சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுரர் உலகு, நரர்கள் பயில்
பண் - சாதாரி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=7yjD5f5r-uk
3.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாள வரி கோள புலி
பண் - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=c27cbwflKjI
3.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
பண் - சாதாரி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=WYOJC7-4s6g
3.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏன எயிறு, ஆடு அரவொடு,
பண் - சாதாரி   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vOagAP6nv-0
3.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோழை மிடறு ஆக, கவி
பண் - சாதாரி   (திருவைகாவூர் வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை)
3.072   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி   (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KazBwKsulkI
3.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடல் மறை, சூடல் மதி,
பண் - சாதாரி   (திருப்பட்டீச்சரம் பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=sKE5tlWTjIk
3.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காடு பயில் வீடு, முடை
பண் - சாதாரி   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3vQ-3kBn0Xc
3.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எம் தமது சிந்தை பிரியாத
பண் - சாதாரி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=XwtiN8-Fq5U
3.076   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல் பொலி சுரத்தின் எரி
பண் - சாதாரி   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dUC_96iNzuM
3.077   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொன் இயல் பொருப்பு அரையன்
பண் - சாதாரி   (திருமாணிகுழி மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=sg782MhNnpA
3.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0
3.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்
பண் - சாதாரி   (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=A_SShuNsLwI
3.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் மருவு தேசினொடு தேசம்
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=NYSlduaFQTs
3.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சங்கு அமரும் முன்கை மட
பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5QY8RVXSyI8
3.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொம்பு இரிய வண்டு உலவு
பண் - சாதாரி   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ao3mW_l30rI
3.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்டு இரிய விண்ட மலர்
பண் - சாதாரி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=iwK0iw8HAuM
3.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் இயல் உருவினர், பெருகிய
பண் - சாதாரி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=IBQf-wnI-Qo
3.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மட்டு ஒளி விரிதரு மலர்
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=dtfTdVY96p4
3.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முறி உறு நிறம் மல்கு
பண் - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bRjVXotc8Bc
3.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் ஒளி
பண் - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KvNAaFJNW_w
3.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மத்தகம் அணி பெற மலர்வது
பண் - சாதாரி   (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=IxnRQYoM4Lg
3.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருந்து மா களிற்று இள
பண் - சாதாரி   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=qxnlxhDjPz4
3.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓங்கி மேல் உழிதரும் ஒலி
பண் - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
3.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்
பண் - சாதாரி   (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ScheEyGSH0Q
3.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவை; மந்திரம், மறுமை
பண் - சாதாரி   (திருநெல்வேலி )
Audio: https://www.youtube.com/watch?v=y7lNMHc4Tas
Audio: https://sivaya.org/audio/3.092 Marunthavai Manthiram.mp3
3.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படியுள் ஆர் விடையினர், பாய்
பண் - சாதாரி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dsEr-9XjUeE
3.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண்ணவர் தொழுது எழு வெங்குரு
பண் - சாதாரி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=ydJXW_iHLFg
3.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
பண் - சாதாரி   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3ofD_0bLR3o
3.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல் வெணெய் விழுது பெய்து
பண் - சாதாரி   (திருநெல்வெண்ணெய் வெண்ணையப்பர் நீலமலர்க்கண்ணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w_RuIZ-JSkI
3.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திடம் மலி மதில் அணி
பண் - சாதாரி   (திருச்சிறுகுடி மங்களேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Emrl3TJoXQk
3.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெண்மதி தவழ் மதில் மிழலை
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=ESvC5R47XnA
3.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முரசு அதிர்ந்து எழுதரு முது
பண் - சாதாரி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KOzdh6lDz2c
3.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,
பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CmlGlatKBQ4
3.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரிதரு மா மணி நாகம்
பண் - சாதாரி   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
Audio: https://www.youtube.com/watch?v=00rDmeArPjg
4.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு
பண் - சாதாரி   (பொது - திருஅங்கமாலை )
Audio: https://www.youtube.com/watch?v=YNtyl_vCMWI
Audio: https://sivaya.org/audio/4.009 தலையே, நீ வணங்காய்.mp3

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.067   சுரர் உலகு, நரர்கள் பயில்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார். இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் சீர்காழி நகரின் ஒரு பெயர் வந்த வரலாற்றினை கூறுவதால், வழிமொழிப் பதிகம் என பெயர் வந்தது. பாடல்களிலும் முன்பகுதியில் இறைவனது சிறப்பும் பின்பகுதியில் அந்த பெயர் வந்ததற்கான விரிவான தலபுராண வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளன. தலத்தின் பன்னிரண்டு பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல் எனினும், வழக்கமாக தான் குறிப்பிடும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்களை பற்றிய குறிப்பு மற்றும் பதிகத்தை ஓதுவதால் கிடைக்கும் பலங்கள் ஆகியவையும் இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றன. வேகமான சந்தமுடைய பாடல்கள் என்பதால் முடுகு விராகம் என்று இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. சீர்காழியின் இந்த பன்னிரண்டு பெயர்களும் மந்திரம் என்பதால் இந்த பெயர்களை இந்த பதிகத்தில் கொடுத்துள்ள வரிசைப் படியே சொல்ல வேண்டும்.
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்-
புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய
பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால்,
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே.

