sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,சுரும்பும்
கௌசிகம்   (திருத்தண்டலைநீணெறி நீணெறிநாதேசுவரர் ஞானாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XlEG3q_gV_U

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.050   விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,சுரும்பும்  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருத்தண்டலைநீணெறி ; (திருத்தலம் அருள்தரு ஞானாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நீணெறிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!

[1]
இகழும் காலன் இதயத்தும், என் உளும்,
திகழும் சேவடியான் திருந்தும்(ம்) இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே!

[2]
பரந்த நீலப் படர் எரி வல்விடம்
கரந்த கண்டத்தினான் கருதும்(ம்) இடம்
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே!

[3]
தவந்த என்பும், தவளப்பொடியுமே,
உவந்த மேனியினான் உறையும்(ம்) இடம்
சிவந்த பொன்னும் செழுந் தரளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி; காண்மினே!

[4]
இலங்கை வேந்தன் இருபது தோள் இற,
விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம்
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!

[8]
கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்று
இருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம்
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்-
நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே!

[9]
கலவு சீவரத்தார், கையில் உண்பவர்
குலவமாட்டாக் குழகன் உறைவு இடம்
சுலவு மா மதிலும், சுதை மாடமும்,
நிலவு தண்டலை நீணெறி; காண்மினே!

[10]
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை,
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார்
மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.

[11]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php?column_name=thalam&string_value=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF&lang=tamil;