரே.

[9]
திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல்,
குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி,
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.

[10]
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக்
கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான்,
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே?


[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.098   அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

[1]
பாடகக் கால்; கழல்கால்; பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக் கால்; நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின் நடந்த
காடு அகக் கால்; கணம் கைதொழும் கால்; எம் கணாய் நின்ற கால்;
ஆடகக்கால்-அரிமால் தேர அல்லன் ஐயாற்றனவே.

[2]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.099   ஓதுவித்தாய், முன் அற உரை;  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!

[1]
எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,-
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய்?-
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்-
தொத்தினை ஏய்க்கும் படியாய்! பொழில் கச்சி ஏகம்பனே!

[2]
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப்
பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக்
கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே!

[3]
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்,
கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே?
பிறைத்துண்ட வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே!

[4]
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக்
கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம்,
விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள்,
இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.

[5]
கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்)
உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்;
திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா!
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!

[6]
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்,
உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்;
புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;-
எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?

[7]
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே!
கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள்
சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, நின் தாள் சரண் என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே!

[8]
ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, அல்லம் என்னில்,
சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே!

[9]
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித்
துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான்
வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!-
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.100   மன்னும் மலைமகள் கையால் வருடின;  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.

[1]
பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன்
உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[2]
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு
இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே.

[3]
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள்
வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[4]
அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க்
கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம்
பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு
இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[5]
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா
ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு
ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.

[6]
போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[7]
பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன்
குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; கூட ஒண்ணாச்
சயம்பு என்றே, தகு தாணு என்றே, சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.

[8]
அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்
சய சய என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.

[9]
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,
உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன்
இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.101   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[1]
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[2]
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[3]
மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ-
தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[4]
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, அரனே! என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[5]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list