[1]
தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும் அளவில்,
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி-சேண் அமரர்கோன்
வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு
வேணுபுரமே.

[2]
பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரண
அகவு முனிவர்க்கு
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய
பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள, நிகர் இல் இமையோர்
புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு புகலிநகரே.

[3]
அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில் தங்கும் இதழித்
துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி
புலன்கள் களைவோர்
வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே.

[4]
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர்
பாணமழை சேர்
தூணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன்
பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே.

[5]
நிராமய! பராபர! புராதன! பராவு சிவ! ராக! அருள்! என்று,
இராவும் எதிராயது பராய் நினை புராணன், அமராதி பதி ஆம்
அராமிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வா-
தராயனை விராய் எரி பராய், மிகு தராய் மொழி விராய பதியே.

[6]
அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம் மலி படைக்
கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள் கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம் அரிய, அச்
சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம் அதே.

[7]
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி விரல், மா-
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும் இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள, முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு புறவம் அதுவே.

[8]
விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண்
படை கொள் மால்,
கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண் படர, அச்
சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை சண்பை நகரே.

[9]
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர், உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை
தாழும் இடம் ஆம்
கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு
வாழ, அரனுக்கு
ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி
நகரே.

[10]
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால்
மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்
கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை
கொச்சைநகரே.

[11]
ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு
வழியை நினையா,
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு, கெழுவு சிவனைத்
தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும்
உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி
மொழிகள் மொழி தகையவே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.068   வாள வரி கோள புலி  
பண் - சாதாரி   (திருத்தலம் திருக்கயிலாயம் ; (திருத்தலம் அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி )
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.

[1]
புற்று அரவு பற்றிய கை, நெற்றியது மற்று ஒரு கண், ஒற்றை
விடையன்,
செற்றது எயில், உற்றது உமை, அற்றவர்கள் நல்-துணைவன், உற்ற நகர்தான்-
சுற்றும் மணி பெற்றது ஒளி; செற்றமொடு குற்றம் இலது;
எற்று? என வினாய்,
கற்றவர்கள் சொல்-தொகையின் முற்றும் ஒளி பெற்ற
கயிலாயமலையே.

[2]
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை
கொங்குமலர் தூய்,
எங்கள் வினை, சங்கை அவை, இங்கு அகல! அங்கம்
மொழி எங்கும் உள ஆய்,
திங்கள் இருள் நொங்க, ஒளி விங்கி, மிளிர் தொங்கலொடு தங்க, அயலே
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு
கயிலாயமலையே.

[3]
முடிய சடை, பிடியது ஒரு வடிய மழு உடையர், செடி உடைய தலையில்
வெடிய வினை கொடியர் கெட, இடு சில்பலி நொடிய மகிழ்
அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர,
கடிய குரல் நெடிய முகில் மடிய, அதர் அடி கொள்
கயிலாயமலையே.

[4]
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ, விடம் கிளர் படம் கொள் அரவம்
மடங்கு ஒளி படர்ந்திட, நடம் தரு விடங்கனது இடம் தண்முகில் போய்த்
தடங்கடல் தொடர்ந்து, உடன் நுடங்குவ இடம் கொள
மிடைந்த குரலால்,
கடுங் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு
கயிலாயமலையே.

[5]
ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத விகிர்தன்,
கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்-
தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய,
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது
கயிலாயமலையே.

[6]
சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி, உடனே-
நின்று, அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்-
துன்று மலர் பொன்திகழ் செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ,
கன்று, பிடி, துன்று களிறு, என்று இவை முன் நின்ற
கயிலாயமலையே.

[7]
மருப்பு இடை நெருப்பு எழு தருக்கொடு செருச் செய்த பருத்த களிறின்
பொருப்பு இடை விருப்பு உற இருக்கையை ஒருக்கு உடன்
அரக்கன் உணராது,
ஒருத்தியை வெருக்கு உற வெருட்டலும், நெருக்கு என நிருத்த விரலால்,
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே.

[8]
பரிய திரை பெரிய புனல், வரிய புலி உரி அது உடை, பரிசை உடையன்,
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர், பிரிவு இல் நகர்தான்-
பெரிய எரி உருவம் அது தெரிய, உரு பரிவு தரும் அருமை அதனால்,
கரியவனும், அரிய மறை புரியவனும், மருவு
கயிலாயமலையே.

[9]
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை, துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத
கயிலாயமலையே.

[10]
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி, அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம் எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.069   வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது  
பண் - சாதாரி   (திருத்தலம் திருக்காளத்தி ; (திருத்தலம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி )
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை
தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு
காளத்திமலையே.

[1]
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரி செய்
சதுரர், மதி பொதி சடையர், சங்கரர், விரும்பும் மலைதன்னை வினவில்
எதிர் எதிர வெதிர் பிணைய, எழு பொறிகள் சிதற, எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள், இருள் அகல நிலவு
காளத்திமலையே.

[2]
வல்லை வரு காளியை வகுத்து, வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல்! என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம் ஆய்,
கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.

[3]
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி, சடைமேல்
தூய மதி சூடி, சுடுகாடில் நடம் ஆடி, மலை தன்னை வினவில்
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
காய் கணையினால் இடந்து, ஈசன் அடி கூடு
காளத்திமலையே.

[4]
மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை
மழை போல் அலறக்
கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல் நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து
காளத்திமலையே.

[5]
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற
காளத்திமலையே.

[6]
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்
ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,
கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு
காளத்திமலையே.

[7]
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால்,
பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு
காளத்திமலையே.

[8]
இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை வினவில்
புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு
காளத்திமலையே.

[9]
நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடு போர்வையவரும்,
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி,
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு
காளத்திமலையே.

[10]
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்திமலையை,
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்-
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.070   ஏன எயிறு, ஆடு அரவொடு,  
பண் - சாதாரி   (திருத்தலம் திருமயிலாடுதுறை ; (திருத்தலம் அருள்தரு அஞ்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாயூரநாதர் திருவடிகள் போற்றி )
ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை
பூண்டு, இளைஞராய்,
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி
எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு
ஆர்
வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும்
மயிலாடுதுறையே.

[1]
அம் தண்மதி செஞ்சடையர், அம் கண் எழில் கொன்றையொடு
அணிந்து, அழகர் ஆம்
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது, வேண்டில், எழில் ஆர் பதி அது ஆம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்
வந்த திரை உந்தி, எதிர் மந்தி மலர் சிந்தும்
மயிலாடுதுறையே.

[2]
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி, மிகு நோக்கு அரியராய்,
மூளை படு வெண்தலையில் உண்டு, முதுகாடு உறையும்
முதல்வர் இடம் ஆம்
பாளை படு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட, நிரந்து, கமழ் பூ,
வாளை குதிகொள்ள, மடல் விரிய, மணம் நாறும்
மயிலாடுதுறையே.

[3]
ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்
பேதை தடமார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்,
மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே.

[4]
பூ விரி கதுப்பின் மடமங்கையர் அகம்தொறும் நடந்து, பலி தேர்
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம்
காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த, வரிவண்டு கவர
மா விரி மதுக் கிழிய, மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே.

[5]
கடம் திகழ் கருங்களிறு உரித்து, உமையும் அஞ்ச, மிக நோக்கு அரியராய்,
விடம் திகழும் மூ இலை நல்வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம்
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர்வாய்
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும்
மயிலாடுதுறையே.

[6]
அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள் செய்து, அவர்கள் மேல்
எவ்வம் அற, வைகலும் இரங்கி, எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும்
மயிலாடுதுறையே.

[7]
இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபது தோள் நெரிய, விரலால்
விலங்கலில் அடர்த்து, அருள்புரிந்தவர் இருந்த இடம்
வினவுதிர்களேல்
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா,
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே.

[8]
ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்,
அண்டம் உற அங்கி உரு ஆகி, மிக நீண்ட அரனாரது இடம் ஆம்
கெண்டை இரை கொண்டு, கெளிறு ஆர் உடன் இருந்து,
கிளர்வாய் அறுதல் சேர்
வண்டல் மணல் கெண்டி, மடநாரை விளையாடும்
மயிலாடுதுறையே.

[9]
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற, மிக்க திறலோன்
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம்
என்பர் எழில் ஆர்
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை, நிரந்து கமழ்பூ
வண்டு அவை கிளைக்க, மது வந்து ஒழுகு சோலை
மயிலாடுதுறையே.

[10]
நிணம் தரு மயானம், நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்க்-
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு
காதன்மையினால்,
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன்,
மயிலாடுதுறையைப்
புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார், பெறுவர்,
பொன்னுலகமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.071   கோழை மிடறு ஆக, கவி  
பண் - சாதாரி   (திருத்தலம் திருவைகாவூர் ; (திருத்தலம் அருள்தரு வளைக்கைவல்லியம்மை உடனுறை அருள்மிகு வில்லவனேசர் திருவடிகள் போற்றி )
கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி,
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும்
வைகாவிலே.

[1]
அண்டம் உறு மேருவரை, அங்கி கணை, நாண் அரவு அது, ஆக, எழில் ஆர்
விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன்(ன்) அவன் விரும்பும் இடம் ஆம்
புண்டரிகம் மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம்
வண்டின் இசை பாட, அழகு ஆர் குயில் மிழற்று பொழில்
வைகாவிலே.

[2]
ஊனம் இலர் ஆகி, உயர் நல்-தவம் மெய் கற்று, அவை உணர்ந்த அடியார்
ஞானம் மிக நின்று தொழ, நாளும் அருள் செய்ய வல நாதன் இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே, பொழில்கள் தோறும், அழகு ஆர்
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே.

[3]
இன்ன உரு, இன்ன நிறம், என்று அறிவதேல் அரிது; நீதிபலவும்
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு இடம்
முன்னை வினை போம் வகையினால், முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்
மன்ன, இருபோதும் மருவித் தொழுது சேரும், வயல் வைகாவிலே.

[4]
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுத்து, விதி ஆறு சமயம்
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ, நின்று அருள்செய்
ஒருவன் இடம் ஆம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால்,
மாதவி மணம் கமழ, வண்டுபல பாடு பொழில் வைகாவிலே.

[5]
நஞ்சு அமுது செய்த மணிகண்டன், நமை ஆள் உடைய ஞான முதல்வன்,
செஞ்சடை இடைப் புனல் கரந்த சிவலோகன், அமர்கின்ற இடம் ஆம்
அம் சுடரொடு, ஆறுபதம், ஏழின் இசை, எண் அரிய வண்ணம் உள ஆய்,
மஞ்சரொடு மாதர்பலரும் தொழுது சேரும், வயல்
வைகாவிலே.

[6]
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர், வல்ல வகையால்,
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்
நீளி வளர் சோலைதொறும் நாளிபல துன்று கனி நின்றது உதிர,
வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே.

[7]
கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை எடுத்த கடியோன்
ஐ-இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம் ஆம்
கையின் மலர் கொண்டு, நல காலையொடு மாலை, கருதி, பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும், எழில் வைகாவிலே.

[8]
அந்தம் முதல்-ஆதி பெருமான் அமரர்கோனை, அயன் மாலும் இவர்கள்
எந்தைபெருமான்! இறைவன்! என்று தொழ, நின்று
அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தை செய்து பாடும் அடியார், பொடி மெய் பூசி எழு
தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர், முந்தி அணையும் பதி நல்
வைகாவிலே.

[9]
ஈசன், எமை ஆள் உடைய எந்தை பெருமான், இறைவன் என்று தனையே
பேசுதல் செயா அமணர், புத்தர் அவர், சித்தம் அணையா அவன் இடம்
தேசம் அது எலாம் மருவி நின்று பரவித் திகழ நின்ற புகழோன்,
வாசமலர் ஆன பல தூவி, அணையும் பதி நல்
வைகாவிலே.

[10]
முற்றும் நமை ஆள் உடைய முக்கண் முதல்வன் திரு
வைகாவில் அதனை,
செற்ற மலின் ஆர் சிரபுரத் தலைவன்-ஞானசம்பந்தன் - உரைசெய்
உற்ற தமிழ் மாலை ஈர்-ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் எனப்-
பெற்று, அமரலோகம் மிக வாழ்வர்; பிரியார், அவர் பெரும் புகழொடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.072   விங்கு விளை கழனி, மிகு  
பண் - சாதாரி   (திருத்தலம் திருமாகறல் ; (திருத்தலம் அருள்தரு புவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு அடைக்கலங்காத்தநாதர் திருவடிகள் போற்றி )

எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.

[1]
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்-
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.

[2]
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்-
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்
பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.

[3]
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்-
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!

[4]
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்-
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே

[5]
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.

[6]
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர்
கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.

[7]
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர்
பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.

[8]
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்-
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.

[9]
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்-
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.

[10]
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள்
ஒல்கும், உடனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.073   பாடல் மறை, சூடல் மதி,  
பண் - சாதாரி   (திருத்தலம் திருப்பட்டீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு பல்வளைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பட்டீச்சரநாதர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.
திருத்தல பயணங்கள் இனிதே சிரமங்கள் இன்றி நடக்க
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.

[1]
நீரின் மலி புன்சடையர்; நீள் அரவு, கச்சை அது; நச்சு
இலையது ஓர்
கூரின் மலி சூலம் அது ஏந்தி; உடை கோவணமும், மானின் உரி-தோல்;
காரின் மலி கொன்றை விரிதார் கடவுள்; காதல் செய்து மேய நகர்தான்,
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம்; ஏத்த, வினை பற்று அழியுமே.

[2]
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை, கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்ப்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால்கடல்கள் போல் பெருகி, விண்ணுலகம்
ஆளுமவரே.

[3]
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப, முகம் ஏத்து கமழ்
செஞ்சடையினான்,
பண்ணின்மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்,
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது
மேவல் எளிதே.

[4]
மருவ முழவு அதிர, மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க, வரை ஆர்
பருவ மழை பண் கவர் செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்;
வெருவ மதயானை உரி போர்த்து, உமையை அஞ்ச வரு
வெள்விடையினான்;
உருவம் எரி; கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா, வினைகளே

[5]
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி, விரவு ஆர்
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு, மருவியது ஒர் சடையின் இடை, ஏற்ற புனல்,
தோற்றம் நிலை ஆம்-
இறைவன் அடி முறை முறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள்
இல்லர், மிகவே.

[6]
பிறவி, பிணி, மூப்பினொடு நீங்கி, இமையோர் உலகு பேணல் உறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள், கொடி வீதி அழகு ஆய தொகு சீர்
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள், வினை ஏதும் இல ஆய்,
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே.

[7]
நேசம் மிகு தோள் வலவன் ஆகி, இறைவன் மலையை நீக்கியிடலும்,
நீசன் விறல் வாட்டி, வரை உற்றது உணராத, நிரம்பா மதியினான்,
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இல ஆய்
நாசம் அற வேண்டுதலின், நண்ணல் எளிது ஆம், அமரர்
விண்ணுலகமே.

[8]
தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்; நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள் மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல் உலகமே.

[9]
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
கடுப்பொடி, உடல் கவசர், கத்து மொழி காதல் செய்திடாது, கமழ் சேர்
மடைக் கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த, வினை பற்று அறுதலே.

[10]
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை,
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை
நிற்பது இலவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.074   காடு பயில் வீடு, முடை  
பண் - சாதாரி   (திருத்தலம் திருத்தேவூர் ; (திருத்தலம் அருள்தரு தேன்மொழியம்மை உடனுறை அருள்மிகு தேவகுருநாதர் திருவடிகள் போற்றி )
காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல்,
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்-
நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே.

[1]
கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எருக்கு, வனி, கொக்கு இறகொடும்,
வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன் ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம்
விரைக்கும் மணம் ஆர்
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு
தேவூர் அதுவே.

[2]
பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை ஆளும் இறைவன்,
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன், இனிது இருந்த இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி, விரை ஆர்
செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே.

[3]
மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை இமையோர்
ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்-
வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை மொழியும்
தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர் அதுவே.

[4]
கானம் உறு மான் மறியன்; ஆனை உரி போர்வை; கனல் ஆடல் புரிவோன்;
ஏன எயிறு, ஆமை, இள நாகம், வளர் மார்பின் இமையோர் தலைவன்; ஊர்
வான் அணவு சூதம், இள வாழை, மகிழ், மாதவி, பலா, நிலவி, வார்
தேன் அமுது உண்டு, வரிவண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே.

[5]
ஆறினொடு கீறுமதி ஏறு சடை, ஏறன்; அடையார் நகர்கள் தான்,
சீறுமவை, வேறுபட நீறு செய்த நீறன்; நமை ஆளும் அரன்; ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி, வளர்வு ஆய விளைகின்ற கழனிச்
சேறு படு செங்கயல் விளிப்ப, இள வாளை வரு தேவூர் அதுவே.

[6]
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று நகைசெய்
என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப நகர்தான்-
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக் குருளைகள்
சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளையாடி, வளர் தேவூர் அதுவே.

[7]
ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள் நெரிய,
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம்,
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே.

[8]
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு, சுண்ணம் மலி வண்ணம் மலர்மேல்
நண் அவனும், எண் அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம்
கொள் பதிதான்-
வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை, இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே.

[9]
பொச்சம் அமர் பிச்சை பயில் அச் சமணும், எச்சம் அறு
போதியரும், ஆம்
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன், மிகு நச்சு அரவன், மொச்ச நகர்தான்-
மைச் சில் முகில் வைச்ச பொழில்...

[10]
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர்
செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன்-அமர் தேவூர் அதன்மேல்,
பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன், உரைசெய்
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கை இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.075   எம் தமது சிந்தை பிரியாத  
பண் - சாதாரி   (திருத்தலம் திருச்சண்பைநகர் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.

[1]
அங்கம் விரி துத்தி அரவு, ஆமை, விரவு ஆரம் அமர்
மார்பில் அழகன்,
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது, பயில்கின்ற பதிதான்-
பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத்திரள் பொலிந்த அயலே,
சங்கு புரி இப்பி தரளத்திரள் பிறங்கு ஒளி கொள்
சண்பைநகரே.

[2]
போழும் மதி, தாழும் நதி, பொங்கு அரவு, தங்கு புரி
புன்சடையினன்,
யாழ் இன்மொழி, மாழைவிழி, ஏழை இளமாதினொடு இருந்த பதிதான்-
வாழை, வளர் ஞாழல், மகிழ், மன்னு புனை, துன்னு பொழில் மாடு, மடல் ஆர்
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என, உந்து தகு சண்பைநகரே.

[3]
கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி, குலவும்
பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு பதிதான்-
வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பைநகரே.

[4]
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி, பகவன்,
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர் புறவு எலாம்,
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர்
சண்பைநகரே.

[5]
பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்,
ஆலும் மயில் போல் இயலி ஆயிழைதனோடும், அமர்வு
எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டு இசைசெய,
சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர்
சண்பைநகரே.

[6]
விண் பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவுதான் மிக உடை
மண் பொய் அதனால் வளம் இலாதொழியினும், தமது வண்மை வழுவார்
உண்ப கரவார், உலகின் ஊழி பலதோறும் நிலை ஆன பதிதான்-
சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடியார் தமது தன்மை அதுவே.

[7]
வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த, மதி இல், வலி உடை
அரக்கனது உரக் கரசிரத்து உற அடர்த்து, அருள்புரிந்த அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்,
தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன
சண்பைநகரே.

[8]
நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம், ஆம்
மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்,
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில்,
சண்பைநகரே.

[9]
போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு, பலபொய்
ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது
உணர்வீர்! உரைமினோ
ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த பதிதான்,
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பைநகரே!

[10]
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல்,
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.076   கல் பொலி சுரத்தின் எரி  
பண் - சாதாரி   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும் வேதவனமே.

[1]
பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு, அரவினைக்
கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு
தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே.

[2]
கார் இயல் மெல் ஓதி நதிமாதை முடி வார் சடையில் வைத்து, மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடுமாடம் மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம், ஒண் படகம், நாளும் இசையால்,
வேரி மலி வார்குழல் நல் மாதர் இசை பாடல், ஒலி
வேதவனமே.

[3]
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி, வந்து, இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன்தமிழ் இயல் கிளவி தேரும் மடமாதர் உடன் ஆர்
வேறு திசை ஆடவர்கள் கூற, இசை தேரும் எழில்
வேதவனமே.

[4]
கத்திரிகை, துத்திரி, கறங்கு துடி, தக்கையொடு, இடக்கை, படகம்,
எத்தனை உலப்பு இல் கருவித்திரள் அலம்ப, இமையோர்கள் பரச,
ஒத்து அற மிதித்து, நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில்
மெய்த் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே.

[5]
மாலை மதி, வாள் அரவு, கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல,
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க, அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டி, இனவண்டு, மது உண்டு இசைசெய;
வேலை ஒலிசங்கு, திரை, வங்க சுறவம், கொணரும்
வேதவனமே.

[6]
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
அஞ்சு அகம் அவித்த அமரர்க்கு அமரன், ஆதி பெருமானது இடம் ஆம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில,
விஞ்சு அக இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை வேதவனமே.

[7]
முடித் தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை
நெருக்கி விரலால்,
அடித்தலம் முன் வைத்து, அலமர, கருணை வைத்தவன் இடம் பலதுயர்
கெடுத்தலை நினைத்து, அறம் இயற்றுதல் கிளர்ந்து, புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து, நிதி நல்குமவர் மல்கு பதிவேதவனமே.

[8]
வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத, நெறியைக்
கூசுதல் செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத, அரன் ஊர்
காசு, மணி, வார் கனகம், நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்
வீசு வலைவாணர் அவை வாரி, விலை பேசும் எழில்
வேதவனமே.

[9]
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி,
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன் அருளினால்,
சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல் உலகில்,
பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள், உயர்
வான் உலகமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.077   பொன் இயல் பொருப்பு அரையன்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருமாணிகுழி ; (திருத்தலம் அருள்தரு மாணிக்கவல்லியம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கமேனியீசுவரர் திருவடிகள் போற்றி )
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல் தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம்
கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி
மாணிகுழியே.

[1]
சோதி மிகு நீறு அது மெய் பூசி, ஒரு தோல் உடை புனைந்து, தெருவே
மாதர் மனைதோறும் இசை பாடி, வசி பேசும் அரனார் மகிழ்வு இடம்
தாது மலி தாமரை மணம் கமழ, வண்டு முரல் தண் பழனம் மிக்கு
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி
மாணிகுழியே.

[2]
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ, சினம் உடைக்
கம்ப மதயானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ, மணி மாடம் அது நீடி, அழகு ஆர்
உம்பரவர்கோன் நகரம் என்ன, மிக மன் உதவி மாணிகுழியே.

[3]
நித்தம் நியமத் தொழிலன் ஆகி, நெடுமால் குறளன் ஆகி, மிகவும்
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்
கொத்து அலர் மலர்ப்பொழிலில் நீடு குலமஞ்ஞை நடம்
ஆடல் அது கண்டு
ஒத்த வரிவண்டுகள் உலாவி, இசை பாடு உதவி
மாணிகுழியே.

[4]
மாசு இல் மதி சூடு சடை மா முடியர், வல் அசுரர் தொல்-நகரம் முன்
நாசம் அது செய்து, நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
வாசம் மலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி, அழகு ஆர்
ஊசல் மிசை ஏறி, இனிது ஆக, இசை பாடு உதவி மாணிகுழியே.

[5]
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனம் ஆய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதை செய்த மணிகண்டன் இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து, தட மா மலர்கள் கொண்டு, கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே.

[6]
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய, இறையே கருணை ஆய்,
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு, உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்
பண் பயிலும் வண்டுபல கெண்டி, மது உண்டு, நிறை பைம்பொழிலின் வாய்,
ஒண் பலவின் இன்கனி சொரிந்து, மணம் நாறு உதவி
மாணிகுழியே.

[7]
எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்த திறல் ஆர்
திண்ணிய அரக்கனை நெரித்து, அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார், பணைமுலைப் பவளவாய் அழகு அது ஆர்
ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவி
மாணிகுழியே.

[8]
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து, முடிமேல்
ஏடு உலவு திங்கள், மதமத்தம், இதழிச் சடை எம் ஈசன் இடம் ஆம்
மாடு உலவு மல்லிகை, குருந்து, கொடிமாதவி, செருந்தி, குரவின்
ஊடு உலவு புன்னை, விரி தாது மலி சேர் உதவி
மாணிகுழியே.

[9]
மொட்டை அமண் ஆதர், முது தேரர், மதி இ(ல்)லிகள் முயன்றன படும்
முட்டைகள் மொழிந்த மொழி கொண்டு அருள் செய்யாத
முதல்வன் தன் இடம் ஆம்
மட்டை மலி தாழை இளநீர் முதிய வாழையில் விழுந்த அதரில்,
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர, ஏறு உதவி
மாணிகுழியே.

[10]
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழிமேல்,
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்-
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான நிலனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.078   நீறு, வரி ஆடு அரவொடு,  
பண் - சாதாரி   (திருத்தலம் திருவேதிகுடி ; (திருத்தலம் அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி )

கணவன்‌ மனைவி ஒற்றுமையுடன்‌ வாழ ஓத வேண்டிய பதிகம்‌ ‌
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.

[1]
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத்
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே.

[2]
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர்
சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல்
வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே.

[3]
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்-
தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்-
பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே.

[4]
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்-
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம்,
மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே.

[5]
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.

[6]
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித்
துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக,
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.

[7]
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.

[8]
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய்,
தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்,
மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.

[9]
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால்,
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே.

[10]
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்-
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே
சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.079   என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருகோகர்ணம் (கோகர்ணா) ; (திருத்தலம் அருள்தரு கோகரணநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாபலநாதர் திருவடிகள் போற்றி )
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.

[1]
பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி, அமரர்
வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி, நிறை மா மலர்கள் தூய்,
கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர்
கோகரணமே.

[2]
முறைத் திறம் உறப் பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி, ஆல நிழல்வாய்,
மறைத் திறம் அறத்தொகுதி கண்டு, சமயங்களை வகுத்தவன் இடம்
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து, வரை உந்தி, மதகைக்
குறைத்து, அறையிடக் கரி புரிந்து, இடறு சாரல் மலி கோகரணமே.

[3]
இலைத் தலை மிகுத்த படை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல்
அலைத் தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன்
தன் இடம் ஆம்
மலைத்தலை வகுத்த முழைதோறும், உழை, வாள் அரிகள்,
கேழல், களிறு,
கொலைத்தலை மடப்பிடிகள், கூடி விளையாடி நிகழ்
கோகரணமே.

[4]
தொடைத்தலை மலைத்து, இதழி, துன்னிய எருக்கு, அலரி,
வன்னி, முடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன்; எம் ஆதி; பயில்கின்ற பதி ஆம்
படைத் தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமி,
குடைத்து அலை நதிப் படிய நின்று, பழி தீர நல்கு
கோகரணமே.

[5]
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய,
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்
கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு,
கோகரணமே.

[6]
கல்லவடம், மொந்தை, குழல், தாளம், மலி கொக்கரையர்;
அக்கு அரைமிசை
பல்ல பட நாகம் விரி கோவணவர்; ஆளும் நகர் என்பர் அயலே
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக,
கொல்ல விட நோய் அகல்தர, புகல் கொடுத்து அருளு கோகரணமே.

[7]
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற,
விரல்-தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி, வினை தீர, அதன்மேல்
குரைத்து அலை கழல் பணிய, ஓமம் விலகும் புகை செய் கோகரணமே.

[8]
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும்,
வேதமுதலோன்,
இல்லை உளது என்று இகலி நேட, எரி ஆகி, உயர்கின்ற பரன் ஊர்
எல்லை இல் வரைத்த கடல்வட்டமும் இறைஞ்சி நிறை, வாசம் உருவக்
கொல்லையில் இருங் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர்,
கோகரணமே.

[9]
நேசம் இல் மனச் சமணர், தேரர்கள், நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து
ஆசை கொள் மனத்தை அடியார் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம்
பாசம் அது அறுத்து, அவனியில் பெயர்கள் பத்து உடைய
மன்னன் அவனை,
கூச வகை கண்டு, பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே.

[10]
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர்
கோகரணமே
ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்-
நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய்
ஞானசம்பந்தன்-மொழிகள்
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.080   சீர் மருவு தேசினொடு தேசம்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.

[1]
பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு பொழில்வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள் வீழிநகரே.

[2]
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்
உயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட, மடமஞ்ஞை நடம் ஆட, அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே.

[3]
செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்-தண்புனல் வளம் பெருகவே,
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே.

[4]
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே.

[5]
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
வீழிநகரே.

[6]
மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.

[7]
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க, அணி ஆழிவிரலால்,
ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே.

[8]
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே.

[9]
குண்டு அமணர் ஆகி, ஒரு கோலம் மிகு பீலியொடு
குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர்; அது
என்ன பொருள் ஆம்?
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீா
வெண்தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே.

[10]
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு அவரதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.081   சங்கு அமரும் முன்கை மட  
பண் - சாதாரி   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு தோணியப்பர் திருவடிகள் போற்றி )
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.

[1]
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் அது, இயம்ப,
கல் அரிய மாமலையர் பாவை ஒருபாகம் நிலைசெய்து,
அல் எரி கை ஏந்தி, நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்ல(அ)ரிய தொண்டர் துதிசெய்ய, வளர் தோணிபுரம் ஆமே.

[2]
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்; ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.

[3]
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும் மாலை
ஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
வில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய்
தோணிபுரம் ஆமே.

[4]
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்;
நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.

[5]
பற்றலர் தம் முப்புரம் எரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம் அது ஒழித்து, அருளு கொள்கையினன்; வெள்ளில் முதுகானில்
பற்றவன்; இசைக்கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன்; உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே.

[6]
பண் அமரும் நால்மறையர், நூல் முறை பயின்ற திருமார்பில்
பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான், ஊர்
துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆ.மே.

[7]
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
ஒன்று இசை இயல் கிளவி பாட, மயில் ஆட, வளர் சோலை
துன்று செய வண்டு, மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே.
[8]
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி,
ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத்
தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.

[9]
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெடுத்து, அடைவினான், அக்
காடு பதி ஆக நடம் ஆடி, மடமாதொடு இரு காதில்-
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.

[10]
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை,
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம்
வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.082   கொம்பு இரிய வண்டு உலவு  
பண் - சாதாரி   (திருத்தலம் திருஅவளிவணல்லூர் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சாட்சிநாயகர் திருவடிகள் போற்றி )
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

[1]
ஓமையன, கள்ளியன, வாகையன, கூகை முரல் ஓசை,
ஈமம் எரி, சூழ் சுடலை வாசம்; முதுகாடு நடம் ஆடி;
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி, மிக்கு ஒளி துளங்க,
ஆமையொடு பூணும் அடிகள்(ள்); உறைவது
அவளிவணலூரே.

[2]
நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்
ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.

[3]
பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர் என்று உலகு பேணிப்
பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,
துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல் தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது
அவளிவணலூரே.

[4]
குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே.

[5]
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்து
நஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்;
மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி,
அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே.

[6]
கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவினோடும் இசை செய்ய,
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,
காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம் ஆடி,
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது
அவளிவணலூரே.

[7]
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன், இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ? என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே.

[8]
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும்,
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர்மேல் விழுமியோனும்,
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று, சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே.

[9]
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்,
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

[10]
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-
ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-
தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.083   வண்டு இரிய விண்ட மலர்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி,
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம்
தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.

[1]
பல் வளரும் நாகம் அரை யாத்து, வரைமங்கை ஒருபாகம்
மல் வளர் புயத்தில் அணைவித்து, மகிழும் பரமன் இடம் ஆம்
சொல் வளர் இசைக்கிளவி பாடி மடவார் நடம் அது ஆட,
செல்வ மறையோர்கள் முறை ஏத்த, வளரும் திரு நலூரே.

[2]
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால்
கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.

[3]
கருகு புரி மிடறர், கரிகாடர், எரி கை அதனில் ஏந்தி,
அருகு வரு கரியின் உரி-அதளர், பட அரவர், இடம் வினவில்
முருகு விரி பொழிலின் மணம் நாற, மயில் ஆல, மரம் ஏறித்
திருகு சின மந்தி கனி சிந்த, மது வார் திரு நலூரே.

[4]
பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு தங்கும்
முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம் ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ மல்க,
செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே.

[5]
புற்று அரவர்; நெற்றி ஒர் கண்; ஒற்றை விடை ஊர்வர்; அடையாளம்
சுற்றம் இருள் பற்றிய பல்பூதம் இசை பாட, நசையாலே
கற்ற மறை உற்று உணர்வர்; பற்றலர்கள் முற்றும் எயில் மாளச்
செற்றவர்; இருப்பு இடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே.

[6]
பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு பிச்சை,
தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்;
கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம் வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே.

[7]
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில்
சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச்
சேறு கமர் ஆன அழியத் திகழ்தரும் திரு நலூரே.

[8]
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய
கோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும்
நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே.

[9]
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர்
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள், வேடம் அவை பாரேல்!
ஏறு மடவாளொடு இனிது ஏறி, முன் இருந்த இடம் என்பர்
தேறும் மன வாரம் உடையார் குடி செயும் திரு நலூரே.

[10]
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல்
பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்-
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய்,
விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு
பெறுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.084   பெண் இயல் உருவினர், பெருகிய  
பண் - சாதாரி   (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.

[1]
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.

[2]
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.

[3]
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.

[4]
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.

[5]
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.

[6]
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.

[7]
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.

[8]
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.

[9]
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!

[10]
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.085   மட்டு ஒளி விரிதரு மலர்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.

[1]
எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில் மொழி, இளமுலைப்
பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;
கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே.

[2]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list